ஒலிம்பிக்கில் பெண்களுக்கு மெல்லத் திறந்தது கதவு !


ஒலிம்பிக்கின் நூறு ஆண்டுக்கால வரலாற்றில் லண்டன் மாநகரில் இன்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டி மிக முக்கியமான ஒன்றாகும். அது என்னவெனில் இந்த ஒலிம்பிக்கில் தான் பங்கேற்கும் அனைத்து நாடுகளில் இருந்தும் பெண்கள் கலந்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இதுவரைக் காலம் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்த புருணே, கத்தார், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் முதன்முறையாக பெண்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக சௌதி அரேபியா சார்பாக இரு பெண்கள் கலந்துக் கொள்கின்றார்கள் என்பதே முக்கிய செய்தியாக இருக்கின்றது. 

ஒரு வழியாக பெண்களுக்கு தடை சொல்லி வந்த கடைசி மூன்று நாடுகளும் வழிவிட்டுள்ளன. சௌதியின் சார்பாக கலந்துகொள்ளும் 19 வயதான சாரா அத்தர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொள்கின்றார். சௌதி சார்பாக இவர் கலந்துக் கொண்டாலும் சாரா அத்தர் அமெரிக்க குடியுரிமைப் பெற்ற பெண், தனது வாழ்வின் பெரும்பங்கான பகுதியை அமெரிக்காவில் கழித்தவர். சௌதி அரேபியாவின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி முழுக்கை சட்டையும், நீள கால்சட்டையும், தலைமுடியினை மூடி பயிற்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். இருந்த போதிலும் பெப்பர்டின் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் அங்கு அவர் பங்கேற்ற போட்டிகளில் அரைக் கால் டவுசரில், தலைமுடியினை மூடாமலேயே பங்கேற்று வந்தார் .... 

சௌதியின் சார்பாக கலந்து கொள்ளும் சௌதி குடிவாசியான வாட்ஜான் அலி செராஜ் அப்துல்ரஹிம் ஷாகர்கனி என்னும் பெண் ஜூடோ போட்டிகளில் கலந்துக் கொள்ள இருக்கின்றார். ஆனால் இவரின் போட்டிகளில் பங்கேற்கும் சூழல் மிகவும் சுவராசியமாக மாறியுள்ளது. 

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பெண்களுக்கு சௌதி அரேபியா முக்கிய மூன்று கட்டளைகளைக் கொடுத்து இருந்தது. அதாவது 

1. ஷரியா உடைகளையே அணிய வேண்டும். கை, கால், தலை ஆகியவை மூடப்படல் வேண்டும்.

2. பெண்கள் எங்கு சென்றாலும் ஆண் துணையோடே போக வேண்டும்.

3. வேற்று ஆண்களோடு பேசவோ, பழகவோ கூடாது.

ஆனால் அனைத்துலக ஜூடோ கழகத் தலைவர் மாரிய விசர் கூறியதாவது : ஜூடோ போட்டியில் கலந்து கொள்பவர்கள் தலையினை மூடக் கூடாது. ஏனெனில் தலையில் அடிப்பட்டு காயங்கள் ஏற்பட்டால் தலையை மூடுவதால் கவனிக்கப்படாமல் போகக் கூடும், இது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தாகி விடும் என்பதே. ஆனால் போட்டியின் போது என்ன நடக்கப் போகுது எனத் தெரியவில்லை, இதுவரைக் கலந்துக் கொண்ட பயிற்சிகளில் வாட்ஜன் தலையில் முக்காடு போட்டே கலந்துக் கொண்டார். 

கத்தார் அண்மையக் காலமாக பல சமூக மாற்றங்களை சந்தித்து வருகின்றது. மேற்கத்தியத் தாக்கம் அதிகம் அங்கு தெரிகின்றது. இந்த ஒலிம்பிக்கில் கத்தாரில் இருந்து நான்கு பெண்கள் கலந்துக் கொள்கின்றார்கள். நடா அர்காஜி என்பவர் நீச்சல் போட்டியிலும், நூர் அல்-மாலிகி தடகளத்திலும், அயா மக்தி டேபிள் டென்னிஸிலும், பாகியா அல்-ஹமாத் துப்பாக்கிச் சூட்டிலும் கலந்துக் கொள்கின்றார்கள். 


