ஐம்பதாண்டுகளில் பாகிஸ்தானாக மாறிவிடும் இங்கிலாந்து

ஐரோப்பிய நாடுகள் இன்று பொருளாதாரச் சரிவை சந்தித்து வருகின்றன, வேலை இல்லாத் திண்டாட்டம் முதல் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். முக்கியமாகக் கனவு தேசமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பிரித்தானியாவின் நிலையோ படு மோசமாக உள்ளது. 

இன்றைய காலக் கட்டத்தில் பிரித்தானியா எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலே அங்கு நடைபெற்ற அதீத குடியேற்றங்களின் பின் விளைவுகள் தான். ஒரு குறுகிய காலக் கட்டத்துக்குள் ஏராளமான புறத்தேசிகளைக் குடியமர்த்துவது ஒரு தேசத்தின் நிலைத்தன்மையைக் குலைத்துவிடும் என்பதைக் கடந்த காலங்களில் பிரித்தானியாவை ஆண்ட தொழிலாளர் கட்சி உணர்ந்திருக்கவில்லை. 

அண்மையில் அங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு பல மோசமான விடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளது. பிரித்தானியாவில் மூன்றில் ஒரு நபர் உள்ளூர் வாசிகளுக்கும், வந்தேறிகளுக்கும் பிரச்சனை இருப்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். 

பெரும்பாலான வந்தேறிகள் கடந்த 30 ஆண்டுகளில் வந்தவர்களாகவே இருக்கின்றார்கள். தொழிலாளர் கட்சியின் தவறான கொள்கைகளால் கடந்த பத்தாண்டுகளில் 15 லட்சம் வந்தேறிகள் பிரித்தானியாவை அடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பெரும் பங்கானோர் வேலைகளுக்குப் போவதில்லை, அரசின் உதவிப் பணத்தில் வாழ்கின்றார்கள், அத்தோடு அனைத்து விடச் சட்ட விரோத செயல்களில் கூட ஈடுபட்டு வருகின்றார்கள். 

கடந்த 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி மொத்த மக்களைத் தொகையில் 3% பேர் மத்திய கிழக்கில் இருந்தும், 2.5 % பேர் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் எனத் தெரிகின்றது. 

நாட்டுக்கு பயனே இல்லாத இத்தகைய குடியேற்றவாசிகளுடன், சட்ட விரோதமாகத் தேசத்துக்குள் ஒழிந்திருப்போரின் தொகை பன்மடங்காக உள்ளது என ஓர் அறிக்கை கூறுகின்றது. லண்டன் வணிகப் பள்ளியின் கணக்கெடுப்பு 863,000 பேர் சட்ட விரோதமாகப் பிரித்தானியாவில் வசித்து வருகின்றார்கள் எனவும், அவர்களில் 70 % ( 604, 000 பேர் ) லண்டன் மாநகரில் உள்ளார்கள் எனத் தெரிவிக்கின்றது. ஆனால் இவர்களின் தொகை இதை விடவும் அதிகமாக இருக்கும் எனப் பல சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது. 

வெளிநாட்டு மாணவர்கள் பிரச்சனையும் அங்குத் தலைத் தூக்கியுள்ளது. எண்ணற்ற மாணவர்கள் கல்வி பயில பிரித்தானியாவுக்குள் நுழைந்து பின்னர் விசா காலவதியான பின்னரும் நாட்டை விட்டு வெளியேறாமல் உள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 250, 000 மாணவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருந்து வருகின்றார்கள். அவர்களில் ஐந்தில் ஒருவருக்குப் பிரித்தானியாவின் நிரந்தர வதிவுரிமை வழங்கபடுகின்றது. இருந்த போதும் பெரும்பான்மையான இதர மாணவர்கள் திரும்பி போவதே இல்லை. 

இத்தகைய சட்ட விரோத மற்றும் பயனற்ற அகதிகள் எனப் பற்பல வந்தேறிகளின் தொகை லண்டன் உட்பட நான்கு நகரங்களில் அதிகரித்து வருகின்றது. சொல்லப் போனால் இங்கிலாந்து வாசிகள் அந்த நகரங்களில் சிறுபான்மையினராக மாறியுள்ளனர். 

