'' க்ளப் ல மப் ல '' - பதிவர்கள்



பதிவர்கள் திருவிழா ஒரு வழியாக நல்ல முறையில் முடிந்து விட்டது. ஒன்று கூடலுக்கு சென்ற பதிவர்கள் விதவிதமான புகைப்படங்களையும், சுவையான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றார்கள். போகாத பதிவர்கள் கூட எதாவது அதுக் குறித்து எழுதி வருகின்றார்கள். இந்நிலையில் சந்திப்பு முன் குடி நல்லதா கெட்டதா என்ற விவாதம் தலைகீழாக மாறி கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கையா அல்லது நம்பிக்கையா என ஒரு விவாதம் தொடர்கின்றது. இடையிடையில் பலரும் மதப் புகைச்சல் என எழுதி வருகின்றார்கள் என்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. 

பதிவுலகம் ரொம்ப சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு வகையில் நல்லது தான் ஏனெனில் பேசப்படாத பல விடயங்களை விமர்சிக்கவும், சிந்திக்கவும், மறுபரிசீலணை செய்யவும் ஆரம்பித்துவிட்டோம். ஆனால் தயவு செய்து கருத்திடுபவர்கள் தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடாமல் கருத்து மோதல்களை நோக்கி செல்லுங்கள் என வேண்டிக் கொள்கின்றேன்.

சில வலைப்பதிவுகளை என்னால் படிக்க இயலவில்லை. அந்த வலைத்தளத்துக்குப் போனாலே ஒரு உதறலாக இருக்கின்றது. ஐயோ ! எனக்கு உதறவில்லை .. வலைதளம் மேலும் கீழுமாக துள்ளுகின்றது. பல நல்ல பதிவுகளைப் படிக்க முடியாமல் இருக்கின்றது. அதனை எப்படி சரி செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. கணணிப் புலிகள் எதாவது டிப்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் ஆகிவிடுமா என்று ஒரு விவாதம் கிளம்பிப் போய் கொண்டிருக்கின்றது. நடுநிலையாக சொல்ல வேண்டுமானால் இல்லை என்றே சொல்ல முடியும். மதங்களில் கூட சில பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மதத்தின் பழக்க வழக்கங்கள் கூட அந்த மதம் தோன்றிய மண்ணின் கலாச்சாரங்களைத் தான் எடுத்துக் கொண்டுள்ளன. அதே மதம் வேறு இடங்களுக்குப் பரவும் போது கலாச்சார முரண்பாடுகள் எழுவதுண்டு. அந்த முரண்பாட்டு மோதலின் போது மக்கள் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு முன்னகர்கின்றனர் அவ்வளவு தான்.

உதாரணத்துக்கு தமிழ் கிறித்தவர்கள் சிலர் பொட்டு வைப்பதைக் காணலாம், ஆனால் சிலர் வைப்பதில்லை. தமிழர்கள் இயல்பாகவே அத்தை - மாமன் மக்களை மணப்பது வழக்கம், ஆனால் தமிழ் இஸ்லாமியர் பெரியபப்பர் - சிற்றப்பர் மக்களைக் கூட மணக்கின்றார்கள். இந்துக்கள் கூட மதம் சார்ந்த சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கின்றார்கள், மதம் சாராத தமிழ்க் கலாச்சாரங்களை பின்பற்றுகின்றார்கள். 

