நாம் எப்போதும் சொல்லி வரும் ஒரே விடயம் என்னவெனில், எந்தவொரு மனித சமூகப் பிரிவுகளிலும் பலவிதமான உட்குழுக்கள் இருக்கவே செய்யும். ஒரு உட்குழு ஏனைய குழுக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணவே முடியாது என்பது தான். இன்றைய உலகில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் மதவாதமும் ஒன்று என்பதை நாம் மறுக்கவே முடியாது. மதவாதங்கள் பழமைவாதங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதிகாரங்களைக் கைப்பற்றவுமே அதிகம் விரும்புகின்றன. மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வரும் முக்கியச் சமயங்கள் கிறித்தவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்பனவாகும். அத்தோடு சிறிய ஆனால் முக்கியம் வாய்ந்த சமயங்களாக யூதம், சீக்கியம் ஆகின விளங்குகின்றது.
உலக மதாவாதங்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகைப் பிரச்சனைகளை உண்டுப் பண்ணி வருகின்றன எனலாம். முக்கியமாக இந்து சமயத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அதன் முக்கியப் பிரச்சனையே சமத்துவமின்மை ஆகும். சாதியம், வர்க்கம் என்ற அடிப்படையிலான எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. அதே போலக் கிறித்தவ மதம் என்பது அதீத செல்வங்களைச் சேர்ப்பதிலும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதிலும் முனைப்புக் காட்டுகின்றது.
இதே வகையில் இஸ்லாமிய மதம் காட்டும் அச்சுறுத்துலோ வேறு வகையிலானவை. இஸ்லாமிய மதத்தின் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அதிகாரங்களை உலக முழுவதும் நிறுவுவதும், மத்திய கிழக்கின் பழமைவாத வாழ்க்கை முறைகளை உலக மக்களிடம் திணிப்பதுமே ஆகும். பனிப்போர் காலங்களுக்குப் பின்னால் ஏற்பட்ட கணனி யுகத்தில் இஸ்லாமியா தீவிரவாதம் பன்மடங்கு அதிகரித்துள்ளன எனலாம்.
மதம் சார்ந்த வன்முறைகளை அளவில் எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய மதங்களில் இருப்போரே அதிக வன்முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் நிகழ்த்தி வருகின்றனர் என்பதை நாம் அவதானித்துக் கொள்ளலாம். இஸ்லாமிய வன்முறை என்பது இருவகையாக நான் பார்க்கின்றேன். ஒன்று தமக்குள்ளேயே நடத்தப்படும் வன்முறைகள், மற்றொன்று பிறர் மீது நடத்தப்படும் வன்முறைகள்.
தமக்குள்ளேயே நடத்தப்படும் வன்முறைகள் என்பது சுன்னி - சியா - அல்லாவி -அல்லேவி - சூபி என ஒவ்வொரு பிரிவும் தலைமைக்குப் போட்டியிட்டுக் கொள்கின்றன. அதன் தாக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மாலி, லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் சூபி இஸ்லாமியர் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களைக் குறிக்கலாம். அல்லது அல்லாவி பிரிவினர் ஆளும் சிரியாவை வகாபிகள் எதிர்த்துப் போராடுவதைக் கூறலாம். பகரைனில் சுன்னிக்கள் பெரும்பான்மை சியாக்களை அடக்கி வருவதைச் சொல்லலாம். சௌதியில் சியாக்களை ஆளும் சுன்னி முடியரசு அடக்கி வருவதையும் கூறலாம். ரசியாவின் தாதஸ்தானில் இரு பிரிவு முஸ்லிம்கள் அடித்துக் கொள்வது என எங்கெங்கு காணினும் பிரச்சனைகள் மட்டுமே மிச்சம் எனலாம்.
அடுத்து நாம் காணக்கூடியதாக இருப்பது இஸ்லாம் ஏனைய சமூகங்கள் மீது தொடுத்துள்ள போர்களைக் குறிக்கலாம். பாகிஸ்தானில் வஞ்சிக்கப்படும் கிறித்தவர்கள், இந்துக்கள். மலேசியாவில் இரண்டாம் தர மக்கள் ஆக்கப்பட்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், நாத்திகர்கள். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதங்களைக் கூறலாம்.
ஐரோப்பாவில் வந்தேறு இஸ்லாமிய சமூகத்துக்கும் - மதச்சார்ப்பற்ற பூர்வக் குடிகளுக்கும் நிகழும் பெரும் கருத்து வேற்றுமை, அதனால் ஏற்பட்டு வரும் வன்முறைகள் என உலகம் முழுவதும் எதாவது ஒரு சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன எனலாம்.
