இன்றைய காலக் கட்டத்தில் உடை என்பது நிர்வாணம் மறைக்கவும், உடலைக் காக்கவும் என்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்துக் கொண்டு, உடை என்பது நமது சுயத்தின் அங்கமாக மாறிவிட்டது. உடை என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனித்துவத்தை எடுத்துக் காட்டவும் செய்கின்றது.
இன்றைய காலக் கட்டத்தில் உடை என்பது உள்ளத்துக்கும், உடலுக்கும் சுகத்தையும், குதூகலத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ஒரு முதன்மையான சாதனமாக மாறியுள்ளது. இயற்கையைத் துளைத்துக் கொண்டு செயற்கையைத் தம் மேல் திணிக்க மனிதன் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதம் உடை என்பதில் சந்தேகமில்லை. இருந்த போதும் சமூகப் பரிணாம வளர்ச்சியில் உடை என்பது பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றமடைந்துள்ளதையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
உடை என்பது நிலையான ஒன்றல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளில் நிர்வாணமாகச் சுற்றியலைந்த காலம் தொட்டு இன்று வரை உடுப்புக்கள் மாறிக் கொண்டே வந்துள்ளது. உடையின் பரிணாமம் என்பது உலகின் ஒவ்வொரு பகுதிகளில் அந்தந்த மண்ணில் வாழும் மக்களின் தேவை, தட்பவெட்ப, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள் எனப் பற்பல கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. அதே போல ஒரு இனக் குழு இன்னொரு இனக் குழுவை ஆட்கொள்ளும் போது அவர்கள் மீது உடை சார்ந்த அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப் படும் என்பதையும் வரலாறு நமக்குக் கூறியுள்ளது. உடை என்பது ஒவ்வொரு தனி மனிதனின் வயது, சமூக நிலை, பழக்க வழக்கங்களையும் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. இருந்த போதும் இத்தகைய பாரிய வேறுபாடுகளைக் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி குறைத்தது எனலாம்.
தமிழகத்தை எடுத்துக் கொண்டோம் எனில் இன்றைய நிலையில் நமது ஆடை சரி பாதிக்கு மேல் மேற்கத்திய தாக்கத்தையும், கணிசமான அளவு பாரம்பரிய தமிழ் ஆடைகளின் தாக்கத்தையும், வட நாட்டு உடைகளின் தாக்கத்தையும் பெற்றுள்ளோம். இருந்த போதும் காலனியாதிக்கத்தின் போது நம்மீது திணிக்கப்பட்ட ஆடை முறையும், அதன் பின் எழுந்த மேற்கத்திய கலாச்சார எழுச்சி சார்ந்த ஆடைமுறையுமே சமூகத்தில் பலரால் விரும்பப் படுகின்றது. அவற்றை முற்றாக நீக்கிவிடுவோம் எனப் பழமைவாதம் பேசுவது முட்டாள் தனமே, ஏனெனில் அவை மாற்றப்படுதல் எளிதான ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம்.
என்ன தான் மேற்கத்திய ஆடைகள் இன்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் கூட, ஒவ்வொரு மண் சார்ந்த தட்பவெட்பம் மற்றும் மக்களின் ரசனைக்கு ஏற்ப அவை மாற்றியமைக்கப்பட்டே வருகின்றன. இந்த மாற்றியமைக்கும் பாங்கில் தமிழர்களாகிய நாம் சற்றே அபத்தமான சூழலில் இருக்கின்றோமோ என்ற எண்ணமும் எழுகின்றது. குறிப்பாகத் தமிழ்நாட்டு ஊடகங்களில் சில பிரபலங்கள் அணிந்தவற்றைக் காண நேர்ந்த போது, அவர்களில் தலையில் சற்றுக் கூட மூளை இல்லையோ எனத் தோன்றச் செய்தது.
