அறிவியலில் உள்ளதை ஏற்க தத்துவாம்ச போதை மட்டும் போதாது

பரிணாமவியல் குறித்து உலகெங்கும் உள்ள பழமைவாதிகளால் பல கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன. கேள்விகள் என்பது ஒரு ஆரோக்கியமான விடயம், கேள்விகளுக்கு விடைத் தேடும் போது தான் பல அறிஞர்கள் பல புதியவைகளைக் கண்டறிந்தார்கள், உருவாக்கினார்கள். ஆனால் சில நம்பிக்கைகள் மக்கள் சிலரில் ஆழ ஊடுருவி விடுவதால் அவற்றில் பிரிந்து தன்னிச்சையாகச் சிந்திக்கவோ, பகுத்தறிவோடு பயணிக்க மறுக்கின்றார்கள். 

இருந்த போதும் பண்டைய காலம் போல் இல்லாமல் இன்றைய புதிய உலகில் அறிவியல் என்பதை உலகச் சமூகங்கள் ஏற்கின்றன. பரிணாமவியல் மட்டுமல்ல அறிவியலில் கூறப்படும் எந்தவொரு விடயங்களும் வெறும் நம்பிக்கை சார்ந்து மட்டும் சான்றோரால் ஏற்கப்பட்டு விடுவதில்லை. அறிவியல் கூற்றுக்கள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு அவற்றின் மெய், பொய்கள் நிர்ணயிக்கப்படும். அறிவியல் கூற்றுக்களைக் கோட்பாடுகள் என்றும் அழைக்கின்றனர். 

அறிவியலாளர்கள் ஒரு விடயத்தை நியதி, விதி, கோட்பாடு என வகுக்க முன்னர் எண்ணற்ற வழிமுறைகளில் ஆராய்வார்கள். இத்தகைய கோட்பாடுகளைப் ''பொய்'' என நிறுவி விட்டால் அவை புறக்கணிக்கப்படும். யாராவது இந்த அறிவியல் கோட்பாட்டில் முழுவதுமோ அல்லது பகுதியோ தவறாகக் கண்டால், அந்தத் தேற்றம் மாற்றப்படுகிறது, அல்லது முழுவதும் தூக்கி எறியப்படுகிறது. அதே சமயம் பொய் என நிரூபிக்காத பட்சத்தில் அவற்றின் உண்மைத் தன்மைக்கு ஏற்ற சான்றுகளைச் சேகரித்துக் கொண்டே இருப்பார்கள். 

ஒரு அறிவியலை அறிவியல் என நிறுவதற்கு ஒரு சில வழிமுறைகளை அறிவியலாளர்கள் பின்பற்றுகின்றார்கள். அவை யாவன 

1. இயற்கையை அவதானித்து அறிதல் : பண்டைய காலம் தொடங்கி மனிதர்கள் இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்து வருகின்றார்கள். அவர்களின் அறிவுக்கு ஏற்றார் போல இயற்கையின் இயக்கங்களுக்குத் தத்தமக்கான கோட்பாடுகளை வகுத்துக் கொண்டார்கள். அவைகள் பலவும் பிற்காலத்தில் பொய்மை, தவறு என நிரூபித்துப் பல ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகளுடன் மாற்று விளக்கங்களை முன் வைத்தும் உள்ளார்கள். இத்தகைய நிலையில் பண்டைய கோட்பாடுகளைப் பின்பற்றுவோர்கள் புதிய தெளிவான விளக்கங்களை மறுதலிப்பதும், வன்முறை ஊடாக அடக்க நினைப்பதும் வரலாற்று உண்மைகள். 

2. கருதுகோளை உருவாக்குதல் : இயற்கையை அவதானிப்பவர்கள் அதன் இயக்கங்களை விளக்கும் முகமாகக் கருதுகோள்களை உருவாக்குவார்கள். கருதுகோள் (hypothesis) என்பது ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் தற்காலிகமான ஓர் ஊகம் ஆகும். இது, ஒரு தோற்றப்பாட்டை விளக்குவதற்காக முன்வைத்த ஒரு கருத்தாகவோ அல்லது பல தோற்றப்பாடுகளுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்த தர்க்க முறையான ஒரு கருத்தாகவோ இருக்கலாம். அறிவியல் வழிமுறைகளின்படி ஒரு கருதுகோளானது சோதனை செய்து பார்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அறிவியலாளர்கள், இத்தகைய கருதுகோள்களை, முன்னைய கவனிப்புகளிலிருந்தோ இருந்தோ, அறிவியற் கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலமோ ஊகித்து முன்வைக்கிறார்கள். 

