எனக்குப் பிடித்த ஐந்து தமிழ் திரட்டிகள்

தமிழ் வலைப்பதிவுகள் இன்று பலரால் எழுதப்படவும், வாசிக்கப்படவும் செய்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமிழில் உள்ள திரட்டிகள் தான். தமிழில் திரட்டிகள் இல்லாமல் போயிருந்தால் ஒருவேளை தமிழ் வலைப்பதிவுலகம் மந்தக் கதியிலேயே சென்றிருக்கும். குறிப்பாக தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்ததில் தமிழ் திரட்டிகளின் பங்கு மிக மிக அதிகமே ஆகும். இன்று தமிழில் 20-க்கும் மேலான திரட்டிகள் இருக்கின்றன. பெரும்பாலானவை புக்மார்க் வகையறாக்கள் தான். இருந்தாலும் எனக்கு சில திரட்டிகள் மிகவும் பிடித்திருந்தன. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனலாம். அவற்றின் படி அவற்றில் ஐந்தினை இங்கு பட்டியலிடுகின்றேன்.

தமிழ்மணம் :

தமிழில் ஆரம்பகாலங்களில் இருந்தே சேவையாற்றி வரும் திரட்டி தமிழ்மணம் ஆகும். இதில் ஒரு முறை இணைத்துவிட்டால் தானாகவே பதிவுகள் திரட்டப்படுகின்றது. அத்தோடு மட்டுமில்லாமல் வாக்குப் பட்டியும் உள்ளது. தமிழ் மண நட்சத்திரப் பதிவர் பகுதி பலரை அடையாளம் காண செய்த அருமையான பகுதியாகும். தமிழ்மணத்தில் பிரபல பதிவுகள், கருத்துக்கள், வாக்கின் அடிப்படையிலான பதிவுகள் என அனைத்து அம்சங்களும் உள்ளன. இதில் உள்ளக் குறைப்பாடு சில நேரங்களில் வலைப்பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்மண வாக்குப்பட்டி லோட் ஆக நேரம் பிடிக்கின்றது. அதனால் பதிவுகளைப் படிக்க சிரமமாக இருக்கின்றது. மற்றும் ஒரு குறைப்பாடு தமிழ்மணத்தில் புகைப்படங்கள் திரட்டப்படுவதில்லை. மற்றப்படி அதிக வாசகர்களைப் பெற்றுத் தரவதில் தமிழ்மணமே முன்னோடியாக இருக்கின்றது.

திரட்டி :

மிகவும் எளிமையான திரட்டி திரட்டி.காம் ஆகும். ஒருமுறை பதிவை இணைத்தால் போதும் பதிவுகள் திரட்டப்படும். பதிவுகளை வகைகளாக பிரித்து ஓரத்தில் காண்பிக்கப்படுவது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

தமிழ்வெளி :

தமிழ்வெளியில் ஒருமுறை பதிவுகளை இணைத்துவிட்டால் தானாகவே பதிவுகள் திரட்டப்பட்டு விடும். சூடான பதிவுகள் என்ற பிரிவில் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள் காண்பிக்கப்படும். ஓரத்தில் பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் தனித் தனியாகவும் காண்பிக்கப்படும். இதன் சிறப்பு இதில் புகைப்படங்களும் சேர்ந்து திரட்டப்படும் என்பதே.

சங்கமம்:

எனக்குப் பிடித்த மற்றுமொரு திரட்டி சங்கமம் ஆகும். தானியங்கி திரட்டி என்பதால் ஒருமுறை இணைத்தால் போதுமானது. பார்க்க எளிமையானத் தோற்றத்தில் படிக்க வசதியாகவும் இருக்கும். பதிவுகளுக்கு நம்மால் வாக்களிக்கவும் இயலும். வாக்குப்பட்டி எதுவும் வலைத்தளத்தில் சேர்க்கத் தேவை இல்லை. மிகவும் அழகாக குறிச்சொற்கள் வகைப்படுத்தப்பட்டு பதிவுகள் தனித்தனியாக காட்டப்படுகின்றது.

தமிழ்10 :

நாம் நமது ஒவ்வொரு பதிவுகளையும் இணைக்க வேண்டும் என்றாலும் இணைப்பதற்கு வசதியான ஒரு தளம். நாம் தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை, மாறாக நமது கூகிள் கணக்குடனேயே உள்நுழைய முடியும். வாக்களிக்கும் வசதியும் உள்ளது. வாக்குப் பட்டியும் உள்ளது அதனை நமது தளங்களில் இணைத்துக் கொள்ளவும் முடியும். புகைப்படங்களோடு சேர்த்து பதிவுகள் திரட்டப்படுகின்றன. பதிவுகளை இணைப்பதில் எந்தவொரு சிக்கலும் இருப்பதில்லை.