ஒரு சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன், தமிழில் முன்னணி பாடகர்கள் புதிய பாடகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவரை உற்று நோக்கிய போது இந்தாளுக்கு அறிவே இல்லையோ என்ற எண்ணம் எழுந்தது. பிரபல தமிழ் பாடகர் தேவன் குளிர்ந்த பிரதேசங்களில் கழுத்து வழியாகக் குளிர் வரக் கூடாது என அணியப் படும் கழுத்துக் குட்டையை ( Scarf ) அணிந்திருந்தார். அத்தோடு உள்ளரங்கில் இருக்கும் போது வெயிலைத் தடுக்கும் குளிர் கண்ணாடியும் அணிந்திருந்தார். சரி, ஆடை அணிவது அவரது தனிப்பட்ட உரிமை, அணிவதும், அணியாததும் அவரது விருப்பம். அதே சமயம், இத்தகைய பிரபலங்கள் நாகரிகம் என்ற பெயரில் பகுத்தறிவுக்குத் தொடர்பில்லாமல் ஆடை அணிவதைப் பார்த்துக் கொண்டு நம்மால் சும்மாவும் இருக்க முடியவில்லை. இதே போன்று தான் சன் டிவியில் சன் குடும்பம் என்ற நிகழ்ச்சியில் தீபக்கும் வலம் வந்தார்.
பாடகர் தேவன், தொகுப்பாளர் தீபக் மட்டுமல்ல இந்தியாவின் வெட்ப மண்டலங்களில் வாழும் பலரும் இன்று ஈயடிச்சான் காப்பியாக மேற்கத்திய நாடுகளில் குளிர் காலங்களில் அணியும் ஆடையைச் சுவீகரித்து அணிவது அபத்தத்தில் அபத்தம். முதலில் நம்மவர்களுக்கு நாகரிகம் சார்ந்த பகுத்தறிவும், ஆடையின் தேவைகளை உணரும் தன்மைகளும் வளர வேண்டும் என்பேன். பாடகர் தேவன், தீபக் உட்படக் கடுங்குளிர் ஆடைகளை இந்தியாவின் கடும் வெயிலில் போட்டு வெந்து அலையும் அபலைகளுக்காகச் சில தகவல்களை இங்குப் பகிர விரும்புகின்றேன்.
தட்ப வெட்பத்துக்கு ஏற்ப உடுத்துக்கங்கள் : இந்தியா உட்பட வளாரும் நாடுகளில் இருப்போர் மேற்கத்திய நாடுகளில் உள்ளவற்றை அப்படியே காப்பியடிக்க முன்னர் ஒரு விடயத்தை நன்கு உணர வேண்டும். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் உங்களின் தட்ப வெட்பத்துக்கு அமைய முதலில் ஆடை அணியக் கற்றுக் கொள்ளுக்கங்கள். மேற்கத்திய நாடுகளில் கோட் சூட், கழுத்துக் குட்டை, ஸ்வெட்டர், ஜாக்கட், இறுகிய டி-சட்டைகள், தொப்பி, கண்ணாடி எனப் பற்பல ஆடைகளை அணிவது அழகுக்கு மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அண்மையக் காலத்தில் சென்னை போன்ற கடும் வெப்ப மண்டலப் பகுதிகளில் இளையவர்கள் பலரும் அணியத் தொடங்கியுள்ள ஒரு அபத்த ஆடை FULLOVER எனப்படும் ஒரு ஆடையாகும். இந்தப் புல்லோவர்கள் என்பது கடும் குளிரைத் தடுக்கவும், தலை, காதுகள், கழுத்துக்களுக்குக் குளிர் பிடிக்காமல் இருக்க அணியும் ஒரு முக்கிய ஆடை. இவற்றைக் கோடைக் காலத்தில் யாரும் இங்கு அணிவதில்லை.
அதே போலப் பாடகர் தேவன் போன்றோர் உணர வேண்டும் கழுத்துக் குட்டைகள் என்பது கடும் குளிர் காலங்களில் கழுத்து வழியாகக் குளிர் காற்று நுழையாமல் இருக்கவும், ஜாக்கட்கள் போன்றவை தரும் வெப்பம் வெளியேறாமல் இருக்கவும் அணியும் ஒரு ஆடை. இதனைக் கோடைக் காலத்தில் கழுத்தைச் சுற்றி அணிந்தால் போதிய காற்று உள்ளே நுழையாமல் அதிகமாக வியர்க்கும், அதிக வியர்வைகள் பல்வேறு தோல் வியாதிகளையும், அசுகங்களையும் ஏற்படுத்தி விடும்.