கலாச்சாரங்கள் தான் மதங்களுக்கு மூலமே குறிப்பாக மத்தியக் கிழக்கில் பன்றிக் கறி உண்பதில்லை அது மதப் பழக்க வழக்கத்தின் அங்கமாகிவிட்டது. ஆனால் உண்மையில் அந்த மதங்கள் தோன்ற முன்னரே மக்களிடம் இருந்தப் பழக்க வழக்கங்கள் தான். இந்தியாவில் கூட பாம்புகளை உண்பதில்லை ஏனெனில் இது இந்த மண் சார்ந்த கலாச்சாரம். அதனையே மதங்களும் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அதே மதங்கள் வேறு மண்ணுக்கு இடம் பெயரும் போது மண் சார்ந்த கலாச்சாரங்கள் அங்கு செல்லுபடியாகாமல் போய்விடும். ஒருக் காலத்தில் இந்துக் கோவில்களுக்கு செல்லும் ஆண்கள் மேல்சட்டைப் போடாமலே செல்வார்கள். பிற்காலத்தில் பல இடங்களில் அவை மாறிவிட்டன. நினைத்துப் பாருங்கள் கனடா போன்ற கடும் குளிர் நாடுகளில் மேல்சட்டை இல்லாமல் கோவில்களுக்கு வர முடியுமா என்ன ? இஸ்லாமியர்கள் கதிரவன் உதிப்பதில் இருந்து கதிரவன் மறைவது வரை ரமதான் மாதங்களில் நோன்பு வைக்கின்றார்கள். ஆனால் வட துருவ நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களால் அது முடிவதில்லை ஏனெனில் இங்கு ரமதான் மாதத்தில் பகல் என்பது 18 - 24 மணி நேரம் என நீள்கின்றது.


தமிழர்கள் இலைகளில் சாப்பிடுகின்றார்கள், அந்தப் பக்கம் மடிக்கின்றார்கள், இந்தப் பக்கம் மடிக்கின்றார்கள் என்பது எல்லாம் தென்னாட்டுக் கலாச்சாரங்கள். அவைக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை. வடநாட்டில் வாழை இலையில் சாப்பிடுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் வாழை மரங்கள் பெரும்பாலும் தென்னாட்டில் இருக்கின்றன என்பதும். எதனையும் வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக சொல்லும் பழக்கமுடையவர்கள் தமிழர்கள் என்பதால் அப்படி ஒரு பழக்க வழக்கம் இருந்தது / இருக்கின்றது. ஆனால் காலப் போக்கில் அவை ஒன்றும் கட்டாயப்படமாக்கவில்லை, பல இடங்களில் மாறிவிட்டார்கள். இன்று வாழை இலையில் சாப்பிடுவது அருகி விட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் தான் மதங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் அவை மத சட்டங்களாக ஆக்கப்பட்டுவிட்டன. கலாச்சார பழக்க வழக்கம் சட்டமாக்கப்படாமல் வெறும் பழக்க வழக்கமாக இருக்கும் வரை அவை தேவைக்கு ஏற்றார் போல மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆனால் சட்டமாக்கிவிட்டால் பல இடங்களில் பிரச்சனைகள் தான் எழுகின்றன. தமிழர்கள் எதனையும் சட்டமாக்கி எக்காலத்துக்கும் பொருந்தும் எனக் கட்டளையிட்டு வைத்ததில்லை. தமது வரலாறுகளைக் கூட எழுதி வைக்காதவர்கள் தமிழர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை சங்க இலக்கியங்களில் பார்க்கின்றோம் அவ்வளவு தான். இலக்கியங்கள் என்பது சட்டங்கள் கிடையாது. சுஜாதாவின் கதைகளை வைத்துக் கொண்டு ஆயிரம் ஆண்டுகள் கழித்து தமிழர்களின் கலாச்சாரப் பழகக் வழக்கங்களை அவற்றில் தேடிக் கொண்டும், அவற்றை சட்டமாகவும் கருதிக் கொண்டு இருக்க முடியாது அல்லவா ?

தமிழர்களின் கலாச்சாரம் அனைத்தும் உயர்ந்தவை போற்றப்படல் வேண்டும் என நான் சொல்லவில்லை. தற்பெருமைத் தனம் சமூகத்துக்கு உகந்தது அல்ல. ஆனால் அனைத்தையும் மூடநம்பிக்கை என ஒதுக்கிவிட வேண்டியதில்லை. இடத்துக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளுங்கள், காலத்துக்கு தக்கவாறு பொருந்தாப் பழக்க வழக்கங்களை நீக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான். என்ன மதச் சட்டமாக நாம் அனைத்தையும் கருதிவிட்டால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுகின்றன.

