மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பிரபல வலைப்பதிவர் !

நியாயங்களை நிலை நிறுத்த மனிதர்கள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் போராட வேண்டியுள்ளது. அத்தகைய போராட்டங்கள் பல இழப்புக்களையும் சந்திக்க வேண்டியும் உள்ளது. குறிப்பாகக் காலம் காலமாக அதிகார வர்க்கத்தின் மந்திர குழலாக இருந்து வரும் மதவாதத்தை எதிர்த்து மக்கள் உலகம் எங்கும் போராடத் தொடங்கியுள்ளார்கள். மதம் என்ற மாயையின் பின்னால் பணமும், அதிகாரமும் நிறைந்த ஒரு கொடூரக் கூட்டம் உலகை சுரண்டி வருகின்றது. 

இதே நிலை தான் வங்கதேசத்திலும் கூட ஏற்பட்டுள்ளது. 1970-களில் வங்கதேசம் பாகிஸ்தானின் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை பெற கடுமையாகப் போராடி வந்தது. அந்தச் சமயம் வங்கத்தேசத்தில் நிலைக் கொண்டு இருந்த பாகிஸ்தானிய ராணுவம் எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டது. இத்தகைய கொடூர செயல்களுக்குப் பெரும் துணை புரிந்தவர்கள் இஸ்லாமிய - பாசிச மதவாதிகள். 

மிக முக்கியமாக ஜமாதி இஸ்லாமி என்ற அமைப்பு 1970-களில் வங்கதேசத்தில் தனது காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டவிழ்த்து விட்டு இருந்தது. அச் சமயத்தில் சுமார் 30 லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் என வங்கதேச அதிகாரிகள் கருதுகின்றார்கள். அவர்களில் கணிசமான தொகையினர் இந்துக்கள் ஆவார்கள். பாகிஸ்தானிய ராணுவத்தால் மட்டும் சுமார் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார்கள் எனச் சூசன் பிரவுன்மில்லர் அறிக்கைக் கூறுகின்றது. 

வங்கதேசம் விடுதலையடைந்த பின்னர் இக் குற்றங்களைக் கண்டறிய விசாரணை கமிசன் வைக்கப்பட்டது. இருந்த போதும் பாகிஸ்தானின் ஒத்துழையாமையால் பல பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் தப்பித்துக் கொண்டார்கள். அதே போல வங்கதேசத்தின் அரசியல் நிலையற்ற தன்மையால் கடும் குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான வழக்குக்கள் இழுத்துக் கொண்டே சென்றன. 


இந்த நிலையில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டத்தாக அறியப்படும் 10 பேர் மீதான வழக்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அவர்களில் 8 பேர் வங்கதேசத்தின் ஜமாதிய இஸ்லாமிய கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் முக்கியமான பங்காளிகள் ஆவார்கள். 

கடந்த மாதம் முக்கியக் குற்றவாளியான அப்துல் காதர் முல்லா என்பவருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவன் கொலை, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவன் ஆவான். இத்தனை காலமும் நியாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பொது மக்கள் இந்தத் தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்தார்கள். ஏனெனில் இந்த அப்துல் காதர் முல்லா எனபவன் வங்கதேசத்தின் முக்கிய மதக் குருவாகவும், ஜமாதிய இஸ்லாமிய கட்சியின் மூத்த தலைவருமாகவும் இருப்பவன். 

இந்த நிலையில் 35 வயதான அகமத் ரஜிப் ஐதர் என்ற பிரபல வலைப்பதிவர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். நாத்திகராக அறியப்பட்ட இவர் தொடர்ந்து இஸ்லாமிய -பாசிச வாதிகளுக்கு எதிராக எழுதியும் வந்துள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க வலைப்பதிவர் மற்றும் இணையப் போராளிகள் வலையம் (BOAN) பெரும் மக்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. போர்க் குற்றங்களில் ஈடுபட்ட மதக்குருமார் உட்பட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான மரணத் தண்டனை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். 

