தமிழ் அடையாளங்களை தமிழ்நாடு இழக்கும் அபாயம்

இன்று தமிழகம் ஒரு இக்கட்டான காலக் கட்டத்தில் இருக்கின்றது.திராவிட இன மக்கள் தெற்காசிய நிலப்பரப்பை தமக்கான தாயகமாக மாற்றிக் கொண்டு தனி அடையாளங்களை, மொழிகளை, நாகரிகங்களைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவை யாவும் நிலைத்திருக்கவில்லை, வெளியில் இருந்து தெற்காசியாவுக்குள் நுழையத் தொடங்கிய இந்தோ- ஆரியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள், இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் எனத் திராவிடம் என்பது பல ஆபத்துக்களையும், இழப்புக்களையும் சந்தித்து இன்று திராவிடம் தென்னிந்தியாவோடு சுருங்கி விட்டது. அதிலும் மொழி சார்ந்த பாதிப்புக்களைக் குறைத்துக் கொண்டு தமிழ்நாடே மிஞ்சிக் கிடக்கின்றது. 

தமிழகத்துக்கு வருகை தந்த அயலவர்கள் பல நல்ல விடயங்களை நமக்கு அளித்துள்ளார்கள், அதே சமயம் தமது விசங்களையும் இங்குப் பரப்பி விட்டு சென்றுள்ளார்கள். இன்றைய காலக் கட்டத்தில் தமிழர்கள் என்ற தனி அடையாளம் என்பது இழந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சாதி, சமயம் சார்ந்த நச்சுக் கிருமிகள் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த கிளம்பியுள்ளன. 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வெறும் பார்ப்பனர், பார்ப்பன அடிவருடி ஆதிக்க இந்துக்களால் ஆளுமைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழகத்தைத் திராவிடப் பேரெழுச்சியும், ஆங்கிலேயே வழிக் கல்வி முறைகளும் மீட்க போராடின.   இவ்வாறாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட திராவிடர்கள் தாம் வெறும் அடிமை என்ற மனோபாவத்திலேயே வாழ்ந்து வந்தார்கள். அவர்களை முன்னெடுத்து வழி நடத்தியதில் பல தலைவர்களின் பங்கு உள்ளது. அதில் முக்கியப் பங்காற்றியவர் தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி ஆவார். 

இன்று புதிதாக முளைத்துவிட்ட சாதிய, சமயம் சார்ந்த காளாண்கள் ஒரு மாபெரும் ஆலமரத்தினை வேரோடு சாய்க்க கங்கணம் கட்டி வருகின்றன. சமூகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்ற போதும் ஏன் பெரியாரை தூற்றுகின்றார்கள் என்று யாராவது எண்ணியதுண்டா. பெரியார், அம்பேத்கார் ஆகிய தலைவர்களே இந்தியா முழுவதும் அதிகம் தூற்றப்படும் தலைவர்களாக உள்ளார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைப் பார்ப்பனம் மற்றும் இதர ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீட்டதில் இவர்களின் பங்கு தலையானது. இதனைப் பொறுக்க முடியாத சாதிய, மதங்கள் சார்ந்தவர்கள் இன்றளவும் இத்தகைய தலைவர்களைத் தூற்றி வருகின்றனர். இதில் நீண்டதொரு வேலைத் திட்டமும் உள்ளது. 

பெரியாரின் வேண்டுகோளை நிராகரித்துத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது. அறிஞர் அண்ணாவால் முன்னெடுக்கப்பட்ட திராவிட இயக்கம், அவரது மறைவோடு பார்ப்பன ஆதிக்கத்தினரின் கைகளுக்கு வந்துவிட்டது. திராவிட இயக்கம் என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பாக மட்டும் இருந்திருக்கவில்லை. அது சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய மூன்று தளங்களிலும் மண்ணின் மைந்தர்களுக்கும், அவர்களது பண்டைய பெருமிதங்களையும், உரிமைகளையும் மீட்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு போராட்டம். அவை பிற்காலத்தில் வழிநடத்தப்பட்ட முத்துவேல் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயராம் ஜெயலலிதா போன்ற பார்ப்பன சார்புடைய தலைவர்களால் மழுங்கடிக்கப் பட்டன என்பது தான் உண்மை. 