என்ன ஒரு விடயத்தை நாம் எதிர்க்கும் போது அதேப் போன்ற விடயங்களை நாம் நம்மையறியாமல் கூட ஆதரிக்கின்றோமா என மறுபரிசீலணை செய்வது அவசியம். ஒரு விடயத்தை நாம் ஆதரிக்கும் போது உண்மையில் அவை நல்ல விடயமா என்பதையும் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

{ 34 Comments... read them below or add one }

Ayesha Farook said...

கலாச்சாரம் மக்களின் நடைமுறைகள், பழக்கவழக்கம் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடும்.. இவை அனைத்தும் நாம் உருவாகியவை.. நாமே பின்பு இதையும் மாற்றுகிறோம், மாற்றுவோம்.. நல்ல பதிவு தோழரே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சில வலைப்பதிவுகளை என்னால் படிக்க இயலவில்லை. அந்த வலைத்தளத்துக்குப் போனாலே ஒரு உதறலாக இருக்கின்றது. ஐயோ ! எனக்கு உதறவில்லை .. வலைதளம் மேலும் கீழுமாக துள்ளுகின்றது. பல நல்ல பதிவுகளைப் படிக்க முடியாமல் இருக்கின்றது. அதனை எப்படி சரி செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. கணணிப் புலிகள் எதாவது டிப்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும்.//

இதே பிரச்சனையே எனக்கும் குறிப்பாகச் சொன்னால் இன்று ஓசை செல்வாவின் பதிவு என்றும் போல் துள்ளுகிறது, துடிக்கிறது. எப்படி தமிழ்மணத்துக்குத் தெரிவிப்பது.

இக்பால் செல்வன் said...

//இதே பிரச்சனையே எனக்கும் குறிப்பாகச் சொன்னால் இன்று ஓசை செல்வாவின் பதிவு என்றும் போல் துள்ளுகிறது, துடிக்கிறது. எப்படி தமிழ்மணத்துக்குத் தெரிவிப்பது.//

இது தமிழ்மணப் பிரச்சனை இல்லை. ப்ளாக்கர் தளப் பிரச்சனை. ஓசை செல்வாவின் பதிவுகளை என்னால் படிக்கவே முடிவதில்லை. எப்படி சரி செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை. அவர்களின் தளங்களில் உள்ள எதோ ஒரு ஸ்கிரிப்ட் அதிவேக இண்டர்நெட்டுக்கு ஈடுக் கொடுக்க மாட்டேங்கிறது என நினைக்கின்றேன்.... !!!

இதனால் பல அருமையான பதிவுகளின் தலைப்பை மட்டுமே என்னால் வாசிக்க முடிகின்றது. பார்ப்போம் யாருக்கும் வழி தெரிந்திருக்கும் !!!

தணல் said...

//இடத்துக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளுங்கள், காலத்துக்கு தக்கவாறு பொருந்தாப் பழக்க வழக்கங்களை நீக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான்.//

Well said!

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நம் நம்பிக்கையாளர் சகோக்களை பதிவுலகில் யாரும் சரியாக புரிந்து கொள்வது இல்லை என்பது நமக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விடயம்.இப்பதிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

என்னமோ அவர்கள் கலாச்சாரத்திற்கும்,(மூட) நம்பிக்கைகளுக்கும் வித்தியாசம் தெரியாத்வர்கள் போல் காஃபிர்கள் நினைப்பது அறியாமை.

புரிய,அறிய வேண்டிய ஒரே ஒரு விடயம்

" மத புத்தகத்தில் உள்ள ஒவொன்றையும் நியாயப் படுத்து"
[இதில் அடைப்புக்க்குறி,மத குருக்களின் விளக்கமும் நியாயப் படுத்த்ப்படும்.]