இந்த நிலையில் ஜமாதி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் பலரும் இப் போராட்டத்தைக் கலைக்க முயற்சிகள் செய்து வந்தார்கள். அகமத் ரஜிப் ஐதருக்கும் கொலை மிரட்டல்களும் விடுத்து வந்தார்கள். அத்தோடு சோனர் பங்களா என்ற தமது இணையத் தளம் மூலம் இனவெறி மற்றும் விசக் கருத்துக்களையும் பரப்பி மதவாதிகள் பலரையும் உசுப்பிவிட்டார்கள். 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் வலைப்பதிவர் அகம்து ரஜிப் ஐதர். இவரது மரணம் இஸ்லாமிய -பாசிசத்தை எதிர்ப்போர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சனிக் கிழமை தலைநகர் தாக்காவில் அமைந்துள்ள சாபாக் சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை குழுமினார்கள். அகமத் ரஜிப் ஐதரின் இறுதிச் சடங்கை நிறைவேற்றி விட்டு தமது கடுமையான போராட்டங்களைத் தொடங்கினார்கள் அவர்கள். 


இதன் எதிரொலியாக வங்கதேச பிரதமர் சேக் ஹசினா இஸ்லாமிய -பாசிச வாத இணையத்தளத்தை முற்றாக முடக்கியது. அத்தோடு ஜமாதிய இஸ்லாமிய கட்சியை முற்றாகத் தடை செய்யப் போவதாகவும் அறிவித்தார். அத்தோடு முல்லாவின் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும், அதனை மரணத் தண்டனையாக மாற்றவும் கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். 
'' மக்கள் ஒன்றிணைந்தது நிச்சயம் பெரிய விசயம், அது மட்டுமில்லை போர்க்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும்'' எனப் பிரபல எழுத்தாளரும், போராட்டக் குழுவின் முக்கிய உறுப்பினருமான சகானா சித்திக்கி கூறினார். 
'' 1971 போரில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளிக்குக் கடுமையாகத் தண்டனைக் கொடுத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு நீதி கிடைக்கும் '' என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவின் இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறினார். 
நிச்சயம் மதம் சார்ந்த கட்சிகள் சமத்துவச் சமூகத்துக்குப் பெரும் ஆபத்தாகும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை மதக் கருணைக் காட்டாமல் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். அத்தோடு மதப் பாசிசம் வளர்க்கும் ஜமாதிய இஸ்லாமிய போன்ற கட்சிகளைத் தடை செய்யவும் வேண்டும். நீதியை நிலைநாட்ட தொடர்ந்து எழுதி வந்த சக நாத்திக வலைப்பதிவரான அகமத் ரஜிப் ஐதரை படுகொலை செய்தமை யாம் வன்மையாக இங்குக் கண்டிக்கின்றோம், அத்தோடு கொலைக்குக் காரணமானவர்களை கண்டறிந்து பாரபட்சமின்றிக் தண்டிக்க வேண்டுகின்றேன்.

19 comments :

  1. வன்முறையே பெரும்பாலும் வென்றுவிடுகிறது..அஹிம்சையின் வெற்றி, இறுதியில் எல்லாம் தொலைந்தபின்னர் ஏனோதானோவென்று, வந்து சேருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ahimsayin vetri enbathu neengal ahimsaiyai purinthu kollum vithathin irukkirathu !! Dharmam endru ondru irukkirathu athu miga elimayagaa gandhijiyin ahimsayodu muranpadugirathu .. naattu makkalaik kaaptathu athan thalaivargalil kadamai ..theeviravaathigalukku manitha urimai etharkku ?

      Delete
  2. வணக்கம் சகோ,

    சகோதர பதிவர் அகமத் ரஜிப் ஐதர் கொலைக்கு அஞ்சலிகளும் , கொலை செய்த மதவாதிகளுக்கு கண்டனமும்.