சோதனை செய்ய இயலாத கருதுகோள்கள் பலவும் சமயம், நம்பிக்கைகள், தத்துவங்கள் எனப் பழமைவாதிகளால் தலைமுறை தலைமுறையாகப் பயிற்றுவிக்கப் பட்டு கடத்தப்பட்டு வருகின்றது. பல சமயங்களில் சோதனைகளில் பொய்த்து போகும், சோதனை செய்ய இயலாத கருதுகோள்களுக்கு எதிராக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கருதுகோள்களைப் பழமைவாதிகள் ஏற்பதில்லை. 

3. கருதுகோள்களைப் பரிசோதிப்பதற்காகக் கூடுதல் தகவல்களை/சான்றுகளைச் சேகரித்தல் : ஒரு கருதுகோள்களை நிரூபிக்கப் பல்வேறு சான்றுகளை அறிவியல் உலகம் கோருகின்றது. வெறும் நம்பிக்கை அடிப்படையில் எவற்றையும் ஏற்கவோ, நிராகரிக்கவோ இயலாது என்பதே அறிவியலின் நிலை. தக்க சான்றுகளைச் சேகரித்துக் கொண்டு போக வேண்டும். கிடைக்கப்பட்ட சான்றுகள் கருதுகோளை ஆதரிக்க வலுச் சேர்க்கலாம், அல்லது கருதுகோள்களைத் தக்க சான்றுகளுக்கு அமைய திருத்தவோ, கைவிடவோ வேண்டும் நிலை ஏற்படலாம். 

கருதுகோள்களை அறிவியல் அறிஞர்கள் பொய்ப்பிக்கக் முடியாத அளவுக்கு இருத்தல் வேண்டும். அவர்கள் ஏற்கனவே நிறுவப்பட்ட சான்றுகள், முடிவுகள், விதிகள் ஊடாக அவற்றைப் பல்வேறு வழிமுறைகளில் சோதனை செய்து பார்ப்பார்கள். 

4. ஒரு கருதுகோள் அறிவியல் கோட்பாடாக அறியப்பட வேண்டுமெனில், அது ஒரு பெரிய எண்ணிக்கையிலான சோதனைகளில், பல்வேறு இடங்களில், வெவ்வேறு விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மற்றும் சோதனை செய்யும் ஒவ்வொரு முறையும் அது நிரூபிக்கப்பட வேண்டும். 

5. ஒரு அறிவியல் கோட்பாட்டில் ஒரு விதிவிலக்குக் கண்டுபிடிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது, மற்றும் ஒரு விஞ்ஞானி அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கை கண்டுபிடிப்பதன் மூலம் பிரபலமான முடியும். ஐசக் நியூட்டனின் இயக்கவியல் விதிகளுக்கு ஒரு விதிவிலக்கை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார், அதன் மூலம் அவர் பிரபலமானார். பல நூறு ஆண்டுகளாக ஏற்கப்பட்டு இருந்த நியூட்டனின் கோட்பாடு, மாற்றப்பட வேண்டியதாக இருந்தது, அது மாற்றப்பட்டும் விட்டது. 

உண்மையான விஞ்ஞானிகள் ஒரு கருதுகோளையோ, கோட்பாட்டையோ தனிப்பட்ட ரீதியாகப் பாதுகாக்க உண்மையான சான்றுகளையோ, அவதானிப்புக்களையோ புறக்கணிக்க மாட்டார்கள். நவீன அறிவியல் முக்கியக் கோட்பாடுகளைப் பட்டியலிடுகின்றன. இந்தக் கோட்பாடுகள் பல முறை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டும் விதிவிலக்கு ஏதும் இல்லாமல் இருக்கின்றன. அவை யாவன : 
பருப்பொருள் ஆற்றல் காப்பு கோட்பாடு - The law of conservation of mass and energy
வாழும் உயிரினங்கள் செல் கோட்பாடு - The cell theory of living organisms
பரிணாமவியல் கோட்பாடு - Evolutionary Theory
வானியல் பால்மண்டல கோட்பாடு - Theory of galactic astronomy
சார்பியல் கோட்பாடு - Theory of relativity
குவாண்டம் கோட்பாடு - Quantum Theory 
என்பவை முக்கியமான சில. 

தமிழறிவோம் : 
கருதுகோள் - Hypothesis; கோட்பாடு - Theory; தரவு, சான்று - Evidence;

நன்றிகள் : முனைவர் கிரக் கிருக்கோனிஸ், விக்கிப்பீடியா தமிழ், தமிழ்நாடுப் பாடநூல் கழகம்

26 comments :

  1. சகோ நல்ல பதிவு,

    இயற்கையின் நிகழ்வுகளுக்கு பொருந்தும் விளக்கம் அளிப்பதே அறிவியல் என்னும் புரிதல் உள்ளோர் எதையும் தேடி கற்க,கண்டறிய முற்படுவர்.