தமிழகம் இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது தான். சமூக, பொருளாதாரத்தில் பல சிறப்புக்களை நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக இலவசக் கல்வி, மதிய உணவுத்திட்டம், பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடுகள், பொருளாதார வளர்ச்சி எனப் பல சாதனைகளை நாம் பெற்றுள்ளோம். ஆனால் இவை யாவும் தமிழகத்தை வழிநடத்திய தலைவர்கள் இன்னமும் கொஞ்சம் பெரியாரின் பார்வையோடு செயல்பட்டு இருந்தால் மேன்மேலும் முன்னேற்றம் கண்டிருக்கும். அண்ணாவுக்குப் பின் எழுந்த தலைவர்கள் யாவரும் இரண்டு விடயங்களை ஒழிக்கப் பாடுபடவே இல்லை. சாதியையும், சமயத்தையும் வளர்த்தெடுப்பதில் அவர்கள் முனைப்புக் காட்டினார்கள். அதற்கான முக்கியக் காரணம் வாக்கரசியல் என்பது தான். 

இன்று பெரியாரை தகர்த்து எறிய ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான வேலைத் திட்டத்தைத் தமிழக அரசியல்வாதிகள் தொடங்கியுள்ளார்கள். சாதிப் பற்றுள்ள பாட்டாள் மக்கள் கட்சியை வளர்த்தெடுத்தமை முதல் மதவாதக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி போன்றவைகளை வளர்த்துவிடுவது வரை. தமிழகத்தின் தமிழர் சார்ந்த அடையாளங்களைக் களைத்துவிட்டு சாதிய, சமய ரீதியாகப் பிளவுப் படுத்தவே இவர்கள் விரும்புகின்றார்கள். இதன் பின்னணியில் பார்ப்பன சக்திகளின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை. 

ஒரு சின்ன உதாரணம், நாத்திக கொள்கைகளைப் பரப்பிய பெரியார், அண்ணாவின் பெயரைச் சொல்லி அரசியல் பண்ணும் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் நாத்திகத்தைத் தமது வாழ்வியலாகக் கொண்டுள்ளார்களா என்ன. இவர்களின் ஆட்சியில் எழுந்த பாடநூல்களில் தான் கடவுள் வாழ்ந்து முன்னே வந்து நிற்கின்றது. 

திராவிட ஊதுகுழலாகப் பரிணமித்த திராவிட ஊடகங்கள் இன்று ஜோதிடம், கோவில்கள் என்பது முதலாகப் பாலியல் காட்சிகளைக் கத்தரித்த மகாபாரதத் தொடரையும் தொலைக்காட்சியில் வெளியிடுகின்றது. சில காலத்துக்கு முன் சன் டிவியில் பார்ப்பன ஆதிக்கத்தை நுழைக்கச் சண்டை போடுவது போலப் போட்டு சன் டிவி - கலைஞர் டிவி எனப் பிரிந்து நாடகமாடிய இவர்கள். பின்னர்ச் சன் டிவியில் இந்து மத நிகழ்ச்சிகளைத் திணித்துக் கொண்டார்கள். 

இன்று இஸ்லாமிய வாக்குக்களைப் பெறுவதற்கும், மதம் சார்ந்த அரசியலை வளர்த்துவிட்டு ஆதாயம் காணவும் பார்ப்பன உத்தியின் துணையோடு ஒரு மாபெரும் நாடகங்களைப் போட்டு வருகின்றார்கள் அதிமுகவும், அதன் அல்லக்கைக் கட்சிகளான இஸ்லாமிய கட்சிகளும். 

பெரியாரை வீழ்த்துவதால யாருக்கும் நன்மை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெரியாரியம் என்பது தெய்வ வேதம் கிடையாது, நாங்கள் அதனை அவ்வாறு பார்க்கவும் இல்லை. ஆனால் எதனையும் புத்தியோடு கேள்வி கேட்கவும், சமத்துவத்தை நிலைநாட்ட தைரியமாகப் போராட வேண்டும் என்பதையும் தமிழர்களாகிய எமக்குக் கூறிச் சென்றவர் அவர். அவரது பெயரை வைத்துக் கொண்டோ, தூற்றிக் கொண்டோ அரசியல் செய்வோருக்குச் சமூகம் சார்ந்த அக்கறை என்பது துளியும் கிடையாது. மாறாகப் பணம், அதிகாரத்தைப் பெற வேண்டும். மதங்களையும், சாதிகளையும் வளர்க்க வேண்டும் என்பதுவே. 