இதோடு நின்றால் மட்டும் கூட விட்டு விடலாம்

"மத புத்த்கத்தில் இல்லாததை தவறு என கூறிவிடு"

இதுவே மதப் பிரச்சாரம் செய்யும் வழியாகும்.மத பிரச்சாரம் செய்வது எப்படி என நாம் விள்க்குகிறோம்.இத்வே மூமின்களின் தாவாவுக்கு காஃபிரின் தஃப்சீர் [விள்க்கம்] ஆகும்

எ.கா

1.பெண்கள் ஃபர்தா அணிவது மதக் கட்டளை என்று சொல்லி விட்டால் சின்ன விடயம் ஆகிவிடும்,யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.ஆனால் ஃபர்தா அணிவது கண்ணியம் ,பாதுகாப்பு,சுயமரியாதை என எழுதினால் அபோது அணியாத்வர்கள்???? என கேள்வி வரும் பாருங்கள் அதுதான் தாவா!!!

2. மது&பன்றிக்கரி தடை,மரண தண்டனை,சுன்னத் செய்வது ,பல தார மணம்,மெக்கா நோக்கி தொழுவது,ஹஜ்ஜில் கிரிவலம் செய்வது, சைத்தன் மீது கல் எறிதல் ,கல்லை முத்தமிடல் என அனைத்தும் நியாயப் படுத்த பட்டே ஆக வேண்டும்.விளக்கம் கொடுத்தால் காஃபிர்கள் குழம்பி ஓட வேண்டும்.நேருக்கு நேர் ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா [விவாத்ம] என் கேட்டு கலங்கடிக்க வேண்டும்.


3. காஃபிர் நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாட்டுச் சட்டங்களை மேற்கோள் காட்டுவது அடிக்கடி சிக்கல் ஆவதால்[அதாவது தவறு,பொய் என எளிதில் சான்றுகளுடன் நிரூபிக்கப் படுவதால்] தவிர்ப்பது நல்லது.

ஏன்? எ.கா

மதம் மாறினால், முகம்து,குரானை விமர்சித்தால் இஸ்லாமிய நாட்டு சட்டங்களில் தண்டனை உண்டு. அது இஸ்லாம் அல்ல என் (இபோது) இங்கே மட்டும் மறுக்க வேண்டும்.

பெரும்பான்மை ஆகி விட்டால் இச்சட்டங்களை உடனே கொண்டு வரலாம் என்பதால் இப்போது ஏன் சர்ச்சைக் குறிய சட்டங்களை ஆதரித்து காஃபிர்களிட்ம் கெட்ட பெயர் வாங்க வேண்டும்??.சிந்திக்க மாட்ட்டீர்களா??

4. பதிவுலகில் பரபரப்பை கிளப்ப அடிக்கடி முயல வேண்டும். காஃபிர்களை நல்வழிப்படுத்தவே எழுதுவதாக‌ வேடம் போட வேண்டும். உலகே எங்கள் மதத்திற்கு மாறுகிறது என பீதி கிளப்ப வேண்டும்.பிரச்சினை வந்தால் மதத்தில் கட்டாயம் இல்லை,உங்கள் மதம் உங்களுக்கு என உல்டா அடிக்க வேண்டும்.

இன்னும் நிறைய உண்டு.ஞாபகம் வர மாட்டென் என்கிறது. யாரேனும் விவாதம் செய்தல் அப்போது இன்னும் பல் தந்திரங்களை விளக்குவோம்!!

(நன்றி)


நாய் நக்ஸ் said...

வணக்கம் இக்பால்...
நல்ல பகிர்வு...

எங்கே போனீர்கள் இத்தனை நாள்???

இக்பால் செல்வன் said...

@ நாய் நக்ஸ் - // எங்கே போனீர்கள் இத்தனை நாள்??? //

இத்தனை நாள் என்றால் போன வாரமா ? அல்லது போன வருடத்தைக் கேட்கின்றீர்களா ?

போன வாரம் கொஞ்சம் வேலையாக இருந்தேன் ... பதிவர் சந்திப்புக்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது.