    1.நிகழ்வுகளை அவதானித்தல்& அளவிடுதல்

    2. கடந்த,நிகழ்கால் அளவீடுகளுக்கு பொருந்தும் கொள்கை உருவாக்குதல்.

    3. அக்கொள்கை மூலம் கணிப்பு செய்தல்.

    4.எதிர்கால அளவீடுகள் அக்கணிப்பை உறுதி செய்கிறதா,மாற்றுகிறதா இல்லை புதிய கொள்கைக்கு வழிவகுக்கிறதா?

    என்பதே அறிவியலின் தொடர்பயணம். அதிலும் பல் கொள்கைகள் சில சமயம் பொருந்தும் விள்க்கம் அளிக்கலாம். ஆனால் அதிக கணிப்புகளை மெய்படுத்தும் கொள்கையே ஏற்கப் படும்.

    **
    பரிணாமம்,பெருவிரிவாக்கம் இரண்டுமே ஒத்த கொள்கைகள்தான். நெடுங்காலம் முன்பு தொடங்கி, இன்றுவரை தொடரும் செயல்கள்.

    பெருவிரிவாக்கம் ஏற்பவர்கள், பரிணாமத்தை மறுப்பது முரணே!!

    பரிணாமத்தின் கடந்த கால நிக்ழ்வுகளுக்கு உயிரின படிமங்கள் சான்று எனில், பெரிவிரிவாக்க கொள்கைக்கு ஒளிப் படிமங்கள் சான்று!!

    பரிணாமத்தின் இன்றைய நிகழ்வுக்கு ,ஜீனோம் ஆய்வுகள் சான்று எனில் பெருவிரிவாக்கம் நிகழ்வுக்கு சிவப்பு விலக்கம் சான்று!!

    55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கேம்பிரியன் உயிரினங்கள் எப்படி தோன்றியது என்போர், எப்படி கேலக்ஸிகள், எப்போது உருவாகின என கேட்க மாட்டார்.

    எப்படி பரிணாமத்தில் முதல் செல் வந்தது என்போம், விரிவாக்க்கத்தின் முதல் புள்ளியை படைத்தது எங்க கடவுள் என்பார்!!

    நாம் இன்றில் இருந்து கடந்த எதிர்காலத்தை கிடைத்த சான்றுகளின் மூலம் கணித்து சரிபார்க்கிறோம்.ஆகவே நாம் வாழும் காலமே நம்க்கு முதல் அடிப்படை.

    ஆனால் ஆதியில் என்ன இருந்தது என் திருப்பி திருப்பி கேட்பவர்கள்.
    " ஆதியிலே வானத்தையும் பூமியையும் தேவன் படைத்தார்" ," குன் என்றால் ஆகிவிடும்" "பிரம்மா படைத்தார்" என் மத புத்த்கம் படித்தால் கேள்வி கேட்காமல் அல்லேலூயா, அல்லாஹ் அக்பர், அரோஹரா என்பது சகிக்கவில்லை!!

    நன்றி!!

    ReplyDelete
  2. அண்ணா, இந்த உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது! மண், மரம், காற்று, என அனைத்துக்குமே கடவுள் தான் ஆர்க்கிடெக்! மனிதனைப் படைத்ததும் கடவுள் தான்! - இந்த அரிய உண்மையை மக்கள் இப்போதெல்லாம் தீவிரமாக நம்ப ஆரம்பித்து விட்டார்கள்!

    குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் அடிக்கும் புயல், மழையைக் கூட பொருட்படுத்தாது கியூவில் நின்று, ”பரிணாம கோட்பாடு பிழை! கடவுளின் படைப்புக்கள் தான் நாம்” என்று சொல்லி வருகிறார்கள்!

    ஹா ஹா அப்படி இருக்கும் போது, ஏன் அண்ணா வீணாக பரிணாம கோட்பாடு பற்றி விவாதிக்கணும்?

    # ச்சும்மா அண்ணா :)

    ReplyDelete
  3. சத்தமாக சொல்லாதீர் நண்பரே ! கலீலியோவையே கொன்ற உலகம் இது, இன்றும் நமது ஊரில் பேய் ஓட்டுகிறார்கள் !! அறிவியல் அறியாமையை முழுமையாக போக்க முடியாது......மூடநம்பிக்கை இருக்கும் வரை !