இப்படியான நிலையில் மேற்கு சமூகங்களில் பல முற்போக்கு மிதவாத இஸ்லாமியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாற்றுக் கருத்துக்களை விதைக்க முற்படுகின்றன. ஆனால் பெரும்பான்மை இஸ்லாமிய சமூகத்தைப் பிரதிபலிப்பது என்னவோ அதன் தீவிரவாத செயல்பாடுகளே ஆகும். அதற்கு முக்கியக் காரணமே, இஸ்லாமிய அடிப்படைவாதங்களைப் பல மிதவாத முஸ்லிம்கள் வெளிப்படையாகக் கண்டிப்பதே இல்லை. ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய சமூகத்தில் எழும் தீவிரவாதங்களை அவர்கள் வெறும் மரபுக்காகக் கண்டிப்பதோடு நின்றுவிடுகின்றது. இஸ்லாமின் மற்றுமொரு பிரச்சனையே அதற்கு ஒரு பெரும் மதக்குரு என்பவை எல்லாம் கிடையாது. ஒவ்வொரு இடத்தில் இருக்கும் இமாம்கள் தத்தமது விருப்பத்துக்கு ஏற்றார் போல இஸ்லாமை வளைக்கமுடியும். ஏனெனில் இஸ்லாம் என்பது வெறும் குரான் என்ற நூலை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய மத நிறுவனர் முகம்மதுவின் மரணத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹதீஸ்கள் எனப்படும் சொல்லாடல்கள் சுமார் 700, 000 வரையில் இருக்கின்றன. இவற்றில் எது உண்மையான ஹதீத்கள் என்பதில் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் சர்ச்சை இருக்கின்றன. ஒரு இமாம் சொல்வார் ஜிகாத் என்பது 7-ம் நூற்றாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பார், இன்னொருவர் சொல்வார் ஜிகாத் என்பது மனித மனதைக் கட்டுப்படுத்தும் போர் என்பார், இன்னொருவர் சொல்வார் ஜிகாத் என்பது ஏனைய முஸ்லிமல்லாதோர் மீது நிகழ்த்தப்படும் போர் என்பார். இதே போல ஒவ்வொரு விடயத்துக்கும் அவர்களுக்குள் சர்ச்சை எழுகின்றன.
இஸ்லாமை கட்டுப்படுத்த இன்றைய காலத்தில் இரு பெரும் பிரிவினருக்குள் தான் போட்டியே நிகழ்கின்றன. ஒன்று மேற்கு நாடுகளைச் சார்ந்து இருக்கும் சௌதியின் தலைமையிலான சுன்னிப் வகையினர். மற்றொன்று சீனா, ரசியாவை சார்ந்திருக்கும் இரானின் தலைமையிலான சியா வகையினர். இவ்விரு நாடுகளுக்கும் மூலதனமாக இருப்பது பெற்ரோல் என்பது தான். பனிப்போர் முடிவுற்ற பின்னர்த் தொடரும் நிழல் போர் தான் இன்றைய இஸ்லாமிய போர்களுக்கு ஆணிவேர் எனலாம். இஸ்லாமின் பன்முகத்தன்மை என்பது வெகு வேகமாக அழிந்து வருகின்றது. அத்தோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாடுகளிலும் மண் சார்ந்த கலாச்சாரங்களோடு வாழ்ந்த இஸ்லாமியர்கள் உள் மதமாற்றங்களைச் சந்தித்து வருகின்றனர். அதனால் அவர்கள் தமது கலாச்சாரங்களை விட்டுக் கொடுத்து வருவதால் சொந்த மண்களிலேயே அந்நியப்படுத்தப் படுகின்றார்கள். வந்தேறு சமூகங்களில் வாழும் பல இஸ்லாமியர்களும் தமது கலாச்சாரங்களை இறுக பற்றிக் கொள்வதன் மூலம் மேற்கு சமூகங்களில் ஒன்றிணைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றார்கள்.
எனது பார்வையில் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதிகளாகவே இருக்கின்றனர் என்பது தான். ஆனால் அவர்கள் பெரும்பாலும் அடிப்படைவாத மதக்குருக்களின் கைப்பாவைகளாக வைக்கப்பட்டு இருப்பது தான். முக்கியமாக மதவாதிகளின் பிரசங்கங்களை உண்மை என நம்பிவிடுகின்றனர் அல்லது அவர்களை எதிர்க்கேள்விக் கேட்க தயங்குகின்றனர். ஏனெனில் பல நாடுகளில் மதக்குருக்கள் அரசுகளின் நேரடியான ஆதரவுகளைப் பெற்றுள்ளனர் என்பதோடு, இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதும் இயலாதக் காரியமாக்கப்பட்டுள்ளது. மதக்குருக்களின் அடாவடித்தனங்களை எதிர்க்கேள்வி கேட்கவே பல மிதவாத முஸ்லிம்கள் தயங்குகின்றார்கள். முழு இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்ல பூரணச் சுதந்திரமுள்ள மதச்சார்ப்பற்ற நாடுகளில் இருப்போரும் கூட அவ்வாறே இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற நிலையில் இருந்து அடாவடி மார்க்கம் என்ற விம்பத்தைப் பெற்று வருகின்றது. மௌனம் சம்மதம் என்பார்கள் - இஸ்லாமிய அடிப்படைவாதங்களை எதிர்க்கேள்விக் கேட்கத் துணியாத எந்தவொரு மிதவாத முஸ்லிம் கூட அதனை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்ற அச்சத்தையும், ஐயத்தையுமே பிற சமூகத்தினரிடம் எழச் செய்கின்றது. மிதவாதிகளின் மௌனங்கள் உங்களின் வருங்கால சந்ததியினரின் வாழ்வை ஆபத்துக்களின் கைகளி அடகு வைக்கப்படுவதாகவே நான் கருதுகின்றேன். எந்தவொரு சமூகமும் வாழு, வாழ விடு என்றக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அது மீறப்படும் போது எழும் முரண்கள் தேவையற்ற இழப்புக்களை மட்டுமே கொண்டு வரும்.
சிலர் இஸ்லாமில் பெருவாரியான மக்கள் இணைவதாகப் பிரச்சாரம் செய்வது எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களின் மூளைச்சலவைகள் என்பதை நாம் மறக்க முடியாது. லிபியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் என்ற திரைப்படம் குறித்தும் அடுத்தப் பதிவுகளில் விவாதிப்போம்.

