கனடா தமிழர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம்


கனடாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பணியாற்றிய ஜி.யு போப்பின் ஊடாகவே கனடாவுக்கும் தமிழுக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 1980-களின் பின் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களின் வருகையோடு தான் கனடா தமிழர்களின் முழுமையான வரலாறு தொடங்கியது. உலகம் முழுவதும் தமிழர்கள் விரவி வாழ்கின்ற போதும் மேற்கு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில் தான். அதுவும் டொராண்டோ பெரும்பாகப் பகுதிகளில் தான் மிக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 

கனடா தமிழர்களைப் பொறுத்தவரை 85 % அதிகமானோர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். மீதி தொகையினர் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கனடாவில் தமிழர்களின் தொகை குறித்து இது வரை காலமும் சரியான புள்ளி விவரங்கள் இருந்திருக்கவில்லை. பொதுவாகச் சில தமிழ் அமைப்புக்கள் கனடாவில் 300,000 - 400,000 வரையிலான தமிழர்கள் இருக்கக் கூடும் எனக் கூறி வந்தார்கள். ஆனால் இவை யாவும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட தொகையே ஆகும். 

2011-ஆம் எடுக்கப்பட்ட மொழிவாரிக் கணக்கெடுப்பின் அறிக்கையின் படி ஒட்டு மொத்தக் கனடாவில் 143, 000 தமிழர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தமிழர்களின் தொகையானது கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் 21.3% உயர்வடைந்துள்ளது. பெரும்பாலானோர் இலங்கை, இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் ஆவார்கள். 

கனடா தமிழர்கள் டொராண்டோ நகரில் தான் மிகுதியாக வாழ்கின்றார்கள். இங்கு மட்டும் 102,700 தமிழர்கள் வசிக்கின்றார்கள். இது மொத்த டொராண்டோ மக்கள் தொகையில் 5.7 % ஆகும். டொராண்டோ நகரில் பேசப்படும் ஐந்தாவது பெரும் மொழியாகத் தமிழ் இருக்கின்றது. டொராண்டோ பகுதியில் கூடக் கிழக்கில் உள்ள ஸ்காபுறோ பகுதியின் ரூஜ் ரிவர் வட்டத்திலேயே அதிகளவு தமிழர்கள் வசித்து வருகின்றார்கள். கனடாவின் முதல் தமிழ் பாராளமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபையீசன் கடந்த தேர்தலில் ஸ்காபுறோ-ரூஜ் ரிவர் தொகுதியில் இருந்தே வெற்றிப் பெற்றார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தப்படியாக மன்றியல் நகரில் 13. 730 தமிழர்கள் வசிக்கின்றார்கள். 

Courtesy: National Post

கனடாவின் தமிழர்களின் வளர்ச்சித் தொகை அண்மையக் காலமாகக் குறைவடைந்து வருகின்றது. இதற்கு முக்கியக் காரணம் இலங்கையில் இருந்து அகதிகளின் வருகை குறைவடைந்ததே ஆகும். அத்தோடு முதல் தலைமுறை போன்று இல்லாமல் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் கனடாவுக்குள்ளேயே தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் பொதுவாக இளம் தமிழர்களின் திருமண வயது 30-களில் இருப்பதும், அதிகளவு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளவும் விரும்பாமல் இருப்பதும் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் பிறப்பு வீதமும் ( 2.1 births per woman ) குறைவாகவே உள்ளது. 

இதனால் வரும் காலங்களில் தமிழர்களின் தொகை பெருகுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கருதப்படுகின்றது. இருந்த போதும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து குடியேறும் பட்சத்தில் ஒரு கணிசமான வளர்ச்சித் தொகையை அடைய முடியும் எனவும் ஒரு சிலரால் கூறப்படுகின்றது. ஏனெனில் 25 லட்சம் பேர்க் கொண்ட தமிழ் ஈழ சமூகத்தில் இருந்து மட்டுமே குடியேற்றங்கள் போதுமான வளர்ச்சியைக் கனடா தமிழர்களுக்குத் தந்துவிடாது. மாறாக ஏழு கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் கல்வி, வேலை வாய்ப்பினை பெற குடியேறினால் வருங்காலங்களில் தமிழர்களின் தொகையும் பெருகும், கனடா தமிழர்கள் என்ற அடையாளமும் நிலைத்திருக்கும். 