    ReplyDelete
  4. அன்புள்ள சார்வாகன்,
    பிரம்மா படைத்தார் என்று சொல்லும்போது, பிரம்மா என்ற ஒருவர் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு உயிராக படைக்கிறார் என்று பொருளில்லை.

    The later puranic view also asserts that the universe is created, destroyed, and re-created in an eternally repetitive series of cycles. In Hindu cosmology, a universe endures for about 4,320,000,000 years (one day of Brahma, the creator or kalpa

    பிரபஞ்சம் தோன்றுகிறது, அழிகிறது, மீண்டும் தோன்றுகிறது என்று வேதங்கள் ஒரு சுழற்சியை கூறுகின்றன. இதனை ஒருவர் கை கால் எல்லாம் வைத்துகொண்டு ஒரு ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு செய்கிறார் என்று கருதுதல் பேதமை. இந்து மதம் குறியீடுகளால் நிரம்பியது. குறியீடுகள் என்பது மொழி போன்றது. பல் என்ற வார்த்தை எப்படி பல் இல்லையோ அதே போல பிரம்மா என்ற குறியீடோ அல்லது அந்த சிலையோ உருவமோ பிரம்மா அல்ல. அது மனிதர்கள் visualize பண்ண கிடைத்த சாதனம். இதனை idol worship என்று முட்டாள் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் உளறுவார்கள். (அவர்களது டுபாக்கூர் வேதங்களும் உளறும்)

    அறிவியல் தேட்டமே இந்து தத்துவ சாராம்சம்.

    ReplyDelete
    Replies
    1. பிரம்மம் என்பது குறியீடு என்று எந்த வேதப் பாடல் கூறுகின்றது, அறிய அவா?

      Delete
  5. \\பருப்பொருள் ஆற்றல் காப்பு கோட்பாடு - The law of conservation of mass and energy
    வாழும் உயிரினங்கள் செல் கோட்பாடு - The cell theory of living organisms
    பரிணாமவியல் கோட்பாடு - Evolutionary Theory
    வானியல் பால்மண்டல கோட்பாடு - Theory of galactic astronomy
    சார்பியல் கோட்பாடு - Theory of relativity
    குவாண்டம் கோட்பாடு - Quantum Theory \\

    சில சமயம் நம்மகிட்ட செல்லாத நோட்டுங்க இருக்கும், யாரும் வாங்க மாட்டாங்க. அதை தள்ளிவிடுவதற்கு நாலு நல்ல நாட்டின் நடுவில் வச்சு குடுத்து வாங்குபவன் கவனத்தை அவன் பணத்தை என்னும்போது திசை திருப்பி தள்ளி விட்டுடலாம்.

    அரிசியில் கல்லை கலப்பதும் நடக்கிறது.

    நல்ல கத்திரிக்காவுடன் சொத்து கத்திரிக்காவை கலந்து காய்கறிக்காரன் விற்ப்பான்.

    அழுகிய பழங்களை நல்ல பழங்களோடு கலந்து வாகுபவர்களை ஏமாற்றி தள்ளி விடலாம்.

    அதே வேலையை, இங்கே செய்துள்ளீர். பரிணாமம் என்ற பித்தலாட்டத்தை நிரூபிக்கப் பட்ட ஆதாரப் பூர்வமான அறிவியல் கொள்கைகளின் நடுவே வைத்து இளிச்சவாயனுங்க கிட்ட தள்ளிவிடப் பார்க்கிறீர். இதுக்கு நிச்சயம் வெளிச்சம் போட்டு கட்டுவோம் பொறுத்திரும். ஆனாலும், படிச்ச நீர் தெரியாதவங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லாமல் இன்னொரு பித்தலாடக் காரராக உருவெடுத்திருப்பது வேதனைக்குரிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சவாலுக்கு நான் தயார் ! குடல் வாலை குரங்கு வால் என்று எழுதிய தத்துவ ச்சா அறிவியல் மேதையே .. உலகப் பல்கலைக் கழகங்கள் முதல் உள்ளூர் பள்ளிக்கூடம் வரை பரிணாமவியலை அறிவியலாக ஏற்றுக் கொண்டாயிற்று, இயலுமானால் அதை பொய்ப்பித்து நோபல் பரிசு வாங்க வாழ்த்துக்கள். அவ்வ்வ்வ் !

      Delete
    2. மாப்ளே தாசு,
      பரிணாமம் என்பது நீண்ட காலமாக் நடக்கும் ஒரு செயல் என்றால் எந்த மாதிரி ஆதாரம் இருந்தால் ஏற்க முடியும்? என் சிந்திக்க வேண்டும்.
      **
      உம்ம வழிக்கே வருகிறேன்.