அடடா, இவர்களுக்குள் இத்தனை பிரிவுகளா? கேட்டால் ஏதோ, ஒற்றுமைக்குப் பேர் போன இனம் என்று மார்தட்டுவார்களே? அப்போ அதுவும் பொய்யா?
ReplyDeleteஇஸ்லாமை கட்டுப்படுத்த இன்றைய காலத்தில் இரு பெரும் பிரிவினருக்குள் தான் போட்டியே நிகழ்கின்றன. ஒன்று மேற்கு நாடுகளைச் சார்ந்து இருக்கும் சௌதியின் தலைமையிலான சுன்னிப் வகையினர். //////
ReplyDeleteஅண்ணே, சவுதியில் இருக்கும் சுவனம் என்ன முஸ்லிம் அண்ணே? அவரும் சுன்னிபிரிவா? அப்படியானால் அவருக்கு மேற்கு நாடுகளைப் பிடிக்குமா? சுவனம் ஒரு இரட்டைவேடதாரி என்று எமக்குத் தெரியும்! கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ அண்ணா!
வந்தேறு சமூகங்களில் வாழும் பல இஸ்லாமியர்களும் தமது கலாச்சாரங்களை இறுக பற்றிக் கொள்வதன் மூலம் மேற்கு சமூகங்களில் ஒன்றிணைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றார்கள். /////
ReplyDeleteஇது 100 வீதம் உண்மை அண்ணா! இங்கு ஃபிரான்ஸில் மூடிக்கட்டிக்கொண்டு, வரும் முகமதிய சகோதரிகளை ஏனைய சமூகத்தினர் அருவெறுப்புப் பார்வை பார்ப்பதை நான் நாள்தோறும் காண்கிறேன்! அவர்கள் ரெயினில் போகும் போது, அவர்கள் ஒரு சீட்டில் அமர்ந்தால், பக்கத்துச் சீட்டு காலியாகவே இருக்கும்! யாரும் சென்று அமரமாட்டர்கள்!
ஆனாலும் அந்த முகமதிய சகோதரிகள் பாவம்! ஏனென்றால், அவர்கள் மூடிக் கட்டாவிட்டால், அவர்களின் புருஷன் என்ற பேரில் இருக்கும் பிசாசு, அவர்களைக் கொன்று அல்லவா போட்டுவிடும்!
இங்கு மாலி நாட்டைச் செர்ந்த கறுவல் முஸ்லிம்கள் சத்தியம் பண்ணும் போது “வல்லா பில்லா” என்றுதான் சத்தியம் செய்வார்கள்! ஆனால் மரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளைச் சேந்த முஸ்லிம்கள் சத்தியம் பண்ணும் போது “இன்ஷா அல்லாஹ்” என்றுதான் சொல்வார்கள்!
ReplyDeleteஆனால் அல்ஜீரியன் முஸ்லிம்களுக்கு மாலி முஸ்லிம்களைப் பிடிக்காது! அவர்களின் வல்லாபில்லாவை இவர்கள் கி்ண்டலடிப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்!
இஸ்லாமிய தீவிரவாததின் போக்கினை கண்டித்து இஸ்லாமியர்களிடையே எந்த எதிர்ப்புக்குரலும் வருவதில்லை.இது ஒரு ஆபத்தான போக்கு.இஸ்லாமியர்களின் முட்டாள்தனம் என்ற திரைப்படத்தை விளம்பரப் படுத்தியவர்களே லிபியாவின் அமெரிக்க தூதுவ தாக்குதல் செய்தவர்களே!திரைப்படம் குறித்த விமர்சனங்களும் கண்டனங்களும் அமெரிக்கர்களிடமிருந்து வந்தாலும் கூட லிபியாவின் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் குறித்தோ அல்லது துதர் கிறிஸ் ஸ்டீவன் இறந்தது குறித்தோ எந்த கண்டனமும் இஸ்லாமியர்களிடமிருந்து வரவில்லை.மாறாக மத பேனர் ஒட்டிய கலாச்சாரமே முன்வைக்கப்படுகிறது.
ReplyDeleteடேனிஷ் கார்ட்டூனும்,சல்மான் ருஷ்டியும் செய்யாத தவறையும்,இன முரண்பாடுகளுக்கான வன்முறைக்கு தளமாக திரைப்படம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.9/12 தேதி,படத்தின் இயக்குனர் பெயரளவில் மட்டும் இருந்து கொண்ட அனானி இயக்குநர் என்பதும்,அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்ட அஜண்டாவாக மாறும் வாய்ப்புக்கள் என பல உள் விவாதங்களை முட்டாள்தன திரைப்படம் உருவாக்கி இருக்கின்றன.
நியோகான் சார்பும்,இஸ்லாமிய மதபார்வையும் உலகிற்கு புதிய ஆபத்துக்களை உருவாக்கும் சூழல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
//அண்ணே, சவுதியில் இருக்கும் சுவனம் என்ன முஸ்லிம் அண்ணே? அவரும் சுன்னிபிரிவா? அப்படியானால் அவருக்கு மேற்கு நாடுகளைப் பிடிக்குமா? சுவனம் ஒரு இரட்டைவேடதாரி என்று எமக்குத் தெரியும்! கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ அண்ணா!//
ReplyDeleteசௌதி அரேபியா உட்பட அரபு நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் சுன்னிப் பிரிவினர்கள் ஆவார்கள். அந்த சுன்னிப் பிரிவின் உட்பிரிவுகளே வகாபி, சலாபி ஆகும். இரண்டும் அமெரிக்காவின் அடிவருடிகள் ... !!!