குறிப்பாக அல் ஜசீரா உட்பட அனைத்து தொலைக் காட்சிகளும் நடா அர்காஜியினை மாறி மாறி பேட்டிக் கண்டு வந்தன. 17 வயது அர்காஜி நீச்சல் உடையிலேயே நீந்தவிருக்கின்றார். தலையில் முக்காடு போடப் போவதும் இல்லை என்பதே. குறிப்பாக அர்காஜியின் குடும்பத்தினர் இவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளனர். அல் அரேபியா தொலைக்காட்சி கத்தாரின் பெண்கள் அணியினரை பெரிதும் கவர் செய்து செய்திகள் வெளியிட்டன. 

புருணே சார்பாக மசியா மகுசின் என்ற பெண்மணி தடகளத்தில் பங்கேற்கின்றார். அவரே அந்நாட்டு கொடியினை அணிவகுப்பில் தாங்கி வரவுள்ளர். மனித உரிமைகள் ஆணையத்தின் தொடர் அழுத்தங்களால் ஒருவழியாக அனைத்து நாடுகளும் பெண்கள் அணியினரை ஒலிம்பிக்குக்கு அனுப்பியுள்ளது நிச்சயம் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 

அமெரிக்கா ஒருபடி மேலாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதோ எனத் தோன்றச் செய்கின்றது ஏனெனில் அமெரிக்கா சார்பாக 269 பெண்களும் 261 ஆண்களும் கலந்துக் கொண்டுள்ளனர். முதன்முறையாக ஆண்களை விட அதிகமான பெண்கள் அமெரிக்காவில் கலந்துக் கொண்டுள்ளனர். இதுவும் முக்கியச் சிறப்பான ஒன்றாகக் கருத முடிகின்றது. அத்தோடு இல்லாமல் அமெரிக்கா சார்பாக கொடியினைத் தாங்கி முன்நடந்து இருப்பவரு மரியல் சகுனிஸ் என்ற பெண்மணி தான். 

ஒரு சில இஸ்லாமிய நாடுகளைத் தவிர பல அரபு இஸ்லாமிய நாடுகளும், இதர இஸ்லாமிய நாடுகளும் பெண்கள் உடை விடயத்தில் எந்தவிதக் கட்டுபாடும் போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கால்பந்தாட்டத்தில் தலையில் முக்காடு இடுவதை தடை செய்தத்தால் இரான் பெண்கள் கால்பந்து அணியினர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. 

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் கனடா, இந்தியா அணிகள் உட்பட அனைத்து நாட்டு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள். முதன்முறையாக பெண்கள் அணியினை அனுப்பிய மூன்று நாடுகளுக்காக விளையாடவுள்ள பெண்களுக்கும், மற்றும் உலக நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள். 

ஆணுக்குப் பெண் சரிநிகர் என்பதை நிரூபிக்கும் தருணமாக இதனை நாம் பார்க்கலாம். மத்தியக் கிழக்கில் இறுகிப் பிடித்திருந்த இரும்புக் கரங்கள் பெண்களுக்காக சற்றே விலகத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. 

பழமைவாதிகளின் பிடியிலிருந்து உலகம் மெல்ல மாறத் தொடங்கியுள்ளது என்பதற்கான அற்குறியாக இதனைக் கருதலாமா ?



11 comments :

  1. நல்ல அலசல்.
    பெண் முன்னேற்றம் உதட்டளவில் இருந்தாலும் முன்பை விட பரவாயில்லை...
    விரைவில் இந்த நிலை மாறும்...முன்னேற்றமடையும்.

    நன்றி. (த.ம. 1)

    ReplyDelete
  2. //மத்தியக் கிழக்கில் இறுகிப் பிடித்திருந்த இரும்புக் கரங்கள் பெண்களுக்காக சற்றே விலகத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது//

    சகோ,இஸ்லாமிய இரும்புக் கரங்கள் படி படியாக பலமிழந்தே தீரும்.ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நாடுகளின் அணிவகுப்பில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தங்கள் பெண்களுக்கு பர்தாவோ,முகமூடியோ அணிவிக்காமல் சுதந்திரமாக அனுமதித்தன என்பது கவனிக்க தக்கது.ஒலிம்பிக்கில் பர்தாவுக்கு அனுமதி கொடுத்திட்டாங்க என்று ஆணாதிக்க தமிழ் இஸ்லாமிய மதவாதிகள் தமிழில் எழுதி எவ்வளவு தூரம் புல்லரித்தார்கள் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.தமிழ் இஸ்லாமிய மதவாதிகள் சவூதிஅரேபியா,அப்கானிஸ்தான்,ஈரான் நாட்டு தரத்திற்க்கு உயர்ந்திட்டாங்க.