      பெருவிரிவாக்க கொள்கையை நீர் ஏற்பது உண்டா?

      கால்க்சி உருவான சான்றுகளின் அடிப்படையில் விளக்க முடியுமா?

      எதுக்கும் இந்த சுட்டியை துணைக்கு வைத்துக் கொள்ளும்.

      கால்க்ஸி= உயிரின குழு

      புது காலக்ஸி ஆய்வகத்தில் உருவாக்கி காட்டும் வரை பெருவிரிவாக்க்ம் ஏற்க கூடாது என் சொல்வீரா??

      http://en.wikipedia.org/wiki/Galaxy_formation_and_evolution

      The study of galaxy formation and evolution is concerned with the processes that formed a heterogeneous universe from a homogeneous beginning, the formation of the first galaxies, the way galaxies change over time, and the processes that have generated the variety of structures observed in nearby galaxies. It is one of the most active research areas in astrophysics.
      Galaxy formation is hypothesized to occur, from structure formation theories, as a result of tiny quantum fluctuations in the aftermath of the Big Bang. The simplest model for this that is in general agreement with observed phenomena is the Cold Dark Matter cosmology; that is to say that clustering and merging is how galaxies gain in mass, and can also determine their shape and structure.

      நன்றி!!

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. சகோ நிலவன்,
    பரிணாமம் என்பது இபோதைய உயிரின‌ தோற்ற பரவல் அறிவியல் கோட்பாடு.

    இதற்கான சான்றுகளும், தொடரும் ஆய்வுகள்,கட்டுரைகள் உண்டு.

    பல ஆன்மீக வாதிகள் மதத்தை ,அறிவியலை மததோடு குழப்பாமல், பரிணாமமும் இறைவன் செயல் என இறையால் வழிநடத்தப்பட்ட பரிணாமம் என சொல்லி வேறு வேலை பார்க்கின்றனர்.

    நீங்கள் அப்படிப்பட்டவர் எனில், யாருடன் விவாதிக்க வேண்டும்?

    1.பரிணாமம் என்பது முழுப் பொய்,புத்த்கம் சொல்லும் படைப்புக் கொள்கை மட்டும் சரி என்னும் மதவாதிகள் உடனா?

    2.பரிணாமம் இறைவன் செயல் அல்ல,இயற்கையின் செயல் என்னும் நாத்திகர் உடனா?

    முடிவு செய்யுங்கள் தொடர்வோம்

    நன்றி!!!

    ReplyDelete
  8. மாமூல் மாமு,

    பரிணாமம் என்பது தொடர்ந்து நடைபெறுவது, அது நடவாத காலகட்டமே இல்லை. இன்றைக்கும் மனிதன் பரிணாம மாற்றதிற்குட்பட்டுக் கொண்டே இருக்கிறான். இப்படி எங்கேயோ படிச்சேன், இது சரியா? சரி என்றால், அதெப்படி எப்போதெல்லாம் படிமங்கள் ஏற்ப்படுதோ அப்போதெல்லாம் முழு வளர்ச்சியடைந்த உயிர்கள் மட்டுமேதான் மாட்டுமா? 380 கோடி வருஷம்னு சொல்லிக்கிட்டு இருக்கீரே, அப்போதெல்லாம் ஒண்ணுமே நடக்காதா?

    பாதி டைனோசர், பாதி மீன் படிவங்கள் எல்லாம் எங்கே மக்கு மாமு? போட்டோ இருந்தா குடு அதை விட்டுட்டு நரி கதை புலி கதை சொல்ல வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      பரிணாமத்தின் கடந்தகால ஆதாரங்கள்: படிமங்கள்,பரிணாம மரம்.

      நிகழ்கால ஆதாரங்கள்: ஜீனோம் ஆய்வுகள்

      பரிணாமம் என்பது இரு நிகழ்வுகள் கொண்டது.

      1. உரு மாற்றம்[ சிறுபரிணாமம்--Morphological Change]
      2. ஒரு உயிரி ,சில உயிரிகளாக பிரிதல்[ பெரும்பரிணாமம்-Speciation]

      ஜீனோம் மாற்றத்தால் உறுப்புகள் புதிதாக உருவாகும் என நிரூபிக்கப்பட்ட விடயம்.
      http://en.wikipedia.org/wiki/Evolutionary_developmental_biology
      The developmental-genetic toolkit