சென்ற ஆண்டு கொஞ்சம் பெர்சனல் பிராப்ளம் அதனால் பதிவு எழுத முடியவில்லை ... !!!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... (TM 1)

விழாவிற்கு வந்திருக்கலாமே... ...ம்... அடுத்தமுறை சந்திப்போம்...

பல தளங்கள் (Google Chrome-ல்) திறக்க முடியவில்லை... Aw, Swap! Something went wrong while displaying this website. - என்று வருகிறது...

இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் (சென்னை விழாவில்) கேட்டேன்...

"தெரியவில்லை... எங்களுக்கும் அப்படித்தான் சில தளங்கள் வருகிறது" என்றார்கள்... (வந்தேமாதரம் - சசி சார் வந்திருந்தால் கேட்கலாம் என்று இருந்தேன்... வரவில்லை...)

உங்களுக்கு தெரிந்தால் விசாரித்து சொல்லுங்கள்... பல நண்பர்களுக்கு உதவும்... நன்றி...

மாத்தியோசி - மணி said...

இக்பால் அண்ணா, சில பதிவர்களின் ப்ளாக் துளுவதற்கு அண்மையில் ப்ளாக்கர் ஏற்படுத்திய மாற்றமே காரணம்! இந்த லிங்கில் சென்று படியுங்கள்! தீர்வு கிடைக்கும்!

http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html

தருமி said...

//பேசப்படாத பல விடயங்களை விமர்சிக்கவும், சிந்திக்கவும், மறுபரிசீலணை செய்யவும் ஆரம்பித்துவிட்டோம். //

இது ஒரு நல்ல மாற்றமாகத் தெரிகிறது. days of silent majority is no more here. நல்லது தானே! ஆனாலும் காபிர்களிடம் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த முமீன்களுக்கு நன்றி சொல்லணும்! நன்றி........

சுவனப் பிரியன் said...

பொது நல சேவை செய்தவிதம்:

பறவைகள் உலகில் பலவிதம்:

ஒவ்வொன்றும் இங்கு ஒரு விதம்:

இது போன்ற குடிக்கும் பெண்களின்

காணொளிகளை பதிவுகளாக போட்டு

ஊரை கெடுப்பதும் ஒரு விதம்!

இக்பால் செல்வன் said...

@ சுவனப்பிரியன் - // இது போன்ற குடிக்கும் பெண்களின், காணொளிகளை பதிவுகளாக போட்டு , ஊரை கெடுப்பதும் ஒரு விதம்! //

அந்தப் பாட்டைக் கேட்டால் தெரியும் .. குடிப்பது தவறு என்று தான் அந்தப்பாடல் சொல்கின்றது !!!

நந்தவனத்தான் said...

//அந்தப் பாட்டைக் கேட்டால் தெரியும் .. குடிப்பது தவறு என்று தான் அந்தப்பாடல் சொல்கின்றது !!! //

தமிழ்நாட்டில் குடிக்கும் ஆண்களோடு ஒப்பிட்டால் மேற்கத்தய தாக்கத்தில் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒன்றுமே இல்லை. ஆனால் இது பெண்களுக்கு மட்டும் குடிக்காதே என அறிவுரை சொல்லும் ஆணாதிக்கப்பாடல்! 'செந்தமிழ் நாட்டு தமிழச்சியே' மாதிரி இது ஒரு புறக்கணிக்கபட வேண்டிய பாடல்.

சார்வாகன் said...


சகோ,

பெண்கள் ஹராம் பீர் குடிப்பது தவறா?

அல்லது




http://jitlim7.blogspot.com/2011/06/halal-beer-today-whats-tomorrow-halal.html

நன்றி

இக்பால் செல்வன் said...

//ஆனால் இது பெண்களுக்கு மட்டும் குடிக்காதே என அறிவுரை சொல்லும் ஆணாதிக்கப்பாடல்! 'செந்தமிழ் நாட்டு தமிழச்சியே' மாதிரி இது ஒரு புறக்கணிக்கபட வேண்டிய பாடல்.//

ஆமோதிக்கின்றேன். ... ஆண்கள் குடிக்கலாம், பெண்கள் குடிக்க கூடாது என்றால் அது ஏற்றத் தாழ்வே !!! இருசாராரும் குடியுங்கள் / அல்லது குடிக்காதீர்கள் என்பது தான் சரி !!!