    ReplyDelete
  3. வணக்கம் சகோ. நல்ல பதிவு நம்ம சானியா மிர்சா குட்ட பாவாடை தூக்கலாக இருந்ததற்கே துள்ளிக் குதித்த ஹஜரத்மார்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களோ? இருப்பினும் அனைத்து பெண் வீராங்கணைகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோ நல்ல பதிவு,

    எந்த காரணமாக் இருந்தாலும் மத்திய கிழக்கில் இருந்து சகோதரிகள் ஒலிம்பிக்கில அதன் விதிகளுக்கு ஏற்ப பங்கேற்பது பாராட்டுக்கு உரியது.சகோதரிகள் பதக்கம் வெல்வது இன்னும் பல‌ருக்கு ஊக்கம் கொடுத்து மாற்றங்களை துரிதப் படுத்தும்.வாழ்த்துக்கள்.
    ***********
    ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என வரயறுப்பது அப்பெண் அல்லது ம(ந்)தவாதியாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிவோம்.

    நாம் ம(ந்)த வாதி இல்லை என்றாலும் அவர்களுக்கு உதவுவதில் மிக்க ஆர்வம் காட்டுகிறோம்.மதவாதி ஆண்கள்க்கும் உடை கட்டுப்பாடு வேண்டும்.

    தமிழ் நாட்டுப் பெண்கள் அரபி ஃபர்தா அணியவேண்டும் எனில் மதவாத ஆண்களும் தாடி(என்ன அளவு?) வைத்து,அரபி அங்கி அணிய வலியுறுத்துகிறோம்.அல்லது மத வாதி பதிவுலக‌ சகோக்கள் ஒரு ஆண்கள் ஹலால் ஆடை வடிவமைப்பு போட்டி வைத்து முடிவு செய்தாலும் காஃபிர்கள் வரவேற்கிறோம்.காஃபிர்கள் போட்டிக்கு நீதிபதி.

    எப்படி மதவாத ஆண்கள் பெண்கள் உஅடை அணிவதை கட்டுப் படுத்துகிறார்களோ அதுபோல் காஃபிர்கள் மதவாத ஆண்கள் உடைய கட்டுப்படுத்தும் கடுமையான சட்டம் வர வேண்டும் .

    இதுதான் சட்டம்!!!!!!!!!!!

    "ஹலால் ஆடை அணியாத (ஆண்) மதவாதியை கண்ட இடத்தில் கைது செய்யுங்கள்.அவர்கள் வரும் வழியில் ஒளிந்து கண்காணியுங்கள்.முற்றுகை இட்டு பிடியுங்கள்.அவர் மன்னிப்பு கேட்டு அபராதம் (தொடர்ந்து)செலுத்த ஒப்புக் கொண்டால் விட்டு விடுங்கள்,காஃபிர்கள் மன்னிக்கும் குணம் உடையவர்கள்"(காஃபிர் சட்டம் 9/5)

    கற்பனை செய்யுங்கள்.ஹா ஹா ஹா!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  5. சிறப்பான அலசல்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

    ReplyDelete
  6. @ திண்டுக்கல் தனபாலன் - நிச்சயம் மாற்றம் என்பது மட்டுமே மாறதது .. உலகம் மாறிக் கொண்டே தான் இருக்கும் .. மத்தியக் கிழக்கில் வருகின்ற மாற்றம் டூ லேட் என நினைக்கின்றேன் ..

    ReplyDelete
  7. @ thequickfox - அவர்களுக்கு வெளி அழுத்தங்கள் அதிகம் வரத் தொடங்கிவிட்டன .. எண்ணெய் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மாற்றங்கள் எப்போதே வந்திருக்கும் .. இந்த எண்ணெய்க்காகவே மத்தியக் கிழக்கில் மாற்றங்களை புகுத்த மேற்குலகமும் மந்த நிலைக் காட்டுகின்றது .. அப்படி இருந்த போதும் மாற்றங்களுக்கான அழுத்தங்கள் வந்துக் கொண்டே இருக்கு ! இந்த மாற்றங்களை திசைத் திருப்பவே தீவிரவாதம், மதவாதம் என்ற பிரச்சாரங்கள் மதவெறி, தேசியவெறி என்ற பிரச்சாரங்கள் முடுக்கிவிடப் படுகின்றன ... !!!