      The developmental-genetic toolkit consists of a small fraction of the genes in an organism's genome whose products control its development. These genes are highly conserved among Phyla. Differences in deployment of toolkit genes affect the body plan and the number, identity, and pattern of body parts....
      A paragon of a toolbox gene is Pax6/eyeless, which controls eye formation in all animals. It has been found to produce eyes in mice and Drosophila, even if mouse Pax6/eyeless was expressed in Drosophila.[20]
      This means that a big part of the morphological evolution undergone by organisms is a product of variation in the genetic toolkit, either by the genes changing their expression pattern or acquiring new functions. A good example of the first is the enlargement of the beak in Darwin's Large Ground-finch (Geospiza magnirostris), in which the gene BMP is responsible for the larger beak of this bird, relative to the other finches.[21]
      The loss of legs in snakes and other squamates is another good example of genes changing their expression pattern. In this case the gene Distal-less is very under-expressed, or not expressed at all, in the regions where limbs would form in other tetrapods.[22] This same gene determines the spot pattern in butterfly wings,[23] which shows that the toolbox genes can change their function.

      பெரும்பரிணாமம் என்பது பல த்லைமுறைகள் மில்லியன் ஆண்டுக் கால் நிகழ்வு என்பதால், தாவரங்கள், நுண்ணுயிர்கள்,பழ ஈக்கள்[Fruit fly] போன்றவற்றில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதில் பல ஆதரவான சான்றுகளையே தருகின்றன.
      http://en.wikipedia.org/wiki/Experimental_evolution

      இரு உயிரிகள்[species], ஒரே வகையா,வெவ்வேறு வகையா என்பதே வரையறுப்பது கடினம் என்பதைப் புரியாதவரை பரிணாமம் பிடிபடாது.It is known as Species Problem.

      Thank you

      Delete
  9. @ இக்பால் செல்வன்

    நானாவது குரங்கு வாலைப் பற்றித்தான் தப்பா சொன்னேன், ஆனா, டார்வின் குரங்குதான் மனிதனா மாரிச்சுன்னுதானே சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதுக்கு என்ன சொல்லுவீங்க? அப்புறமா ஏதோ கொஞ்சம் புத்திசாலிங்க மடக்கவும், குரங்கு, மனிதன் இருவருக்கும் பொது மூதாதையரில் இருந்து வந்திருக்கலாம்னு அந்தர் பல்டி அடிச்சு மாத்திகிட்டீங்க. பரிணாமம் மொத்தமுமே பேத்தல், ஆதாரமற்றது அறிவியலே இல்லை, அதை ரிலேட்டிவிட்டி மாதிரி உண்மையான அறிவியல் கொள்கையுடன் ஒப்பிடும் உம்மை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
    Replies


    1. மக்கு பாகவதரே,

      AIDS Virusஇல் பரிணாம மாற்றம் நடைப்பெருவதை ஆய்வாளர்கள் நிருபித்து பலவகையான ஹெச்.ஐ.வி வைரஸ்களைப்பட்டியலிட்டுள்ளார்கள் எனப்பதிவிட்டேனே, பரிணாமம் நடப்பதில்லை என்றால் வைரசில் எப்படி அது சாத்தியமாச்சு?

      முடிந்தால் எயிட்ஸ் வைரசில் பரிணாமம் நடக்கவில்லை என நிறுவி நோபெல் பரிசு வாங்கிக்கொள்ளும் :-))

      http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_27.html

      எனது பதிவுக்கு முடிந்தால் பதில் சொல்லும்.

      பெருமால் கோயிலுக்கு போனோமா,ஓசியில புளியோதரை வாங்கி தின்னோமானு அதோட நிப்பாட்டிக்கும், அறிவியல் பற்றி எல்லாம் பேசி உம்ம அறியாமையை வெளிப்படுத்திக்காதிர், பார்க்கிறவங்க எல்லாம் சிரிக்கிறாங்க :-))

      Delete
  10. \\AIDS Virusஇல் பரிணாம மாற்றம் நடைப்பெருவதை ஆய்வாளர்கள் நிருபித்து பலவகையான ஹெச்.ஐ.வி வைரஸ்களைப்பட்டியலிட்டுள்ளார்கள் எனப்பதிவிட்டேனே, பரிணாமம் நடப்பதில்லை என்றால் வைரசில் எப்படி அது சாத்தியமாச்சு?\\ ஏன்யா நீர் வேற இந்த வரைச வச்சிக்கிட்டு உசிர வாங்குரீறு? வேணுமின்னா அந்த வைரஸ்ல நாலு எடுத்து உம்ம உடம்புக்குள்ள விட்டுக் கொள்ளும், அது என்னைய்யா, மாமூல் மாமு பரிணாமம் மில்லியன் வருடங்களாக நடப்பது observe செய்ய முடியாததுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு, நீர் என்ன சில வருடத்திலேயே பரிணாமத்தை நெத்தியில சாத்திட்டேன்னு கதை விடுறீரு. இதுல எது சரி எது புளுகு? அத்தனயுமே புளுகுதானே. இதுல நல்ல புளுகு கேட்ட புளுகா.. ஹெ ...ஹே .......ஹே .......ஹே ......