கனடாவைப் பொறுத்தவரை அகதிகளின் வருகை குறைந்து வருகின்றது, மாறாக நன்கு தொழில் சார்ந்த கல்வியறிவு உடையவர்கள், மாணவர்களை அதிகம் ஈர்ப்பதையே விரும்புகின்றது. 

கடந்த மாதம் கேரள மாநிலத்துக்குச் சென்றிருந்த கனடாவின் குடிவரவுத் துறை அமைச்சர் ஜேசன் கென்னி தென்னிந்தியர்களைக் கனடாவுக்குக் குடியேறும் படி கோரிக்கை வைத்திருந்தார். 
'' கடந்த காலங்களில் பெரும்பான்மையானவர்கள் பஞ்சாபில் இருந்தே வந்தார்கள், ஆனால் அதிக கல்வியறிவு பெற்றுள்ள தென்னிந்திய சமூகத்தினால் கனடா நன்மை அடைய முடியும் என்பதை இப்போது உணர்ந்துள்ளோம்'' என அவர் கேரளத்தின் கொச்சி நகரில் நடந்த பிராவாசிய பாரதிய திவாஸ் மாநாட்டில் உரையாற்றும் போது கூறியிருந்தார். 
அத்தோடு தொழில் சார்ந்த கல்வியறிவு பெற்றவர்கள் எளிதாகக் குடியேறவும், வேலை வாய்ப்புக்களைப் பெறவும் கனடா அரசு முழு உதவிகள் அளிக்கும் எனவும். மாணவர்கள் கல்வி கற்க கனடாவிற்கு வரும் வழிகள் மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியிருந்தார். கனடாவின் துணைத் தூதரகம் ஒன்றினை பெங்களூர் நகரில் நிறுவவும் கனடா அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது. 

கனடாவின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் எந்தவித சாதி, மத, இன பேதமற்ற சமூகமும். அனைத்து மக்களுக்கும் அனைத்து வித உதவிகளையும், பாதுக்காப்பையும் நல்கி வருகின்றது கனடாவின் அரசாங்கம். அத்தோடு உலகின் தலை சிறந்த கல்வி நிலையங்கள், உயர்ந்த வாழ்க்கைத் தரம், வாழ்வதற்குச் சிறந்த நகரங்களாகக் கருதப்படும் டொராண்டோ, வான்கூவர், கல்காரி போன்றவையும் இங்கு அமையப் பெற்றுள்ளது. ஏற்கனவே தமிழர்கள் நல்ல முறையில் இங்குக் கால் பதித்து இருக்கின்ற நிலையில் ஒரு அந்நிய நாட்டுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வு ஒரு போதும் ஏற்படுவதில்லை. இலவச பள்ளிக் கல்வி, இலவச மருத்துவ வசதிகள், உதவித் தொகைகள், வேலை வாய்ப்புக்கள், இரட்டைக் குடியுரிமை பெறும் சூழல், குடும்பத்தோடு வாழ உகந்த நாடாகவும் கனடா போற்றப்படுகின்றது. குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறை, மின்வெட்டு பிரச்சனைகளோ, அரசியல் அடாவடித்தனங்கள், லஞ்சம், ஊழல் ஆகியவை மிகவும் குறைவான ஒரு நாடு கனடா என்பது இதன் தனிச் சிறப்பு.

{ 18 Comments... read them below or add one }

நந்தவனத்தான் said...

கனடாவில் தமிழர் எண்ணிக்கை குறையுதா? ஒருவேளை குளிர் அதிகமென்பதினால் இராத்திரியில் போர்த்தி படுத்துவிடுகிறார்களா? தமிழ்நாட்டில் தன் முழுதிறமை காட்டும் இனம் சோர்ந்துவிட்டதா?

சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலி எனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

சரவணன்-சாரதி said...

அன்பின் செல்வன்,
நல்ல ஒரு விஷயம். ஆனால் இது போதாது என்று தோன்றுகிறது.
நீங்கள் ஏன் சட்ட வழியிலான குடியேற்ற முறைமைகள் பற்றி ஒரு தொடர் பதிவினை எழுதக்கூடாது? அது இன்னும் பலருக்கு பயனுடன் இருக்கும். அதை எழுத சரியான நேரமும் இதுதான் கூட.