அமெரிக்காவுக்கு எண்ணெய் தேவை, எண்ணெயோடு அரசியலும் தேவை.. வகாபி, சலாபிகளுக்கு அதிகாரமும், செல்வமும் தேவை ..
சௌதி அரசுகள் ஒருபோதும் அமெரிக்காவை எதிர்த்ததில்லை. ஏனெனில் சௌதி முடியரசே மேற்கு நாடுகள் ஓட்டோமன் பேரரசில் இருந்து பிடித்துக் கொடுத்த பிச்சை. அதன் விசுவாசமே இன்று வரை தொடர்கின்றது. அரபு நாடுகள் அனைத்தும் இயற்கையான நாடுகள் அல்ல. மாறாக மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்டவை..
வெளியில் மட்டும் அமெரிக்க எதிர்ப்பு - ஆனால் உள்ளில் கைக்கோர்பு ... !!!
ரசியாவின் ஆதரவுக் கொண்ட இடது சாரி எண்ணமுடைய அரசுகளைத் தான் மக்கள் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்கா துரத்தி அடித்தது ( லிபியா, எகிப்து, துனிசியா ) .. இன்று அமெரிக்க குடியுரிமை பெற்ற மொர்சி எகிப்தில் அதிபர் ஆனதைக் கூட பலர் பேசுவது இல்லை .. !!!
பல விடயங்கள் இருக்கு சகோ. லிபியா தாக்குதல் கூட அமெரிக்க தேர்தலை முன்னிறுத்திய நடத்தப்பட்டது என்பது எனதுக் கணிப்பு !!!
நிச்சயம் இத்தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றே அடுத்த பதிவில் அலசுவோம்..
பூலோக சுவன விரும்பிகள் மைனஸ் ஓட்டுக்களை மட்டுமே போடுவார்கள் .. கோதாவில் இறங்க மாட்டார்கள் .. கோடங்கியடிக்க நான் ரெடி.. !!! :)
இஸ்லாமிய தீவிரவாததின் போக்கினை கண்டித்து இஸ்லாமியர்களிடையே எந்த எதிர்ப்புக்குரலும் வருவதில்லை.இது ஒரு ஆபத்தான போக்கு //////
ReplyDeleteஅருமையான கருத்து நடா அண்ணா! தனக்குள் சுயவிமர்சனம் செய்துகொள்ளாத எந்தவொரு இனக் குழுமமும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை! முஸ்லிம்களும் அவ்வாறே!
சௌதி அரசுகள் ஒருபோதும் அமெரிக்காவை எதிர்த்ததில்லை. ஏனெனில் சௌதி முடியரசே மேற்கு நாடுகள் ஓட்டோமன் பேரரசில் இருந்து பிடித்துக் கொடுத்த பிச்சை. அதன் விசுவாசமே இன்று வரை தொடர்கின்றது. /////
ReplyDeleteநல்ல விளக்கம் இக்பால் அண்ணா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்! அல்லாவின் ராஜ்ஜியம் உலகம் முழுக்க பரவப் போகிறது என்று நம்பி கொஞ்சம் பயந்துதான் போனேன்!
எதுவெல்லாம் மாற்றங்களை உண்டு பண்ணுமோ - அதையெல்லாம் மதவாதிகள் எதிர்க்கிறார்கள். அத்தகைய மாற்றங்கள் தங்களின் மதம் வீழ்ச்சியடைய காரணமாகி விடுமோ என்று அச்சப்படுகிறார்கள். "தங்கள் மதம் அழிந்து விடுமோ" என்கிற பயமே தீவிரவாதத்தை வளர்க்க உதவுகிறது. அதை தான் உலகம் பார்த்து கொண்டிருக்கிறது.
ReplyDeleteஅல்லாவின் ராஜ்ஜியம் உலகம் முழுக்க பரவப் போகிறது என்று நம்பி கொஞ்சம் பயந்துதான் போனேன்! - //
ReplyDeleteஅது வெறும் மாயைத் தோற்றம் சகோ .. மேற்கு நாடுகளில் மூன்று வகை முஸ்லிம்களை பார்க்கலாம் .. ஒன்று அடையாள முஸ்லிம் ( பெயரளவில் முஸ்லிம்கள் ) இரண்டு மிதவாத முஸ்லிம் ( மதங்களை தனிப்பட்ட ரீதியில் பின்பற்றுவோர், பல மேற்கத்திய விழுமியங்களை ஆதரிப்போர் உதா. கனடிய முஸ்லிம் காங்கிரஸை சொல்லலாம் ), தீவிரவாத முஸ்லிம் ( இவர்கள் தான் ரொம்ப கொக்கரித்துக் கொண்டு இருப்பவர்கள் ) ... ஆகவே அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றாக கருதக் கூடாது ... !!! இஸ்லாம் குறித்த தகவல்கள் பல இஸ்லாமியர்களுக்கு போய் சேருவதில்லை ... இஸ்லாம் என்றில்லை இப்படியான மூன்று பிரிவுகள் அனைத்து மதத்திலும் உண்டு.. என்ன வீதாச்சாரங்கள் தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கு !!!
மணி!நீங்களும் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க:)
ReplyDeleteதன்னோட வீட்டுல சமைக்கிறது பத்தாதுன்னு பக்கத்து வீட்டுல என்ன சமைக்கிறாங்கன்னும் நோட்டம் விடறீங்களே!