    ReplyDelete
    Replies
    1. மக்கு பாகவதர் ,

      இதுக்கு தான் கொஞ்சமாவது அறிவியல் தெரிந்து இருக்கணும், நீர் தான் மக்கு ஆச்சே :-))

      பல செல் உயிரினங்கள்,ஒரு செல் உயிரினங்கள் என இருக்கு, பல செல் உயிரினங்களில் பரம்பரை காலம் அதிகம் ,மாற்றம் நிகழ்வதை கவனிக்க இயலாது.

      வைரஸ் போன்ற ஒரு செல் வகையில் ஒரே நாளில் பல மில்லியன் சந்ததிகள் உருவாகும் எனவே மாற்றம் ஏற்படுவதை பதிவு செய்ய இயலும்.

      நான் பர்ணாமத் நம்புகிறேன்ன் எனவே எனக்கு வைரஸ் வேண்டாம்,நீர் நாலு வைரஸ் உள்ளே விட்டுக்கும், அப்போ டாக்டர் சொல்லுவார்,வைரஸ் தினம்மும் பரிணாம மாற்றம் அடையுது ஒரே மருந்து வேலை செய்யாதுனு,அப்போ நம்பிக்கை உமக்கு வரும் :-))

      Delete
  11. அன்புள்ள இக்பால் செல்வன்

    http://www.hinduwisdom.info/Symbolism_in_Hinduism.htm

    இந்துமத சிந்தனைகளில் குறியீட்டுத்தன்மை என்பது எவ்வளவு ஆழமானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  12. அன்புள்ள சார்வாகன்,
    இந்து மதத்துக்கும் பரிணாமவியலுக்கும் அல்லது எந்த அறிவியலுக்கும் ஒரு விவாதமும் இல்லை. ஆகையால் நீங்கள் விவாதத்துக்கு வரிந்துகட்டுவது இஸ்கான் மாதிரி “கிறிஸ்துவ” இந்துக்களுக்கு வேண்டுமானால் பிரயோசனபடலாம்.

    ஆரம்ப கால இந்து ஞான தரிசனங்களில் விவாதம் எது சரியான அறிவியல் நிலைப்பாடு என்பதுதான்.

    மேலும் எது உண்மையோ அது நிற்கும். சத்யம் எதுவோ அதுவே கடவுள் என்றும் வேதங்கள் கூறுகின்றன.

    உண்மையை அறிய முற்படுவதுதான் வேத சாரம்.

    ஏகம் சத்யம் என்றும் வேதங்கள் கூறுகின்றன.

    ஞான யோகம், புத்தியோகம் ஆகியவை உண்மையை அடைய பல வழிகள். அவை ஒன்றுக்கொன்று முரண்படாதவை.

    அறிவியலின் ஒரு துறையும் மற்றொரு துறையும் எவ்வாறு ஒருங்கிணைந்து செல்ல வேண்டுமோ அதே போலத்தான் இவை.

    பரிணாமவியல் உட்பட எந்த அறிவியலுக்கும் இந்துமதத்துக்கும் முரண்பாடு ஏதும் இல்லை. புவியீர்ப்பு விசைக்கும் இந்துமதத்துக்கும் முரண்பாடு உண்டா? அது போலத்தான் இது.

    ReplyDelete
  13. //2.பரிணாமம் இறைவன் செயல் அல்ல,இயற்கையின் செயல் என்னும் நாத்திகர் உடனா?//

    இறையையும் இயற்கையையும் தனித்தனியாக பார்ப்பதால் வரும் வினை.

    செய்வதும் செய்யப்படுவதும், நீங்களும் நானும் பிரம்மமே என்பது ஆதிசங்கரரின் அத்வைதம்.

    நீங்களும் நானும் புல்லும் பூண்டுமாக இங்கே நடப்பது லீலை.

    ReplyDelete
    Replies
    1. சகோ நிலவன்,
      வேதம்,உபநிஷத்துகள் சொல்வது அறிவியலா என்பது வேறு விவாதம். இன்னொரு நாள் செய்வோம்.

      மத புத்தகத்தில் அன்றே கூறினார் ஆண்டவன் என்பதை நான் ஏற்பது இல்லை!
      இதில் எந்த மதமும் விதிவிலக்கு அல்ல!!