    கருத்துரிமைக்கு எதிராக ,மத்வாதிகளும்,ஆதிக்க சக்திகளும் கைகோர்ப்பது வழக்கம்தான் என்றாலும் சமீப காலங்களில் இணைய சுதந்திரத்தை ஒடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன.

    வங்கதேசம் பிரிவினை& சார் அரசியல் குறித்து கொஞ்சம் படித்தேன். பதிவு எழுத வேண்டும்!!!

    இக்கொலை பற்றிய சகோதரி தஸ்லிமா நஸ் ரீனின் பதிவு.

    http://freethoughtblogs.com/taslima/2013/02/16/bangladesh-a-fucked-up-country/

    நன்றி!!!

    ReplyDelete
  3. , போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை மதக் கருணைக் காட்டாமல்...கொலிசெய்தால் ரத்தப்பணம்கொடுக்கலாம் என்று அறிந்தேன்...சோ அதன்மூலம்தப்பித்தால்???

    ReplyDelete
  4. நாம் குஃபார் நாட்டில் வாழ்ந்துவருவதால், தினந்தோறும் காபிர்கள் இஸ்லாமையும் நமது கண்ணுமணி, பொன்னுமணி உயிரினும் மேலான இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் விமர்சித்து வருகிறார்கள் என்பதை பார்க்கிறோம். இதுவே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், இப்படி ஒருவன் நமது இஸ்லாமையும் முகம்மதுவையும் விமர்சித்தான் என்று மெக்காபோனில் போட்டுவிட்டால், கூட்டம் மித்த வேலையை பார்த்துகொள்ளும் என்பதை அறிவோம். இவ்வாறு நாம் அல்லாவையும் முகம்மதுவையும் அவதூறுகளிலிருந்து காப்பாற்றுவதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஒரு விபத்தோ, வெள்ளமோ, தீயோ, பூகம்பமோ, ரயில் விபத்தோ இல்லாமல் நமது அல்லாஹ் காப்பாற்றி, நமது மூமின்கள் மூன்று வேளை மூக்குபிடிக்க சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். நாம் இப்படி அல்லாஹ்வை காப்பாற்றாவிட்டால், அடிதாங்காமல் அல்லாஹ் அழுவார் இல்லையா? அதனால், அல்லாஹ்வை காப்பாற்ற வேண்டும். அப்படி அல்லாஹவையும் முகம்மதையும் திட்டும் காபிர்கள் கழுத்தை அறுத்ததும் நம்ம அல்லாஹ்வும் முகம்மதும் ஒரே குஷியாகிவிடுவார்கள். அல்லாஹ்வை நீ காப்பாத்த போறியா என்று காபிர்கள் கிறுக்குத்தனமாக கேட்பார்கள். அல்லாஹ்வால் காபிர்களை சொந்தமாக அழிக்க முடியாததால்தான், காபிர்கள் வரும்போது அதுவும் மறைந்திருந்து ஒளிந்திருந்து தாக்க சொல்லுகிறார் நம்ம அல்லாஹ்வும் முகம்மதுவும் என்று அறிவோம். இந்த காபிர்களை அல்லாஹ்வால் அழிக்கமுடிந்தால் நம்மை ஏன் காபிர்களை அழிக்க சொல்லப்போகிறார் என்று சிந்திக்க வேண்டும். இதை வைத்துகொண்டு, இந்த அல்லாஹ் குல்லாஹ் பிசினஸே முகம்மது விட்ட ரீல் என்பதற்கு ஆதாரம் என்று காபிர்கள் சொல்லுவார்கள். எந்த காபிர் அப்படி சொல்லுகிறார் என்பதை குறித்து வைத்துகொள்ள வேண்டும்.

    thanks pagaduu

    ReplyDelete
  5. மதம் என்ற மாயையின் பின் பணபலமும் அதிகாரமும் கொண்ட கூட்டம் மக்களை சுரண்டி வருகின்றது#
    பலரும் உணர மறுக்கின்ற உண்மை
    இறந்த பதிவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  6. என்ன இப்படித்தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்களாகக் கொடுத்துவருகிறீர்கள்.!! உலகம் அழியாதா..!