தமிழில் மேலும் எண்ணற்ற திரட்டிகள் செயல்பட்டு வருகின்றன அவற்றில் முக்கியமானது தமிழிஸ் தற்போது இண்ட்லி. ஆனால் இண்ட்லியில் அண்மைக் காலமாக பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கின்றன. உள்நுழைவது, பாஸ்வேர்ட் மாற்றுவது, பதிவுகளை இணைப்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. அதே போல இன்னும் பல திரட்டிகள் இருக்கின்றன அவை உலவு, தமிழ் பெஸ்ட், உடான்ஸ், வலையகம், நம்குரல், ஹாரம், வலைப்பூக்கள், யாழ்தேவி, ஈகரை, இனிய தமிழ், தேன்கூடு, இதமிழ் எனப் பட்டியல் நீள்கின்றது.

கோடங்கித் தளம் சார்பாக தமிழ் பகுத்தறிவாளர்கள் எழுதும் பதிவுகளைத் திரட்டும் தமிழ் பகுத்தறிவாளர்கள் என்னும் சிறியத் திரட்டியும் செயல்பட்டு வருகின்றது.

மேலே பட்டியலிடப் பட்டுள்ள திரட்டிகள் எனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலானவையே ஆகும். பலரும் பலவிதமான திரட்டிகளை விரும்புவார்கள்.

நீங்கள் விரும்பும் திரட்டிகள் குறித்து உங்கள் கருத்தினை இங்கு தெரிவித்து செல்லலாமே !


11 comments :

  1. அப்படியே அந்தந்த திரட்டிக்கான உரலையும் கொடுத்தால் படிப்பவர்களுக்கு இன்னும் வசதியாக இருக்குமே.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.in/

    ReplyDelete
  2. எனக்குத்தெரிந்து இண்டிலியில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை! என்னுடைய பதிவுகளை அங்கு விரைவாக இணைக்கிறேன்! தமிழ் 10ல் தான் இணைக்க முடியவில்லை! சங்கமம்திரட்டி பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன்! சிறந்தபதிவு! நன்றி!

    ReplyDelete
  3. தங்களுக்குப் பிடித்த ஐந்து தமிழ் திரட்டிகளில் எங்கள் திரட்டிக்கு இடமில்லை போலும்... இனிவரும் காலங்களில் அந்த இடத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம்...

    இண்ட்லியை விட்டுவிட்டீர்களே... பொதுவாக பிளாக்குகளுக்கு இண்ட்லியில் இருந்து வரும் வாசகர்களின் எண்ணிக்கைதான் மிக மிக அதிகம்...

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு...
    Indli and udanZ இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
    வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

    நன்றி.
    (த.ம. 1)

    ReplyDelete
  5. @ ik way - நிச்சயமாக தொடுப்புக்களைக் கொடுக்கின்றேன். நன்றிகள் !

    ReplyDelete
  6. @ s suresh -தெரியவில்லை சகோ. எனக்கு இண்ட்லியில் பிரச்சனை எழுகின்றது. எனது பாஸ்வேர்டை மாற்ற முயன்றுவருகின்றேன் முடியவில்லை. error காட்டுகின்றது ...

    ReplyDelete
  7. @ Hotlinks - உங்களின் தளம் பற்றி அறிந்துக் கொண்டேன் . மிகவும் எளிமையான லே அவுட் எனக்குப் பிடித்து இருந்தது... நிச்சயம் தொடர்ந்து பயன்படுத்த முனைகின்றேன்.. அதன் நன்மை தீமைகள் புரிந்த பின் எதிர்காலப் பதிவில் ஐந்தைப் பத்தாக்கி பதிவிடுகின்றேன். நன்றிகள் ...

    ReplyDelete
  8. @ திண்டுக்கல் தனபாலன் - உடான்ஸை பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன் .. எதிர்க்காலத்தில் சிறந்தப் பத்து திரட்டிகள் என்பவைக் குறித்து எழுதும் போது அதுவும் இருக்கும் என நம்புகின்றேன்.

    ReplyDelete
  9. தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. இக்பால்,

    இன்ட்லி, இன்டிபிலாக்கர் இரண்டிலும் தான் என்ப்பதிவு எளிதாக இணையுது, மற்ற எதிலும் சரியாக இணைவதில்லை, ஒருப்பதிவு இணையும் ஒருப்பதிவு இணையாது என கண்ணாம்பூச்சி ஆடும் :-))

    ஹாட் லிங்ஸ் எல்லாம் திரட்டின்னு சொல்லிக்கிட்டு அலையுறாங்களே என்ன கொடுமை சார் இது :-))

    ReplyDelete
  11. @ டோக்கா டாக்கீஸ் - மிக்க நன்றி !

    @ வவ்வால் - எனக்கு இண்ட்லியில் பிரச்சனை வருகின்றது. தமிழ் 10 சரியாக இயங்குகின்றது . இண்டி ப்ளாக்கரில் நான் இணைப்பதில்லை ..

    ஹாட்லிங்க்ஸ் பற்றி இன்று தான் கேள்வி பட்டேன் .. எனக்குத் தானியங்கி திரட்டிகள் மீதே அதிக விருப்பம். ஒவ்வொரு வாட்டியும் போய் இணைக்கத் தேவை இல்லை.

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.