அரசாங்கத்தின் உத்தியோகப் பூர்வ கணக்கெடுப்பின் படி வெளிநாடுகளில் பிறந்த 75 லட்சம் பேர் இங்கிலாந்தில் வாழ்கின்றார்கள். அவர்களில் பாதிப் பேர் கடந்த 2011-க்கு பிறகு வந்தவர்கள் என்பது அதிர்ச்சியான ஒரு தகவலாகும். 

அத்தோடு 14 ஆண்டுகள் ஒருவர் அங்கு வாழ்ந்துவிட்டால் பின்னர் அவரை வெளியேற்றுவது என்பது இயலாத காரியமாக உள்ளன. இந்த வழிமுறையைப் பின்பற்றி மட்டும் சுமார் 10, 000 பேர் வதிவுரிமையைப் பெற்றுள்ளார்கள். 

சட்டவிரோத மற்றும் சட்டப்பூர்வமாக அயலகங்களில் இருந்து குடியேறியவர்களில் பலரும் தாழ்நிலை பணிகளையே செய்து வருகின்றார்கள். குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களில் 50 % பேர் எந்தவொரு வேலைக்கும் செல்வதில்லை. 

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 12 லட்சம் முஸ்லிம்கள் இங்கிலாந்தில் குடியேறி உள்ளார்கள்.  இதனால் இங்கிலாந்தின் முஸ்லிம்களின் தொகை 27 லட்சத்தை அடைந்துள்ளது. இவர்களே இன்றைய நிலையில் இரண்டாவது பெரிய மதமாகவும் உருவெடுத்துள்ளார்கள். மிக முக்கியமாகத் தொழிலாளர் கட்சி முஸ்லிம் குடியேற்றங்களைக் கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு ஊக்குவித்துள்ளது. 

மரபுக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் சோமேஸ் அண்மையில் தொழிலாளர் கட்சி, '' குழப்பமான, தவறான எண்ணங்களை வெளிப்படுத்திப் பொறுப்பற்ற அணுகுமுறைகளைக் கொண்ட குடியேற்றக் கொள்கைகளை '' வகுத்தமையால '' கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் அலை போன்ற குடியேற்றங்களை '' பிரித்தானியாவில் நிகழ்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

பிரித்தானியாவில் முன்னதாகக் குடியேறிய முஸ்லிம்கள் உட்படப் பலரும் கூடப் புதிய குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக 1997-யில் இருந்து புதிய வேலை வாய்ப்புக்களில் 70 % வந்தேறிகளால் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அத்தோடு வந்தேறிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் தொகையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அரசின் உதவித் தொகையைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 

எக்ஸ்றீமிஸ் புராஜக்ட் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 66 % பிரித்தானியர்கள் பிரித்தானிய கலாச்சாரம், விழுமியங்களைப் பேணும் கட்சிக்கே வாக்களிப்போம் எனவும், 41 % பேர் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் கட்சிக்கு வாக்களிப்போம் எனவும், 37 % பேர் முஸ்லிம்களின் தொகையைக் கட்டுப்படுத்தும் கட்சிக்கு வாக்களிப்போம் எனவும் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்கள் சமூக உதவித் தொகையைப் பெற வேண்டும் எனவும், வேலைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் பிரித்தானிய முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான அஞ்சம் சவுத்திரி கூறியுள்ளார். இந்தத் தொகையை ''ஜிகாதிய நிதி'' எனவும், இதனைப் பெற்றுக் கொண்டு இஸ்லாமை வளர்க்கவும், புனித போர் நிகழ்த்தவும் வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

45 வயதாகும் அஞ்சம் சவுத்திரி அரசின் உதவித் தொகையைப் பெற்றே வாழ்ந்து வருகின்றார். ஆனால் சுமார் 550, 000 டாலர்கள் ( 2.5 கோடி ரூபாய் ) மதிப்புக்கு சொந்த வீடும் வைத்துள்ளார் என டெலிகிராப் பத்திரிக்கை குற்றம் சாட்டியுள்ளது. 

அத்தோடு சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை என்பது முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களுக்குக் கொடுக்கும் ஜிஸியாப் பணம் எனவும், வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்யத் தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் '' முஸ்லிம்கள் அலை போல வந்து கொண்டிருக்கின்றார்கள், நாங்கள் இங்கிலாந்தை கைப்பற்றிக் கொள்வோம் '' என்றார். 


உடனடியாக இங்கிலாந்தின் குடியேற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என '' குடிவரவு கண்காணிப்பகத்தின் '' பேச்சாளர் அல்ப் மெகமத் கூறுகின்றார். 