    துனிசியா போன்ற அரபு நாடுகளில் இதுவரைக் காலமும் இருந்த அரசுகளால் தான் அவை மதவாதத்துக்குள் சென்றுவிடவில்லை .. ஆனால் அங்கு ஏற்பட்டு இருக்கும் மக்களாட்சியினை சுதந்திரமான முற்போக்காளர்களிடம் செல்லுமா அல்லது பிற்போக்காளர்களிடம் செல்லுமா என்பதை எல்லாம் காலம் தான் பதில் செல்லணும் ...

    ReplyDelete
  8. @ இனியவன் - துள்ளிக் குதித்தவர்களுக்கேத் தெரியும் .. எந்த மாற்றத்தையும் தடுக்க முடியாது என .. கோமோரோஸ் நாட்டின் அரபு வீராங்கனையும் சரி கத்தார் நாட்டின் நீச்சல் வீராங்கனையும் சரி அந்தந்த விளையாட்டுக்கு உரிய உடையில் தான் வலம் வந்தார்கள். துள்ளிக் குதிப்போர் கண்ணுக்கு அது கவர்ச்சியாகத் தெரிந்திருக்கும் , எமக்கோ அதில் ஒரு கவர்ச்சியும் தோன்றவில்லை .. விளையாடுவதற்கு உகந்த உடையாக மற்றுமே தோன்றியது. அதனை அணிந்த பெண்களே அதனை ஆட்சேபிக்கவும் இல்லை .

    http://iqbalselvan.tumblr.com/post/28175702184/arab-women-in-the-olympics-2012

    இந்த லிங்கில் சில படங்கள் உள்ளன.

    ReplyDelete
  9. @ சார்வாகன் - நிச்சயம் அவர்கள் பதக்கங்களோடு திரும்பி வர வேண்டும் அப்போது தான் எதிர்க்காலத்தில் இன்னும் நிறைய பெண்கள் வருவார்கள் ... !!! எப்படி ஆடை அணிவது என்பதை தீர்மானிப்பது அவரவர் கையில் மட்டுமே இருக்க வேண்டும். மதவாதிகளின் மூக்குநுழைதலையே நாம் எதிர்க்கின்றோம் ... !!!

    //தமிழ் நாட்டுப் பெண்கள் அரபி ஃபர்தா அணியவேண்டும் எனில் மதவாத ஆண்களும் தாடி(என்ன அளவு?) வைத்து,அரபி அங்கி அணிய வலியுறுத்துகிறோம்.//

    சரியாக சொன்னீர்கள் ... !!! அப்படி அணிந்தால் நாமும் வரவேற்போம் !!!

    //"ஹலால் ஆடை அணியாத (ஆண்) மதவாதியை கண்ட இடத்தில் கைது செய்யுங்கள்.அவர்கள் வரும் வழியில் ஒளிந்து கண்காணியுங்கள்.முற்றுகை இட்டு பிடியுங்கள்.அவர் மன்னிப்பு கேட்டு அபராதம் (தொடர்ந்து)செலுத்த ஒப்புக் கொண்டால் விட்டு விடுங்கள்,காஃபிர்கள் மன்னிக்கும் குணம் உடையவர்கள்"(காஃபிர் சட்டம் 9/5)//

    ஹா ஹா ஹா ..

    இது என்ன பூனையார் மத revelations ஆ !

    ReplyDelete
  10. வெட்டி பேசும் ... நீங்க எல்லாம்... அஸ்ஸாம் .. மங்களூர்ல் என்ன புடுங்க போறீங்க ???

    ReplyDelete
  11. சகோ சார்வாகனின் நீதி,நியாயம் கொண்ட சட்டத்தை நிறைவேற்றுவது மிக அவசியமானது.இஸ்லாமிய மதவாத ஆண்களால் தமிழ் நாட்டுப் பெண்கள் அரபி பர்தா அணியவேண்டும் என்று வற்புறுத்தபடுவது போல் ஆண்களும் தாடி வைத்து அரபி அங்கி அணிய வலியுறுத்தி சட்டமாக்கபட வேண்டும்.

    //துனிசியா போன்ற அரபு நாடுகளில் இதுவரைக் காலமும் இருந்த அரசுகளால் தான் அவை மதவாதத்துக்குள் சென்றுவிடவில்லை//
    துனிசியாவில் இருந்து மாணவர் விசாவில் வந்தவர்களை கண்டிருக்கிறேன். தப்பி தவறி கூட பர்தாவுடன் ஒருவரை கண்டதில்லை.காபிர் பெண்கள் மாதிரியே உடையணிந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் தான் கதைவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete


வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Spam - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். சுட்டிக்களைப் பகிர்வோர் GOO.GL பயன்படுத்தி சுருக்கிப் பகிரவும்.