      பரிணாமம் என்பது சான்றுகள் உள்ள அறிவியல் கொள்கை என்பதில் மேல் விவாதம் நடக்கும் போது, நீர் விள்க்க வேண்டியது இஸ்க்கான் தாசுக்கும், அவரின் வஹாபி ஆதரவு குழுவிற்கு மட்டுமே!!.

      "தாசின் கூற்று!!??
      //பாதி டைனோசர், பாதி மீன் படிவங்கள் எல்லாம் எங்கே மக்கு மாமு? போட்டோ இருந்தா குடு அதை விட்டுட்டு நரி கதை புலி கதை சொல்ல வேண்டாம்.//"

      பாருங்க நசிம்ஹ அவதாரம் போல் பாதி மீன்,பாதி டைனோசார் சீரியஸா கேட்கிறார் . சிரிப்பு வரலை.

      ஆகவே இந்துமதம் பரிணாமத்திற்கு முரண் அல்ல என அங்கே சொல்லவும்!!

      நன்றி!!!

      Delete
  14. காலவெளியில் (spacetime)இல் இவை அனைத்தும் ஏற்கெனவே நடந்தவையாகவும் நடக்கப்போவவையாகவும் இருக்கின்றன. காலமானார் என்ற வார்த்தையே பொருள் பொதிந்தது. she/he became time. from the space occupying entity, the individual became part of time.

    ReplyDelete
  15. தாஸ் போன்ற இந்து போர்வை போர்த்திய ஆபிரஹாமியரை எதிர்த்து இந்துக்களான நாங்களே பேச வேண்டும். இல்லையெனில் இந்துமதம் பரிணாமவியலை எதிர்க்கிறது என்ற தவறான கருத்து பரவ வாய்ப்புண்டு.

    ReplyDelete
  16. தமிழ் இந்து போன்ற இந்து தளங்கள் தெளிவாக பரிணாமவியல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளன என்பதை இங்கே வலியுறுத்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நிலவன்,

      நமக்கு மூமின்களைப் பத்தி தெரியும். மூமின் எந்தக் காலத்தில் சிந்தித்தார், இப்போது சிந்திக்க???

      குரானைத் தாண்டி எவரும்சிந்தித்தால் அல்லாஹ் நரகத்தில் போட்டு விடுவார்,தோலஒ மாத்தி மாத்தி கருக்குவார். ஹூரி கொடுக்க மாட்டாரு!!

      ஆனால் நம்ம தாசும் அவர்கள் வழி போகிறாரே என மட்டுமே கவலைப் படுகிறேன்.

      நன்றி!!

      Delete
    2. @சார்வாகன்
      "குரானைத் தாண்டி எவரும்சிந்தித்தால் அல்லாஹ் நரகத்தில் போட்டு விடுவார்,தோலஒ மாத்தி மாத்தி கருக்குவார். ஹூரி கொடுக்க மாட்டாரு!!"


      அது மட்டுமா 72 கை படாத கன்னிகளும் கிடைக்க மாட்டார்கள். அதை யாராவது தவற விடுவார்களா ?? சர்வராகன் இதெயெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா ?

      Delete
  17. //மத புத்தகத்தில் அன்றே கூறினார் ஆண்டவன் என்பதை நான் ஏற்பது இல்லை!//

    இந்து மதப்புத்தகத்தில் ஆண்டவன் அன்றே கூறுவது ஆன்மீகம் மட்டுமே. அறிவியல் அல்ல. அதுவும் இன்னொருவர் வாய்வழியாக (சஞ்சய உவாச) வருகிறது. அது வியாசரால் கவிதையாக எழுதப்படுகிறது.

    தமஸோமா ஜ்யோதிர்கமய என்கிறது. மனிதனின் வாழ்வு தொடர்ந்து இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு போக வேதம் அழைக்கிறது. ஆனால் இதுதான் ஜ்யோதி என்று சொல்லவில்லை. இது ஆன்மீக தேடல். அறிவு தேடல். அந்த தேடலை செய்யும் அறிவியலாளர்கள் அனைவரும் மேன்மையானவர்கள்.

    இந்தியாவில் துறவிகள் கூட கொண்ட முக்காலம் உணரும் குணத்தை அல்லாவோ அல்லது யாஹ்வேயோ பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகும் என்பது தெரியாது. நடந்த பின்னால்தான் அட நம்ம அனுப்பிய ”வேதத்தை” மனிதர்கள் திரித்துவிட்டார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள். சும்மா ஜோக்குதான். பைபிள் குரான் எல்லாமே மனிதர்கள் எழுதியதுதான்.

    அதனை வைத்துகொண்டு அல்லாஹ் அனுப்பியது, இயேசு அனுப்பியது என்று கேவலப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.


    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.