@ ராஜ நடராஜன் - // இஸ்லாமிய தீவிரவாததின் போக்கினை கண்டித்து இஸ்லாமியர்களிடையே எந்த எதிர்ப்புக்குரலும் வருவதில்லை.இது ஒரு ஆபத்தான போக்கு. //
ReplyDeleteஇருக்கு ஆனால் ரொம்ப கம்மியாக இருக்கு ... !!! மிதவாதிகளை ஒன்றிணைய மதவாதிகள் விடுவதில்லை ... !!!
//இஸ்லாமியர்களின் முட்டாள்தனம் என்ற திரைப்படத்தை விளம்பரப் படுத்தியவர்களே லிபியாவின் அமெரிக்க தூதுவ தாக்குதல் செய்தவர்களே!//
இதன் பின்னணியில் அமெரிக்கத் தேர்தல் இருக்கின்றது... ஒபாமா ஜெயிப்பதற்கான பிரகாச ஒளிவட்டம் தெரிகின்றது ... !!!
//திரைப்படம் குறித்த விமர்சனங்களும் கண்டனங்களும் அமெரிக்கர்களிடமிருந்து வந்தாலும் கூட லிபியாவின் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் குறித்தோ அல்லது துதர் கிறிஸ் ஸ்டீவன் இறந்தது குறித்தோ எந்த கண்டனமும் இஸ்லாமியர்களிடமிருந்து வரவில்லை.மாறாக மத பேனர் ஒட்டிய கலாச்சாரமே முன்வைக்கப்படுகிறது.//
அதே அதே ! பதிவுலகில் கூட அதே நிலை தான். மரபுக்காக கண்டனம் தெரிவித்து விட்டால் போதுமா, பயிர்கள் ஊடே உள்ள களையறுக்க வேண்டாவா.. என்ன செய்ய களைகள் தானே தலைமையில் இருக்கு.. அதுகள் பயிர்களை தான் அறுக்க முற்படும்... !!!
//அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்ட அஜண்டாவாக மாறும் வாய்ப்புக்கள் என பல உள் விவாதங்களை முட்டாள்தன திரைப்படம் உருவாக்கி இருக்கின்றன.//
கூட்டுப் பங்காளிகளின் பிரிவோம் சந்திப்போம் என்ற கபட நாடகமே இதுவாகும்.. உலகமே லிபியாவை வாய் பிளந்து பார்க்கும் தருவாயில் சிரியாவுக்குள் என்ன சித்து வேளைகள் அரங்கேறப் போகின்றனவோ ? !!!
//நியோகான் சார்பும்,இஸ்லாமிய மதபார்வையும் உலகிற்கு புதிய ஆபத்துக்களை உருவாக்கும் சூழல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.//
என்னைக் கேட்டால் பழைமைவாதமும், பின்நவீனத்துவமும் கைக்கோர்த்து செயல்படுகின்றன. இது முற்போக்காளர்களையும், மிதவாதிகளையும் மிதிக்கக் கூடிய அபாயம் உள்ளது. அமெரிக்காவில் கூட நாத்திகர்கள், மதச்சார்ப்பற்றோர், மாற்றுப் பாலினத்தவர் என இதர பிரிவினர் மீது விசமப் போர்களை நடத்தி வருகின்றது எவாஞ்செலிச கிறித்தவ பின் நவீனத்துவாதிகள் - மதவாதிகள் .. அதை எழுதலாம் என்றால் இஸ்லாமை விட்டு வேறு எங்கும் பார்வையை திருப்பா வண்ணம் சூடான நிகழ்வுகளை இவர்களே ஆக்கிரமித்துவிடுகின்றார்கள் ...
வணக்கம் சகோ,
ReplyDeleteஇன்று நம் பதிவில் கொஞ்சம் வேலையாக இருந்துவிட்டோம். கொஞ்சம் தாமதமாக் வந்து விட்டோம்.
மதவாதிகளில் அனைவரும் ஒன்றே என்றாலும் இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்கள் தனது பெருமித பிரச்சாரங்களை, அரசியல் அமைப்பாக முயல்வதை தவிர்க்கின்றன. இஸ்லாமில் மட்டுமே மதம் சார் அரசியல் அமைப்பு சட்டம் உண்டு.
அது உலக முழுதும் அமைக்க போராடுகின்றார். இதற்கு குரான்,முகம்து விமர்சிக்க்ப்படாமல் இருப்பது மிக மிக மிக ....... அவசியம்.
குரான் இறைவனின் வார்த்தை அல்ல என்றோ, முகமது அவர்களின் குறிப்புகளின் படியே ஒரு சர்சைக்குறிய மனிதர் என்பது வன்முறை கொண்டு மட்டுமே எதிர்கொள்ளப் படுகிறது.
வரலாற்று சான்றுகள் ,மொழியியல்,அகழ்வாய்வுகள் இஸ்லாமின் மீது பிற மதங்கள் போல் நடத்த விடமாட்டார்கள்.
அவர்கள் மதம் பற்றி சொல்வதே இறுதி கருத்து அனைவரும் அதனை ஏற்றே ஆகவேண்டும்.
விமர்சித்தால் புண்படுத்தி விட்டார்கள் என பொங்கி எழுந்து விடுவார்கள்.
சவுதி இபின் சவுத் குடும்பம் மத பெருமித விளம்பர பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதும்.அதன் கைகள் தமிழ் பதிவுலகம் வரை நீண்டுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே,
மதங்களின் மூலங்கள் பற்றிய ஆய்வுகள் அனைத்தும் சான்றுகள் அற்ற கட்டுக் கதைகள் என்றே கூறுகிறது.