    ReplyDelete
  7. என்ன கொடுமை அண்ணா இது? இப்படியான படுகொலைகளை என்றைக்குத்தான் நிறுத்தப் போகிறார்களோ?

    ReplyDelete
  8. RUSSIA: Police arrest 300 illegal Muslim invaders in raid on an Islamic prayer room in St. Petersburg
    I wonder if they intend to give them the Stalin treatment? One can only hope.

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FH-AyW29nZA

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. http://www.youtube.com/watch?feature=endscreen&v=Uk5IL_SludM&NR=1

    Some GOOD statements in that youtube:

    THE NATION OF MUHAMMAD LOVES DEATH JUST AS YOU LOVE YOUR PORK.

    SHARIA FOR FRANCE ...

    SHARIA FOR THE WORLD IN ITS ENTIRETY...

    ALLAH AKBAR.....

    இதே மாதிரி நம்ம ஊருக்கும் வந்திருவாங்களோ ...?

    ReplyDelete
    Replies
    1. இதே மாதிரி நம்ம ஊருக்கும் வந்திருவாங்களோ ...?
      வந்திருவாங்க ஐயா.அதனாலே தான் பக்கத்து ஊர்காரன் பொதுபலசேனா உ ஷாராயிட்டான்.

      Delete
  11. இதனால் இசுலாமிய மதவாதி கண்டு உலகே அஞ்ச ஆரம்பித்துள்ளது.இசுலாம் மதவிரோதிகளை கொல்ல அனுமதி அளித்துள்ள நிலையில் இசுலாமிய நாடுகளில் வசிப்போர் ஏன் உயிரை பணயம் வைத்து உண்மை பேச முயலுகிறார்கள்?

    தமிழகத்தில் இசுலாம் பெரும்பான்மை அடைந்தால் இசுலாமை போற்றி புகழும் திராவிட பகுத்தறிவாளர் கதி என்னவாகும் என இத்தருணத்தில் சிந்திக்க தோனுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாம் தமிழகத்தில் பெரும்பான்மை அடைந்தால் திராவிட பகுத்தறிவாளர்களை போட்டுதள்ள மாட்டார்கள் ஷரியாவின் படி கழுத்து அறுத்தே கொல்வார்கள் சகோ.

      Delete
    2. உங்களுக்கு அவர்கள் அரசியல் புரியல போல! அப்படியே பெரும்பான்மை ஆனாலும் மிச்சம் உள்ளவர்களையும் மாத்த அந்த திராவிட நாதாரிகளை பயன்படுத்திக்குவாங்க! ஆனால் அவங்க பிள்ளைகளை மதம் மாத்திடுவாங்க, ஹிஹி அவ்ளதான்!

      Delete

  12. satan talking

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dGRTDt5w-dM

    ReplyDelete
  13. Sri Lanka Buddhist monks demand halal boycott

    http://www.haveeru.com.mv/south_asia/47497

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதுங்குங்க ஹலாலை எதிர்கிறீங்க என்ற கேள்விக்கு பொதுபலசேனா தலைவர் சொல்கிறார்.
      Why do we have to eat Halal? If they want to eat, sell them Halal food in a special area in the supermarkets. We don’t want to eat it. If this trend continues, one fine day, one would say that the Quran bans idol worship and that therefore we should bring them down.
      There is no extremism in our philosophy. We are not talking about the Muslim people. We are only telling them don’t impose your ideas on us. We don’t want them.

      ஹி ஹி ஹி
      islam will dominate the world
      அல்லாஹூ அக்பர்

      Delete
  14. Enga sir ponanga marka panthukal

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.