திமுக ஒரு பக்கம் சாதியக் கட்சிகளை வளர்த்துவிட்டது. அதிமுக மற்றொரு பக்கம் மதக் கட்சிக்களை வளர்த்து வருகின்றது என்பது தான் உண்மை. அது போல விஜயகாந்த என்ற சாதி வெறியரையும், பார்ப்பன, கிறித்தவ மதத் தொழிலதிபர்களையும் வளர்த்துவிட்டதும் இந்த இரு கட்சிகள் தான். இவற்றின் வேலைத்திட்டங்களுக்குப் பின்னால் தேசிய வெறிக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க போன்றவையும் நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கின்றன. 

தமிழகம் தமிழர்கள் திராவிடர்கள் என்ற அடையாளத்தை நாம் இழந்துவிட்டோம் எனில் எவ்வாறு மாபெரும் நாகரிகங்களான எகிப்து, சுமேரியா, பாரசீகம் அராபி மயமானதோ, சிந்து நாகரிகம் இந்து மயமானதோ அதே போலத் திராவிடர்களின் அடையாளங்கள் துடைத்தெறியப்பட்ட மதம், சாதி என்ற அடையாளத்தால் திணிக்கப்பட்டு. மீண்டும் வந்தேறிகளின் காலடியில் அடிமையாகிவிடும் சூழல் ஏற்படும் என்பதை மட்டும் நினைவில் கொள்க.

பெரியார் நல்லவரோ, கெட்டவரோ, அவரது கொள்கைகள் முழுமையானதோ முழுமையற்றதோ  என்பதை விட பெரியாரும், பெரியாரின் கொள்கைகளும் தமிழ் அடையாளங்களை தக்க வைக்கவும் பார்ப்பனம், சாதி, மதம் சார்ந்த நச்சுக் கிருமிகளை கொள்ளவும் தேவைப்படுகின்றன ... 

8 comments :

  1. வணக்கம் சகோ நல்ல பதிவு,

    நாம் திராவிட நாத்திகர்களில் இருந்து பல் கருத்துகளில் மாறுபட்டாலும், பெரியாரை நேசிக்கிறோம், அவரின் இஸ்லாமுக்கு மதம் மாற சொன்ன கருத்டு தவிர்த்து அனைத்து கருத்துகளிலும் உடன் படுகிறோம்.

    இந்துத்வக் கொள்கையாளர்களுக்கு இன்றும் எரிச்சல் தரும் பெயர் பெரியார் என்றால் மிகையாகாது.

    சாதீயம்,மத்வாதம் பேசும் குழுக்களுக்கு பெரியார் வெறுப்பு என்பது இயல்பானதே.

    இப்போதைய வஹாபிகளின் பெரியார் மீதான இந்த விமர்சனத்தின் பிண்னனியில் அரசியல் இருக்கிறது.

    இஸ்லாமின் வரலாற்றில் எப்போதும் நேரடியாக மோதாமல் ,பிரிவினையை ஏற்படுத்டி அதில் குளிர் காய்வார்.
    முக்மது(சல்) முதலில் யூதர்களை, கிறித்த்வர்களை அழித்து ஒழித்தே வலிமைபெற்று பிற மெக்கா காஃபிர்களை வெற்றி கொண்டார்.

    சவுதி அமெரிக்க நட்பு கூட ஒரு எ.கா!!,

    இப்போது இலங்கையிலும் , சிங்களர்கள் உதைத்தாலும் தமிழர்களை விட கொஞ்சம் மேல் இருந்தால் போதும் என்னும் இலங்கை மூமின்களின் போக்கும் ஒரு எ.கா

    வஹாபிகள் திராவிடத்தை எதிர்ப்பது போல் காட்டினால் இந்துத்வ இயக்கங்கள்
    தங்களைக் கண்டு கொள்ளாது என்ற கண்க்கு மட்டுமே!!

    தமிழகத்தில் இந்துத்வ இயக்கங்களுக்கு செல்வாக்கு இல்லாததால், திராவிடத்தை எதிர்ர்ப்பது ஆபத்து இல்லாமல் வளரும் செயல்முறை ஆகும்.

    விமர்சித்தாலும் திராவிட அரசியல் தலைகள் கண்டு கொள்ள மாட்டார்கள் என் எண்ணுகிறார்கள்!!

    எனினும் இந்த வஹாபிகளின் போக்கினை கண்டு, மத வெறி பரப்பும் செயல்களை திராவிட சகோக்கள் கண்டு எதிர்க்க வேண்டுகிறோம்.