எனினும் தனக்கு பிடித்த ஒரு மதத்தை அரசியல் கலப்பின்றி, மனித உரிமை மீறல் செய்யாமல் பின்பற்றலாம்.
பல் மதங்கள் மாறிவிட்டன்.
இபோதிய இந்து(?) மதம்(ங்கள்) பழைஅய வைதீக மதம் அன்று
இபோதைய கிறித்தவம் சென்ற நூற்றாண்டு கிறித்தவம் கூட அல்ல.பல் பிரிவுகளில் ஓரின திருமணம் கூட ஏற்கப் படுகிறது.
இஸ்லாமும் பல மாற்றங்கல் அடைந்தலும் அதனை ஒத்துக் கொள்வது இல்லை.
[ஹோமோ எரக்டஸ்] ஆதமில் இருந்து இன்றுவரை ஒரே மாதிரி என்பதை பலெ கேள்வி கேட்காமல் நம்ப வேண்டும்.
நம்பினால் இறந்தாலும்சுவனம்,நம்பாவிட்டால் இங்கேயே நரகம் என்பதுதான் கொள்கை!!
லிபியாவில் நடந்தது கண்டனதுக்கு உரியது!!
இப்படி சூழல் இங்கு வந்து விடக்கூடாது என்றே நீங்கள்,நான் இன்னும் சில சகோக்களும் முயற்சிக்கிறோம்.அதற்காகவே அனைத்து மத விமர்சனம் செய்து உன் மதமும் பிற மதம் மதம் போல்தான் ஆகவே பெருமித பிரச்சாரம் மத மாற்றம் செய்யாதே என்றே கூறுகிறோம்
எத்தனை பேருக்கு நாம் செய்வது புரிகிறது?
நன்றி
இ.செ.,
ReplyDeleteநிறைய விஷயங்களைத் தந்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியும் பாராட்டும்.
//வரலாற்று சான்றுகள் ,மொழியியல்,அகழ்வாய்வுகள் இஸ்லாமின் மீது பிற மதங்கள் போல் நடத்த விடமாட்டார்கள்.//
ReplyDeleteசானா குரான் விஷயம் பார்த்த போது அது புரிந்தது.
//சவுதி இபின் சவுத் குடும்பம் மத பெருமித விளம்பர பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதும்.அதன் கைகள் தமிழ் பதிவுலகம் வரை நீண்டுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே,//
அப்டியா? நீண்டு வரும் கரங்களுக்கு (தங்கக்) காப்பு எல்லாம் உண்டோ? இருக்கும்... இருக்கும். நான்கூட ஒரு கேள்வி கேட்டேன் நமது நாட்டுக்காரர்களின் பாஸ்போர்ட்களை வாங்கி வைத்து ‘அடிமை’களாக நடத்துகிறார்களே என்றேன். அப்படி வாங்கி வைப்பது என் பொறுப்பு என்று பெருமையாக சுபி கூறினார்!!
" இஸ்லாமிய சகோதரர்களுக்கு நீங்கள் அரபு தேசம் போனால் மட்டும்தான் இப்படியான மத குழப்பங்களில் மாட்டிக் கொள்கிறீர்கள். திடீரென ஐந்து வேலை தொழுவதும், மார்க்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்ததும் உடனே அல்லா மீதான நம்பிக்கை அதிகமாகி நீங்களே நபியாக மாறி இஸ்லாம் அல்லாதோரிடம் உங்கள் நம்பிக்கைகளை கடைவிரிக்கிறீர்கள் கொள்வோர் யாருமற்ற விரக்தியில் மனஉளைச்சல் மேலோங்க சாந்தியும் சமாதானமும் நிலவும் இவ்வுலகில் அதனை முழுதும் அகற்றப் போராடுகிறீர்கள் . மார்க்கம் எல்லோரையும் சமமாக பாவிக்கிறது ஆனால் அரபு தேசமாகட்டும், மலேயா, மற்றும் இன்னபிற இஸ்லாமிய தேசங்களாகட்டும், இத்துப் போன இந்தோனேசியாவாகட்டும் எவனும் இந்திய இஸ்லாமியர்களை சமமாக மதிப்பதில்லை, ஏன் பட்டாணி முஸ்லீம் மற்றவர்களை சமமாக பாவிப்பதில்லை, இப்படி உங்களுக்குள் களையவேண்டிய ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு எங்கள் தனிப்பட்ட மதுப் பழக்கத்தை வைத்து கிண்டலடிப்பது தனிமனித அத்துமீறல். இனி உண்மையான சாந்தியும், சமாதானமும் நிலவ அல்லா உங்களை ஆசிர்வதிப்பாராக. இன்ஷா அல்லா."
ReplyDeleteஇது பிரபல பதிவர் krp senthil அவர்கள் வேறு ஒரு விவாதத்தில் கூறிய வாதம்.
எல்லாரும் மிதவாதிகள்தான் இங்கிருந்து விமானம் ஏறும் வரை.இங்கு வந்தது இறங்கும்போதோ
சகோ.செந்தில் சொன்னது போல ஆகிவிடுகிறார்கள்.