குளிர் கண்ணாடிகள் என்பது அதிக வெயில் கண்ணைக் கூச செய்யும், அல்லது கண் பார்வையை மழுங்கச் செய்யும் என்பதால் கருப்புக் கண்ணாடிகளை அணிவது வழக்கம். இவற்றை உள்ளரங்குகளில், வீடுகளுக்குள், வெயில் இல்லாத இடங்களில் அணிய வேண்டியதில்லை. ஒருவேளை கண் கோளாறுகள், தொற்று நோய்கள் இருந்தால் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள். இதே போலத் தான் தமிழகத்தில் கழுத்துப் பட்டிகள் (TIE), கோட்டுகள் போன்றவற்றைப் பள்ளிகளிலேயே கட்டாயபடுத்தி அணியச் செய்வது நரக வேதனை.
இவ்வாறு பல ஆடைகளை மேற்கின் குளிர்ந்த பிரதேசங்களில் இருந்து எடுத்துக் கோடைக் காலங்களில், வெயில் மண்டலங்களில் அணிவது முட்டாள் தனத்தின் உச்சம் என்பதைச் சற்றே நினைவில் நிறுத்துங்கள். மேற்கத்திய ஆடைகளை அணிய விரும்புவோர்கள் அங்கு அணியப்படும் கோடை கால உடைகளை அணிய முற்படலாம். அல்லது வெயில் பிரதேசங்களைக் கொண்ட ஸ்பைன், இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உடைகளை ஆலோசித்து அணியக் கற்றுக் கொள்ளுங்கள். கோடைக் கால ஆடைகள் என்பது வெயிலில் இருந்து நம் தேகத்தை மறைக்கவும், அதே சமயம் காற்றோட்டமாக உள்ள ஆடைகளையும் அணிவதாக இருக்க வேண்டும். ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது ஒருவரின் உடல் அளவு, நிறத் தோற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதே போலக் காலுறைகள், கைக்குட்டைகள், உள்ளாடைகள் என்பவற்றை நல்ல முறையில் துவைத்துச் சுகாதாரமாகப் போட கற்றுக் கொள்ளுங்கள். பலரும் காலணிகளைச் சுத்தம் செய்வதில்லை, காலுறைகள் நாற்றமடிக்கும், கைக்குட்டைகள் அழுக்காக இருக்கும். ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே அது முற்றிலும் உண்மை, உங்களின் ஆடை அழகாகவும், வசதியாகவும், சுகாதாரமாகவும் இருப்பது உங்களின் மதிப்பையும், தரத்தையும் நிர்ணயிக்கும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

வணக்கம் சகோ,
ReplyDeleteவாழும் சூழலுக்கு ஏற்ற உடை. இதில் எதையோ பார்த்து அதே போல் செய்வது தேவையற்ற நகைச்சுவையே.
உணவோடு உடை, உறைவிடப்பிரச்சினையும் உள்ள கோடிக்கணகான மக்களும் உண்டு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ,
நாம் அறிவும் ,திறமையும் கொண்டவர் , கடவுள் நாடி நமக்கு நல்ல வாழ்வினைத் தந்து இருக்கிறார் அனுபவி இராஜ அனுபவி என்னும் மக்களின் பிரச்சினையே நவ நாகரிக உடைகள் தேர்வு!!
நன்றி!!
பிரபலங்களுக்குள் இதெல்லாம் சகஜம் இக்பால். தம்மை தனித்துக்காட்ட வேறு வழி இல்லாமையால் இப்படிச் சில யுக்திகள்.. விடுங்கள், அங்கே பொது மேடையில் தோன்றும் பெண்களின் கலாச்சார உடை புடவை ரவிக்கை அணியும் பாணி பலவிதமாக மாறிப்போய் கண்களைப் பறிக்கும் பட்சத்தில் ஆண்களின் உடையலங்காரம் குறைசொல்வதற்கில்லை.
ReplyDeleteஇங்கே எங்களின் ஊரில் இன்னும் அதிகமான கூத்துகள். ஆண்கள் சிலர் பெண்கள் போல் பாவனை செய்துகொண்டு நளினமாகப் பேசி, குலாய்ந்து பிரபலமடைய முயற்சி செய்கிறார்கள். உடையலங்காரத்தை விட இது இன்னும் கேவலம் போங்க, சகிக்காது ஆனால் அவர்களுக்கு முகநூலில் ஐம்பதாயிரம் ஃபோல்லோவர்கள். (என்னைத்தவிர) :P
நடுவராக இருக்கும் தகுதி தேவனுக்கு இல்லை. நிறையத்தவறு விடுகிறார்.