    பார்பானை அடி என் பெரியார் கூறியது திரவிட தீவிரவாதம் எனில், குரானி 109 வசனம் பிற மதத்தவரை வெறுக்க ,கொல்ல கூறுவதால் குரானும் தீவிரவாத புத்த்கமே!!
    http://www.thereligionofpeace.com/quran/023-violence.htm
    Question:
    Does the Quran really contain dozens of verses promoting violence?


    Summary Answer:

    The Quran contains at least 109 verses that call Muslims to war with nonbelievers for the sake of Islamic rule. Some are quite graphic, with commands to chop off heads and fingers and kill infidels wherever they may be hiding. Muslims who do not join the fight are called 'hypocrites' and warned that Allah will send them to Hell if they do not join the slaughter.

    http://en.wikipedia.org/wiki/Quran_and_violence

    நன்றி!!

    ReplyDelete
  2. தமிழன் என்பவன் யார்? தமிழர் அடையாளம் என்பது என்ன? இதற்கு ஏதாவது ஒரு வரையறை இருந்தால், அல்லது அவ்வாறு ஒரு வரையறையை உங்களால் உருவாக்க முடிந்தால் - அதன் பிறகு "தமிழ் அடையாளங்களை தமிழ்நாடு இழக்கும் அபாயம்" குறித்து நீட்டி முழக்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழன் என்ற வரையறை உயிரியல் ரீதியாக இன்று கலப்படைந்துவிட்ட போதும், மொழி ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும், சிந்தனை, கலாச்சாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாளம். ஆனால் சாதிய அடையாளங்கள், குறிப்பாக வன்னியர் அடையாளங்களை தக்க வைக்க நினைக்கும் சாதிய வெறியர்களிடம் அதே கேள்வியை திருப்பிக் கேட்கின்றேன். வன்னியர் ( எந்த சாதியோ ) என்ற அடையாளத்துக்கான வரையறையை உங்களால் உருவாக்கவோ, அப்படி ஏதும் இருந்தால் நிறுவவோ இயலுமா.. ! அப்புறம் இங்கே வந்து நீட்டி முழக்கலாமுங்கோ ... !

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. "மொழி ரீதியாகவும்" என்றால் என்ன? என்று விளக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

    தாய் மொழியா? பேச்சு மொழியா? வேறு ஏதாவது மொழியா? - அப்படி ஏதேனும் ஒரு வரையறை இருந்தால் அதை தமிழின உரிமை கோருவோரில் பெரும்பான்மையினர் ஏற்கிறார்களா?

    ReplyDelete
  5. பெரியாரின் திராவிடமும் அம்பேத்கரின் சமூகப்புரட்சியும் தமிழ் மண்ணில் தொடர்ந்து நிலைக்க வேண்டும். திராவிடம் என்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று ஒரு கருத்து நிலவுகிறது.
    அது தவறு.
    பெரியாரையும் அம்பேத்கரையும் ஓரம்கட்டி விட்டு சமூகத்தில் ஒரு புரட்சியையும் செய்ய முடியாது. புரட்சி செய்யாமல் தமிழ்த் தேசியம் அமைக்க முடியாது.

    -இப்படிக்கு தமிழ்த் தேசிய ஆதரவாளன்

    ReplyDelete
  6. ஒருவன் தன்னையும் தன்குடும்பத்தையும் பாதுகாத்துக்கொல்வது எந்த விதத்தில் நியாயம் இல்லாமல் போகும். தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் தன்னை சார்ந்த சமூகத்துக்காகவும் போராடி பாதுகாக்கவும் முன்னேற்றவும் செய்வது தப்பென்று எப்படி சொல்லமுடியும். சாதியையும் மதத்தையும் ஒழித்டுவிட்டால் மட்டும் உனது சமூகத்தில் முன்னேற்றத்தை கொண்டுவரமுடியுமா?

    எது பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கொடுக்கிறதோ அதனை தன்னை சார்ந்த சமூகம் பெறவும் செழிப்படையவும் போராடுகிறார்கள். ஒருவன் தனக்கான நியாயமான உரிமைகளையும் தன் குடும்பத்திற்கான பாதுகாப்பையும் பெறுவது தவறு என்று கூறும் நீங்கள்தான் தவறானவர். ராமதாஸ் அவருடைய சமூகத்திற்கான முன்னேற்றத்தையும் நன்னெறிகளையும் பரப்புகிறார் என்றால் நீ உண்னைச்சார்ந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபடு அதைவிடுத்து குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை.

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.