எமது அமெரிக்க எகிபதிய நண்பரொருவர் துபாயில் நடைபெற்ற சகோதரி திருமணத்திற்கு சென்றுவிட்டு மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பினார். அவரது சகோதரரின் 2 வயது குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து வெளியே செல்லும் போதெல்லாம் மசூதியின் தொழுகை அழைப்பு கேட்டால் போதும் அமெரிக்காவில் வளர்ந்த அந்த பையன் ஏதோ ராக் இசை கேட்டாமாதிரி தள்ளுவண்டியிலேயே டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டானாம். அவர் பையனை எவனாவது இசுலாத்தை அவமதிப்பதாக சொல்லி போட்டுவிடப்போகிறார்கள் என வெளியே செல்லுவதை தவிர்த்தாக சொன்னார். இசுலாம் 2 வயது குழந்தையின் பிழையையும் மன்னிக்காது மரணதண்டனை அளிக்கும் என்பது ஜீரணக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
ReplyDeleteசதமடித்த பதிவரின் அவசியமான பதிவு.
ReplyDelete//பிரான்ஸில் மூடிக்கட்டிக்கொண்டு வரும் முகமதிய சகோதரிகளை ஏனைய சமூகத்தினர் அருவெறுப்புப் பார்வை பார்ப்பதை நான் நாள்தோறும் காண்கிறேன்//
பிரான்ஸில் மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் அதே நிலமை தான். அந்த பெண்களின் அப்பாவோ அண்ணரோ கணவனோ சிறிது சிந்திக்க தெரிந்தவராக இருந்தால் அந்த பெண் பர்தாவில் இருந்து தப்பிவிடுவார் மற்றும்படி கொடுமை தான்.
ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,
ReplyDeleteஇன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.
என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,
தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.
ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.
http://patdollard.com/2012/09/typical-muslim-men-raped-ambassador-stevens-before-murder/
ReplyDeleteஇதையும் தெரிஞ்சுக்கங்க..
இதுல ஒரு பெரிய இஸ்லாமிய சிந்தனை மரபு இருக்கு. நேரம் கிடைக்கும்போது விளக்கிருவோம்.
"http://patdollard.com/2012/09/typical-muslim-men-raped-ambassador-stevens-before-murder/"
ReplyDeleteஇது வேறை நடந்திருக்கா? முட்டாள் சுவனம் போற சான்சை மிஸ் பண்ணிட்டானே!!! (i MEAN கொலை பண்ணியவன்)
அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும் தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம் என்று யார் தான் தமிழர் ஒற்றுமையிலே இவ்வளவு அக்கறையாக என்று நினைத்தேன். எல்லாம் நம்ம தாவா பணிகாரர்கள் தான் இருக்க வேண்டும்;)மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ என்ற அறிவுபூர்வமாக உண்மையை சொல்லும் கட்டுரையை கூட ஏற்று கொள்ளாமல் அந்த கட்டுரையில் சொல்லபட்ட உண்மைகளை சிந்தித்து பார்க்காம சாட்டுக்கு அழுக்குருண்டை பிள்ளை-யார்? விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே என்ற கட்டுரையையும் துணைக்கு இழுத்து கொண்டு வந்து தமிழர்களுக்குள்ளே சண்டை என்பது எல்லாம் மிதவாதிகளான இஸ்லாமியர்களும் இந்த கட்டுரையை படித்து சிந்திக்க தொடங்கிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம். அலை அலையாக இஸ்லாமை நோக்கி பிறர் வருகிறார்கள் என்பதெல்லாம் இஸ்லாமில் உள்ளவர்கள் விலகி ஓடாம இருப்பதிற்காக சொல்லபடுபவை.
ReplyDelete@ மாத்தியோசி - மணி - எல்லா மதத்திலும் எல்லாப் பிரிவுகளும் உண்டு சகோ.. ஒரு ரெண்டு பேர் சேர்ந்து புது மதம் ஒன்றை உருவாக்கினால் கூட அங்கு ரெண்டு பிரிவு இருக்கும் .. :) இதில் இஸ்லாம் மட்டும் என்ன விதிவிலக்கா .. வகாபிகளில் பெற்ரோடாலர் பிரச்சாரங்களை மட்டும் நம்பிவிட வேண்டாம் ... !!!
ReplyDelete@ மாத்தியோசி மணி - உண்மையை சொல்லவா. புருக்கா போடுங்கள், முகத்தை மூடுங்கள் என்று குரானில் எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. குரானை விடுங்கள், ஹடித்களில் கூட இல்லை .. ! ஆனால் ஐரோப்பாவுக்கு வரும் பல முஸ்லிம்கள் அதனை வேண்டும் என்றே அணிகின்றனர் - அது தான் ஏன் என எனக்குத் தெரியவில்லை. சரியான விளக்கமில்லாமையால் அவர்களே அவர்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றார்கள். அவ்வளவு தான்.
ReplyDeleteவடக்கு ஆப்பிரிக்கா முஸ்லிம்கள் இடைய இன, சாதியப் பிரிவுகள் நிறைய உள்ளன... ரோமானிய குடியேற்ற வாரிசுகளான இன்றைய வெள்ளை வடக்கு ஆப்பிரிக்க அரபு முஸ்லிம்கள் - கறுப்பின சாகல் பிராந்திய முஸ்லிம்களை துளிக் கூட மதிக்க மாட்டார்கள் சகோ... ! அதே போல சாகல் பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் பலர் சுபிக்கள் ஆவார்கள். கறுப்பின பழங்குடி மத நம்பிக்கை - இஸ்லாம் கலந்த ஒரு பிரிவு இஸ்லாமே அவர்கள் பின்பற்றுவது ... ! வகாபிய மயமாக்கலால் அவர்கள் இன்று கொல்லப்படுவதும், உள் மதமாற்றம் செய்யப்படுவதும், வரலாற்று சின்னங்களை அழிப்பதுமாக பல கொடுமைகளை நம்ம சகுதி அரேபியா வாலாக்களில் வால்கள் அரங்கேற்றி வருகின்றன .. !