இந்தப் பாடலுக்கும் பதிவுக்கும் - தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கு !!! புரிந்துக் கொள்பவர்கள் புரிந்துக் கொள்ளலாம் !

thequickfox said...

//சில வலைப்பதிவுகளை என்னால் படிக்க இயலவில்லை. அந்த வலைத்தளத்துக்குப் போனாலே ஒரு உதறலாக இருக்கின்றது//
அஞ்சா சிங்கம்,
உங்க பதிவுகளை என்னால படிக்க முடியவில்லை துள்ளுகிறது.

இக்பால் செல்வன் said...

க்ளப் = குழு ! மப் = வெறி ! பாடல் = நாம் மட்டும் தப்பு செய்வோம், நீங்க செய்யக் கூடாது, பொன்மொழி = ?

நந்தவனத்தான் said...

//க்ளப் = குழு ! மப் = வெறி ! பாடல் = நாம் மட்டும் தப்பு செய்வோம், நீங்க செய்யக் கூடாது, பொன்மொழி = ?//

சார், நீங்க எங்கியோ போயிட்டீங்க, சார்!

இக்பால் செல்வன் said...

//சார், நீங்க எங்கியோ போயிட்டீங்க, சார்! //

:)

இப்படி கலாய்ச்சிட்டீங்களே !!!

இக்பால் செல்வன் said...

ஆனந்த கண்ணீர் !!! கடமையில பாசத்துக்கு இடம் கொடுக்காதே !!!

ஜனகராஜ் காமெடியை அனைவரும் பார்க்கும்படி வேண்டிக் கொள்கின்றேன் !!!

:)

இக்பால் செல்வன் said...

// க்ளப் = குழு ! மப் = வெறி ! பாடல் = நாம் மட்டும் தப்பு செய்வோம், நீங்க செய்யக் கூடாது, பொன்மொழி = ? //

பொன்மொழி = கிழிந்தது வாலை இலை !!!

:)

நந்தவனத்தான் said...

//இப்படி கலாய்ச்சிட்டீங்களே !!!//

உங்க பின்னூட்டத்தை படித்ததும் ஆர் எஸ் சிவாஜி ஜனகராஜிடம் சொல்லும் டயலாக் ஞாபகத்துக்கு வந்தது. அதுல ஆனந்த கண்ணீருக்கு முன்னாடி பாருங்க, ஜனகராஜ் பிணத்தை விழுந்து வித்தியாசமான ஆங்கிளல பார்ப்பார், நீங்க இந்த பாடலை பார்த்தா மாதிரி. எனக்கு பாருங்க ஆணாதிக்கம் அது இதுன்னு வேறெங்கோ சிந்தனை ஓடிவிட்டது!

குட்டிபிசாசு said...

இ.செல்வன்,

…குறிப்பிட்ட துள்ளல் பதிவு refresh ஆகிக்கொண்டே இருக்கும். முழுமையாக தெரியும்போது தொடர்ந்து refresh ஆவதை நிறுத்துங்கள். இப்படித்தான் துள்ளல்பதிவுகளைப் படிக்கிறேன்.

…//இந்தியாவில் கூட பாம்புகளை உண்பதில்லை ஏனெனில் இது இந்த மண் சார்ந்த கலாச்சாரம். அதனையே மதங்களும் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அதே மதங்கள் வேறு மண்ணுக்கு இடம் பெயரும் போது மண் சார்ந்த கலாச்சாரங்கள் அங்கு செல்லுபடியாகாமல் போய்விடும்.//

…பாம்பு திங்கற ஊருக்கு போனால் நடுத்துண்டு நம்ம துண்டா இருக்கணும். இது நம்ம ஊரு பழமொழி.