வாழ்த்துகள்.

terminater said...

///நீங்கள் ஏன் சட்ட வழியிலான குடியேற்ற முறைமைகள் பற்றி ஒரு தொடர் பதிவினை எழுதக்கூடாது?///
just ask moobeens how to enter Europe and other countries?

மாத்தியோசி மணி மணி said...

அருமையான விளக்கமான கட்டுரை அண்ணா! எமது உறவினர்களில் அதிகம் பேர் கனடாவில்தான் இருக்கிறார்கள்! அவர்கள் சொல்வதும் அதைத்தான்! சிறந்த வாழ்க்கைத்தரம் - கல்வி - தொழில்வாய்ப்பு எல்லாமே சிறப்பாக இருக்காம்!!!!

குட்டன் said...

கனடாவின் சிறப்புகளைச் சொல்லி ஈர்த்திருக்கிறீர்கள்.தகுதியுள்ளவர்கள் குடியேற்றம் பற்றிச் சிந்திக்கலாம்

தருமி said...

ஒரு துண்டு & டிக்கட் போடுங்க ...!!

வேகநரி said...

சிறுத்தையே வெளியில் வா!
அப்படியே தமிழக அரசியல்வாதிங்க கவிதை போலவே உள்ளது சகோ.

வேகநரி said...

அவர்களுக்கு காபிர்கள் ஆட்சி செய்யும் நாடுகளே பூலோக சொர்க்கம்.

நந்தவனத்தான் said...

ஹாஹா, உங்களின் தமிழக அரசியல் தமிழ் குறித்தான அறிவுக்கு வந்தனங்கள், சகோ வேகநரி!

எனது பின்னூட்டத்தில் இருப்பவை "வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!" என முடியும் பாரதிதாசன் கவிதையின் ஆரம்ப வரிகள்! நன்றி

நந்தவனத்தான் said...

தமிழா புயலென புறப்பட்டு கனடாவுக்கு வான்னு இசெ எழுதுவதை பார்த்தால் அகில கனடா தமிழர் முன்னேற்ற கழகம்ன்னு ஆரம்பிச்சு எம்பி பதவிக்கு துண்டு & டிக்கெட் போடுவார் போல இருக்குது.

இக்பால் செல்வன் said...

ஹிஹி ! சிறுத்தையா இருந்த தமிழர்கள் பூனையாகி பல காலம் ஆச்சுங்க ! அதெல்லாம் பாரதிதாசன் காலத்தோட சரி ...

இக்பால் செல்வன் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ! நிச்சயமாக குடியேற்ற முறைகள், வழிகள் பற்றி விரிவாக எழுத முற்படுகின்றேன் ... :)

இக்பால் செல்வன் said...

வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டு குத்துது குடையுது என்கின்றனர் ஐரோப்பியர்கள். தீர்வையும் அவர்கள் தான் முன் வைக்க வேண்டும் !

இக்பால் செல்வன் said...

நிச்சயம் நல்லதொரு நாடு சிற்சில குறைப்பாடுகளும் உள்ளன தான், மற்றப்படி நல்ல வாழ்க்கைத் தரமுள்ள நாடு. என்ன இருந்தாலும் மனம் என்னவோ தமிழ்நாட்டையே எப்போதும் விரும்புகின்றது என்பது தனிக் கதை. :)

இக்பால் செல்வன் said...

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குடியேறலாம் வடநாட்டவர் பலரும் இங்கு வருகின்றனர், திறமையான தமிழர்கள் தென்னிந்தியர்கள் ஏன் வரக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எப்போதும் எழுவதுண்டு !

இக்பால் செல்வன் said...

ஹிஹி ! போட்டுட்டா போச்சு !!! கூட்டணி ஆட்சி அமைப்பு எப்படி என்பது முதல் 5ஜி ஊழல் செய்வது வரைக் கூட சொல்லிக் கொடுக்கலாம் என நினைக்கின்றேன். எதாவது படத்தையும் அவ்வப்போது எதிர்ப்போமாக, வரும் தேர்தலில் அனைத்தும் நமதே !!! அவ்வ்வ்வ்

விழித்துக்கொள் said...

padhvittamaikku nandri
surendran
surendranath1973@gmail.com

விழித்துக்கொள் said...

http://viyaasan.blogspot.in/2013/02/27.html
please note this site

Post a Comment


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.