ReplyDeleteஇவங்க தொல்லை தாங்க முடியல்ல. தமிழ்பட கதாநாயகன் தமிழகத்தில் கடும் வெயிலில் jacket -overcoat அணிந்து கொண்டு நின்று சண்டை பிடிப்பார்,கதாநாயகியுடன்காதல் பாட்டு பாடுவார். வெள்ளை இனத்தவர்கள் எப்படா வெயில் வரும் ரிசேட்டுடன் திரியலாம் என்று காத்திருப்பார்கள். திராவிட கட்சியினர் உட்பட பலர் கருப்புக் கண்ணாடிகளோடு தான் இரவிலும் திரிவார்களாம். நானும் அதிக வெயிலின் போது தெருவில் கருப்புக் கண்ணாடி அணிந்து பார்த்தேன் வசதி குறைவாக இருந்தது. இவங்க எப்படி தான் இரவிலும் நிகழ்ச்சி நடக்கும் மண்டபங்களிலும் அணிகிறார்களோ!
ReplyDelete//இனக் குழு இன்னொரு இனக் குழுவை ஆட்கொள்ளும் போது அவர்கள் மீது உடை சார்ந்த அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப் படும் என்பதையும் வரலாறு நமக்குக் கூறியுள்ளது//
இந்த அரபு கொடுமையை அவசியம் அரசு தடை விதித்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
bro u made a very important point and u touched a very important subject...i have been thinking about this for quiet a while....growing insensitivity with out any commonsense or beauty in our dress culture is disappointing....i was so annoyed to see kamal hasan interviewing Ang lee in chennai wearing a thick dark brown leather jacket...copying the western culture a to z blindly makes us look like buffoons...
ReplyDeleteஏங்கணா, உங்க ஊருல குளிர் அடிக்கும் போது புல் ஓவர் போடுவீங்க. வெயில் அடிச்சா ஷார்ஸ் போட்டு என்ஜாய் பண்ணுவீங்க. சென்னையில மூச்சூடும் வெயிலு, நாங்க என்ன பண்ணுறது. நீங்க போடுற டிரஸை பப்பரபே-ன்னு பார்த்து வயிரு எரிஞ்சே சாவனுமா? நாங்க ஏதே எங்களா முடிஞ்சா மாதிரி குளுகுளு பெட்டி போட்டு, இந்த மாதிரி டிரஸை போட்டு பிகர்களை கவர் பண்ணுறோம். அது பொறுக்கலையா உமக்கு?
ReplyDeleteஇப்படிக்கு
சென்னை இளைஞன்
தேவனின் மேல் ரொம்ப :ஹார்ஷ்" ஆக குற்றச்சாட்டுகள் !
ReplyDeleteநிகழ்ச்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் நடப்பதால்...தேவனின் குரல் கெட்டு விடாமல் இருக்க "ஸ்கார்ஃப்" அணிந்து..தொண்டையை பாதுகாக்கிறார் !
அதிக வெளிச்சம் கொண்ட "ஃபோகஸ்" லைட்டுகள்..கண்களைக் கூசசெய்வதால்..அவர் கூலர்ஸ் அணிந்துள்ளார்..அவ்வளவுதான் மேட்டர்..வெரி சிம்பிள் !
பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
ReplyDeleteமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
மாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
9444305581

செல்வன்ஜி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களின் உடை மற்றும் ஒப்பனை,சிகை அலங்காரம் போன்றவை தயாரிப்பாளரின் ஆலோசைனைப்படியே செய்யபடுகிறது என்று நினைக்கிறேன். அதனால் பங்கு பெறுபவர்களை குற்றம் சொல்லி காரியமில்லை.
ReplyDeleteநிச்சயமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தான் கேட்க வேண்டும் என்றாலும் எமது கண்களுக்குத் தெரிபவர்களைத் தான் எம்மால் முதலில் விமர்சிக்க முடியும், ஒருவேளை கட்டாயத்தின் பேரில் இவ்வாறு உடுத்துகின்றேன் என்ற இவர்கள் கூறுவார்களானால் இவர்களின் சார்பாக நிகழ்ச்சியாளர்களை கண்டிக்கலாம் என்பது எனது எண்ணம்
Deleteநம்ம இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை. உடையும், உணவும் ஒருவனின் பணத் தகுதியை காட்டுவதால் இந்த பிரச்சினை. எல்லோரும் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் விளைந்த அபத்தம் இது.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.