…@தி.தனபாலன் சார்,

…//நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... (TM 1)

விழாவிற்கு வந்திருக்கலாமே... ...ம்... அடுத்தமுறை சந்திப்போம்...

பல தளங்கள் (Google Chrome-ல்) திறக்க முடியவில்லை... Aw, Swap! Something went wrong while displaying this website. - என்று வருகிறது...

இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் (சென்னை விழாவில்) கேட்டேன்...

"தெரியவில்லை... எங்களுக்கும் அப்படித்தான் சில தளங்கள் வருகிறது" என்றார்கள்... (வந்தேமாதரம் - சசி சார் வந்திருந்தால் கேட்கலாம் என்று இருந்தேன்... வரவில்லை...)

உங்களுக்கு தெரிந்தால் விசாரித்து சொல்லுங்கள்... பல நண்பர்களுக்கு உதவும்... நன்றி...//

…நம்பமுடியவில்லை! இல்லை! இல்லை! இவரா போட்டார்! பின்னூட்டம்! இவ்வளவு பெரிய பின்னூட்டம்!

தொழிற்களம் குழு said...

தொடர்ந்து நல்ல ஆக்கங்கள் அளிக்கின்றீர்கள்..

நன்றி!!

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

Iniyavaniniyavan Iniyavan said...

//பேசப்படாத பல விடயங்களை விமர்சிக்கவும், சிந்திக்கவும், மறுபரிசீலணை செய்யவும் ஆரம்பித்துவிட்டோம். //

உண்மைதான் சகோ இன்னும் சிந்திக்க சிந்திக்க பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். முன்பெல்லாம் முற்போக்குத் தன்மையை வெளியில் சொல்வதற்கே அச்சப்பட்டோம் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேடைப் பேச்சில் துவங்கிய‌ இந்த துணிச்சல் பதிவர் வட்டத்தில் கால் பதிந்து கலக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இனி வரும் காலத்தில் நேருக்கு நேர் மதம் சாரா உரிமையுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

இனியவன்...

சிவா G - THE BOSS said...

அடுத்தவரை பாதிக்காத வரைக்கும் அல்லது நாட்டின் சட்டத்தை மீறாத வரைக்கும் எந்த பழக்க வழக்கமும் ஏற்புடையதே.

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!உங்க தலைப்புக்கு மாற்றாக நல்ல தலைப்பு ஒன்று வைத்திருக்கிறேன்.ஆனால் எப்பவாவது பதிவு போடுற போது நான் உபயோகிக்கலாமென்று இருக்கிறேன்.அதனால் உங்களுக்கு தரமாட்டேனே:)

உண்பது,உடுத்துவது,பழக்க வழக்கங்கள் போன்றவை கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றில் அடங்கும்.இதனை மதங்களுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் சொல்கிற படி கலாச்சார பழக்க வழக்கங்களை மதமாகவும்,சட்டமாகவும் அரேபிய தேசங்களே கொண்டு வந்துள்ளன.முன்பு போப்பாண்டவர் சொல்லும் கருத்துக்களே சட்டவரைமுறையாக இருந்த போதும்,புதிய கண்டுபிடிப்புக்கள்,உருவ வழிபாட்டிலிருந்து பிரிந்து புராட்டஸ்டன்ட் மாற்றங்கள் வந்ததும் இன்னும் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள்,பொருளாதாரம் சார்ந்த மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்திய மேற்கத்திய அரசியலமைப்பையும் மதத்தையும் இரு வேறு நிலைகளில் நிறுத்தி நாட்டின் நலன்களை தீர்மானித்தார்கள்.வளைகுடா நாடுகள் மதம் என்ற ஒற்றைக்கோட்டின் அடிப்படையில் அனைத்தையும் தீர்மானிப்பதால் இரண்டையும் நோக்கும் நாம் முரண்பாடுகளை பேசுகிறோம்.அதற்கென நமக்கென முத்திரைகள் குத்தப்படுவதையும் சமீபத்தில் உணர முடிகிறது.