இவர்கள் இருவரில் யார் சொல்வதை அரசாங்கம் கேட்கும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதை எல்லாம் வாசிக்கும் போது வெகு விரைவில் இங்கிலாந்து ஒரு பாகிஸ்தானாக உருமாறி விடும் என்பதில் ஐயமில்லை.அங்கு வாழும் வெள்ளையர்கள் கனடாவுக்கோ, வேறு நாடுகளுக்கோ அகதிகளாக வந்தால் கூட ஐயப்படுவதற்கில்லை.

பாரிய அளவில் இன வேற்றுமை குறுகிய காலத்தில் நிகழும் போதும், இருவேறுக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர் சம பங்காக மாறும் போதும், வந்தேறிகளின் தொகை அதி வேகமாய் வளரும் போதும் நிச்சயம் உள் நாட்டு கலகங்கள், போர்கள், இனப் படுகொலைகள் என்பது நிகழும் வாய்ப்புக்கள் மிகுதியாக உள்ளன. இதனால் அடுத்த 25 ஆண்டுகளில் இங்கிலாந்தின் நிலைத்தன்மை குலையவும், உள்நாட்டு யுத்தங்கள், தீவிரவாதங்கள், போன்றவை ஏற்படும் வாய்ப்புக்கள் மிகுந்துள்ளது. 

10 Comments

  1. தங்களது சுய நலத்திற்காக நாட்டை நாசமாக்கியவர்கள் லேபர் கட்சி அரசியல்வாதிகள். இது எல்லோருக்கும் படிப்பினையாக இருக்க வேண்டும். இங்கிலாந்தின் உள்ளவங்க இதற்க்கு எதிராக உள்ள கட்சிக்கு வாக்களித்து நிலமைய திருத்தி எடுக்க வேண்டும்.
    //முஸ்லிம்கள் சமூக உதவித் தொகையைப் பெற வேண்டும் எனவும் வேலைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் பிரித்தானிய முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான அஞ்சம் சவுத்திரி கூறியுள்ளார்.//
    இஸ்லாம் இனிமையானது என்பது இது தானா.

    ----------------------------------------
    இலங்கையின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் ஒரு உண்மையான முற்போக்கான கருத்தை தெரிவித்திருக்கிறார். முஸ்லிம் பெண்கள் முழு உடலும் மறைக்கும் வகையில் அணியும் பர்தா ஆடை மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துகிறது.
    "இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் ஈரான் போன்ற நாடுகளில் கூட இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை.
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவோ பங்களாதேஷ் பிரதமரே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானியோ இப்படியான ஆடைகளை அணிவதில்லை எனவூம் அவர் கூறியூள்ளார். சில மத அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்து வருகிறார்கள்."
    அவர் சொன்ன உண்மை இந்தியாவுக்கும் அதன் தமிழகத்திற்க்கும் மிகவும் பொருந்தும். இதே மாதிரியான ஒரு கருத்தையே க‌னடா முஸ்லீம் காங்கிரஸ் கேட்டு பர்தா த‌டையை கனடா நாடுமுழுவ‌தும் ப‌ர‌வ‌லாக்க‌ வேண்டுமென க‌னேடிய‌ அர‌சிட‌ம் கேட்டது.
    http://viyaasan.blogspot.ca/2013/02/blog-post_4.html

    இலங்கை முற்போக்கு நல்ல எண்ணம் கொண்ட மொஹமட் முஸ்ஸாமில் அவர்களின் கருத்துக்கு இஸ்லாமிய மதவாதிகள் கொடுக்கும் தாக்குதல்களை பாருங்கள்.
    http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_1580.html

    ReplyDelete
  2. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு. இங்கிலாந்தில் சில இடங்களில் வஹாபி குழுக்களின் ஆட்டம் அதிகம் என்பது உண்மையே.இது பெருகி இஸ்கிலாந்தே இஸ்லாமிய நாடாகி விடும் என்பதை நான் ஏற்க மாட்டேன். வெள்ளையர்கள் ஒன்றும் உத்தமர்கள் இல்லை. பல் பூர்வீக இனங்களை அமெரிக்க,ஆஸ்திரேலிய,நியுஜிலாந்தில் காணாமல் போக செய்த்வர்கள் என்பதே வரலாறு.