ReplyDeleteiqbal,
ReplyDeleteyou should take some time out to read something other than tamil muslim bloggers. it seems you are of the opinion that almost all muslims have same wa haabi tendency. for a change try reading beirutspringdotcom and anindianmuslimdotcom. both of them are written by muslims and present very contradictory opinions.
secondly you have a feeling that western nations are fountains of free speech and liberty whereas muslim nations ans islam curtails it. if that so why america and entire europe(who pride themselves for freedom) is hunting this julian assange? i havent seen a single post in your website about this.
என்னோட கமெண்ட் எங்க சார்?
ReplyDelete@ ரஹ்மான் - மன்னிக்கவும், ஆங்கிலத்தில் எழுத வேண்டாம், அப்படி எழுதினால் தானாகவே ஸ்பாம் பெட்டிக்குள் சென்றுவிடும் ... !!!
ReplyDeleteமுடிந்தவரை தமிழில் எழுதுங்கள். நன்றிகள் !
@ கே.ரஹ்மான் - மாற்றுக் குரல்கள் வருகின்றன, இல்லை என சொல்லவில்லை. கனடிய முஸ்லிம் காங்கிரஸ் கூட கண்டனங்கள் சொல்லியுள்ளன. ஆனால் மாற்றுக் குரல்கள் எங்கும் நசுக்கப்படுகின்றன, மறைக்கப்படுகின்றன, முக்கியமாக சிலர் வன்முறையில் இறங்கும் போது அனைவரின் கவனமும் வன்முறையாளர்களைத் தான் காண்கின்றன.. சிலர் சம்பிரதாயக் கண்டனங்கள் சொன்னாலும், அவர்கள் மீது பிற மக்கள் மீது நம்பிக்கையின்மையே ஏற்படுகின்றது .. காரணம் அவர்களின் அதீத வன் குணமே ஆகும் .. ஏன் இன்றளவு கூட சிலர் ஒசாமா மாவீரன் என்ற கோணத்திலேயே பேசியும், எழுதியும் வருகின்றனர்..
ReplyDeleteவகாபியம் எனக்கு உடன்பாடில்லை தான். ஆனால் நான் வகாபியம் தாண்டி இதர முஸ்லிம்களோடும் நட்பு பூண்டுள்ளேன் .. அகமதியாக்கள், அலாவிகள், சூபிக்கள் சிலர் எம்மோடு நட்புக் கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் குரல்கள் என்றுமே உலக மேடைகளில் ஒலிப்பதில்லை .. உண்மை தானே சகோ.
ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அமெரிக்கா, ரசியா, சீனாவின் நாடகத்தனங்களை பதிவு எழுத நினைத்தேன் இடையில் வேறு பதிவுகளில் கவனம் போனதால் எழுத முடியவில்லை .. நிச்சயம் எழுதுவேன் சகோ..
என்ன சொன்னாலும் வளர்ந்த நாடுகளில் உள்ள கருத்துச் சுதந்திரம் வளரும், வளரா நாடுகளில் உள்ளவற்றை விட அதிகமானவையே அதில எனக்கு மாற்றுக் கருத்தில்லை ... ! ஏனெனில் ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட பின்னரும் கூட பிரித்தனில் உயிரோடு தானே இருக்கின்றார். கொல்லப்படவில்லையே ... ! இதுவே இந்தியாவோ, சீனாவோ அல்லது வேறு நாடாகவோ இருந்தால் நிச்சயம் அவர் கதை வேறாகவே இருந்திருக்கும் ...
ஒரு பாட்டுக்கே கிருஸ்துவர்கள் எதிர்ப்பு காட்டும் போது முஸ்லீம்கள் ஒரு திரைப்படத்திற்க்கு கண்டனம் தெரிவிப்பது இது உங்களுக்கு தீவிரவாதமாய் தெரிகிறதா!!!!இலங்கையில் புத்த திவிரவாதமும், இந்து திவிரவாதமும்(மும்பை&குஜராத், பெண் சாமியாரும் உண்டு)அமெரிக்காவின் கிருஸ்துவ திவிரவாதமும்,யூத திவிரவாதிகளுக்கு சிறுவர் மற்றும் பெண்கள் கூட கணணுக்கு தெரிய மட்டார்கள் சீக்கிய திவிரவாமும்(இந்திரா காந்தி கொலை)எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் இதில் சீக்கியரை தவிர மற்ற அனைவ்ருக்கும் முஸ்லீம்ங்களே இவர்களின் குறி...
ReplyDeleteஇந்து கடவுளை அவமதித்ததாக ஷாருக்கான், மனைவி மீது வழக்கு பாட்னா: இந்து கடவுளான ராதாவை அவமதித்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கௌரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ReplyDeleteபாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹார் இயக்கி வெளிவந்த படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இதை நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், தர்மா புரொடக்ஷனும் சேர்ந்து தயாரித்தன. இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் இந்து கடவுளான ராதாவை அவமதித்துள்ளதாகவும், அதனால் படத்தின் நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி இந்து கடவுளை அவமதித்த குற்றத்திற்காக தி ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் நடித்த நடிகர்கள் வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, இயக்குனர் கரண் ஜோஹார், தயாரிப்பாளர்கள் ஷாருக்கான் கான் அவரது மனைவி கௌரி கான் மற்றும் தர்மா புரொடக்ஷன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சாதார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.