சகோ.சுவனப்பிரியனுக்கு நீங்க காணொளியை ஒட்டவைப்பதுதான் ஊரைக் கெடுக்கிற மாதிரி இருக்கிறது.பாப் & ராப் உலகளாவிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை.அல்லது காற்றோடு காற்றாக சத்தமில்லாமல் வீட்டிக்குள்ளேயே வந்து விட்டால் பரவாயில்லை:)

தொலைக்காட்சி,இணைய அலைகள் கடவுள் பாதி மிருகம் பாதி, எந்த அலை சாமி,எந்த அலை பேய் எனக்கூட பட்டிமன்றம் நடத்தலாம்:)

இக்பால் செல்வன் said...

//ஜனகராஜ் பிணத்தை விழுந்து வித்தியாசமான ஆங்கிளல பார்ப்பார், நீங்க இந்த பாடலை பார்த்தா மாதிரி. எனக்கு பாருங்க ஆணாதிக்கம் அது இதுன்னு வேறெங்கோ சிந்தனை ஓடிவிட்டது!//

நந்தவனத்தான் சார் - நீங்க எங்கேயோ போய்ட்டீங்க !!! ஹிஹி !!

மனித மனம் பன்நோக்குடையது என்பது இயல்பான ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் ஒருவிதம் !!!

இக்பால் செல்வன் said...

@ குட்டிபிசாசு - // குறிப்பிட்ட துள்ளல் பதிவு refresh ஆகிக்கொண்டே இருக்கும். முழுமையாக தெரியும்போது தொடர்ந்து refresh ஆவதை நிறுத்துங்கள். இப்படித்தான் துள்ளல்பதிவுகளைப் படிக்கிறேன். //

அதே தான் ! எப்படி refresh ஆவதை நிறுத்துவது ... அதையும் சொல்லிவிட்டால் புண்ணியமாகப் போகுமுங்க !

இக்பால் செல்வன் said...

@ குட்டிபிசாசு - // நம்பமுடியவில்லை! இல்லை! இல்லை! இவரா போட்டார்! பின்னூட்டம்! இவ்வளவு பெரிய பின்னூட்டம்! //

அடிக்கடி இங்கு வந்துப் போகின்றார் அல்லவா ! அதன் தாக்கமோ என்னவோ ?

இக்பால் செல்வன் said...

@ தொழிற்களம் - // தொடர்ந்து நல்ல ஆக்கங்கள் அளிக்கின்றீர்கள்.. //

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் !!!

இக்பால் செல்வன் said...

@ இனியவன் - // முன்பெல்லாம் முற்போக்குத் தன்மையை வெளியில் சொல்வதற்கே அச்சப்பட்டோம் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. //

வருங்காலத்தில் அது இன்னும் மாறும் என்பதில் ஐயமில்லை.

//இனி வரும் காலத்தில் நேருக்கு நேர் மதம் சாரா உரிமையுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கலாம்.//

கண்டிப்பாக அது நடக்கும் என நானும் நம்புகின்றேன் ..

இக்பால் செல்வன் said...

@ சிவாஜி தி பாஸ் - // அடுத்தவரை பாதிக்காத வரைக்கும் அல்லது நாட்டின் சட்டத்தை மீறாத வரைக்கும் எந்த பழக்க வழக்கமும் ஏற்புடையதே. //

மிகச் சரியாக சொன்னீர்கள் .. சமூகத்துக்கும், அடுத்தவருக்கும் பாதிபில்லாத எந்தப் பழக்கமும் ஏற்புடையதே !!!

rajan said...

இக்பால்,

//அதே தான் ! எப்படி refresh ஆவதை நிறுத்துவது ... அதையும் சொல்லிவிட்டால் புண்ணியமாகப் போகுமுங்க !//

பதிவில் CURSOR ஐ வைத்து RIGHT CLICK & STOP அழுத்துங்க. சில வேளை 2, 3 தடவை செய்ய வேண்டியிருக்கும்

Post a Comment


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.