    ஒரு புறத்தில் வஹாபி பிரச்சாரம்,தீவிரவாதம் ஊக்குவித்தல்,மறுபுறம் அதனை மிகைப் படுத்திக் காட்டி ,மீண்டும் காலனியாதிக்கம் செய்வதின் செயலாக்கமே இது என்கிறேன்.

    வஹாபிகள் வாழும் சமூகத்தில் அனைவரையும் எரிச்சல் படுத்துவதால், முஸ்லிம்களுக்கு அனுதாபம் என்பதே இல்லாமல் போகும்.

    ஆகவே வேண்டாம் என்றால் வந்தேறிகளை ஒரே நாளில் துரத்தி விடலாம். எப்படி ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை விரட்ட இஸ்ரேல் நாடு உருவாக்கி ஒரெ கல்லில் பல மாங்காய் அடித்தார் என்பதை எண்ன வேண்டும்.

    மூன்றாம் உலகப் போரை நோக்கி நடத்தும் ஆதிக்க சக்திகளே போற்றி போற்றி!!!

    இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ள‌ன.

    நன்றி!!

    ReplyDelete
  3. ஐரோப்பிய ஒன்றியம் உருவான நாளில் இருந்தே இங்கிலாந்துக்கு பிரச்சினை .
    இப்ப அதிகம் பேசப்படும் வேற்று நாடு மொழியில் முதல் இடம் பஞ்சாபி இரண்டாமிடம் போலிஷ் .
    பாதி போலந்து இங்கே தான் இக்பால் :)))
    மிகுந்த ரேசிசம் இப்பெல்லாம் ..போலந்து நாட்டவர் எல்லாம் அங்கே கம்பி எண்ணி இங்கே ஓடி வந்த கூட்டம் சிலர் நேராகவே கேட்கிறார்கள் ஆசியர்களை பார்த்து ...நீங்க எதுக்கு இங்கே வந்தீர்கலேன ....இப்ப ரோமாநியரும்,பல்கேரியா நாட்டவரும் கூட இங்கே அதிகம் எல்லாம் சோஷியல் பெனபிட்ஸ் ...இன்னும் நிறைய வசதிகள்தான் காரணம்

    ReplyDelete
  4. ஆங்கிலேயர்களுக்கு இந்த நிலமை வராமல் இருந்தால் நல்லது http://goo.gl/woIWB

    ReplyDelete
  5. ENGLISH DEFENCE LEAGE WORKING HARD TO PRODUCT ENGLAND FROM THIS EVILS. BUT POLITICS ARE PLAYING VERY WELL . SO TOMMY ROBINSON( ENGLISH DEFENCE LEAGE LEADER) ARRESTED FEW MONTH AGO . ON THE OTHERHAND ABU HAMZA ( RADICAL ISLAMIST)
    FREED.THIS IS ENGLAND REAL SITUATIONS. SOUDHI ARABIA MONEY VERY WELL ROLL UK POLITICS.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தயவுடன் ஆக்கப்பூர்வமாக மட்டும் விவாதிக்கலாமே, அதிகமான தொடுப்புக்கள் இட வேண்டாம், இவை யாவும் கூகிளில் இருப்பதை அறிவோம் , நன்றிகள் !

      Delete
  7. ஜிகாதிகள் இன்னும் 20 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தானாக மாற்ற போராடினால் நீங்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னால் என்ன நடக்கும் என்று எழுதுவது நன்றாகவா உள்ளது?

    ReplyDelete
  8. Empire Strikes Back - When Rushdie coined this phrase, the English clapped vociferously reading and hearing it.
    Now, to their chagrin, they come to sense the irony behind it. Tragic irony !

    British culture can't stand now. It is crumbling.

    Culture is oxygen to people. The English are going to get asphyxiated.

    But I think it is too late to control the damage. Death is due !

    ReplyDelete
  9. Empire Strikes Back ! When Rushdie coined this new phrase, the English applauded, little knowing the irony behind it. Now, they come to know it. The tragic irony. It is too late to undo the damage done to their society by the outsiders. Their ancient and time honored culture won't stand: it will crumble now. Culture is oxygen to a people. When it is over, they will get asphyxiated.

    But, to some extent, it is their own doing, as a friend of mine from British Royal Navy has written to me that the institution of marriage in English society has broken down leaving behind single mothers with single child. In other words, the English population is fast disappearing leaving their country awash with the outsiders. A society where every one will be there except the Englishman with his English wife and children.

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.

 
Posts RSSComments RSSBack to top
© 2011 கோடங்கி ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0